தமிழ் மொழியில் 3 புராண நூல்கள் சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றப்படுகின்றன.
சேக்கிழாரின் பெரிய புராணம் இறைவனாரின் வலது கண்ணாக போற்றப்படுகிறது.
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாக போற்றப்படுகிறது.
கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக்கண்ணாக போற்றப்படுகிறது.
பெரிய புராணம்
63 நாயன்மார்கள் (சைவ அடியார்களின்) வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல் பெரிய புராணம்.
Periya puranam
This is a Tamil poetic account depicting the lives, divinity, devotion and miracles of the sixty-three Nayanars (Saints). It was compiled during the 12th century by Sekkizhar.
திருவிளையாடல் புராணம்
சிவபெருமான் தனது அடியவர்கள் மற்றும் தன்மீது பக்தி கொண்ட சிற்றுயிர்கள் மீது கருணை மிகுந்து தானே மண்ணுலகிற்கு வந்து அருள் செய்த வரலாறுகளை திருவிளையாடல் புராணம் அழகுற எடுத்து இயம்புகிறது.
தன்மீது பக்தி கொண்ட உயிரிகளிடத்தில் இறைவன் திருவிளையாடல்கள் நிகழ்த்தி தனது அன்பையும், கருணையும் அவர்களுக்கு அருளுவதை பற்றிக் கூறுவதே இந்நூலின் சிறப்பாகும்.
Thiruvilaiyadal Puranam
This is a collection of sixty-four 16th-century Shaivite devotional epic stories by Paranjothi Munivar. They describe the miracles of Lord Shiva on Earth in a number of disguises to test and grace his devotees.
கந்த புராணம்
இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.
Kanda puranam
This was composed by Kachiappa Sivachariar and it deals with the emergence and exploits of Lord Muruga / Kandan.
சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய
சைவ சமய நூல்களின் தொகுப்பாகும்.
இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக்
கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை
போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன.
சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில்,
சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.
இவை பன்னிரு திருமுறைகள் என்றும் அழைக்கப்பட்டன.
திருமுறை |
நூல் |
ஆசிரியர் |
---|---|---|
ஒன்று - மூன்று |
தேவாரம் |
திருஞான சம்பந்தர் |
நான்கு - ஆறு |
திரு நாவுக்கரசர் |
|
ஏழு |
சுந்தரர் |
|
எட்டு |
திருவாசகம், |
மாணிக்க வாசகர் |
ஒன்பது |
திருவிசைப்பா |
பலர் |
திருப் பல்லாண்டு |
சேத்தனார் |
|
பத்து |
திருமந்திரம் |
திருமூலர் |
பதினொன்று |
பல |
பலர் |
பன்னிரெண்டு |
பெரிய புராணம் |
சேக்கிழார் பெருமான் |
சைவம்-Abode of God Shiva
தேவாரம்-பன்னிரு திருமுறை
இனிது-ஆன்மிகம், சைவம்
தினமலர் சமயம், கோவில்
சிவபெருமான்
திகதி |
நிகழ்வு |
தேர் |
---|---|---|
15 Jan |
தைப்பொங்கல் |
|
25 Jan |
தைப்பூசம் |
|
1 Mar |
பரு பிள்ளையார் கொடி |
9 Mar |
8 Mar |
மஹா சிவராத்திரி |
|
10 Mar |
வல்வை சிவன் கொடி |
24 Mar |
9 Apr |
வல்வை அம்மன் கொடி |
22 Apr |
14 Apr |
சித்திரை வருடப்பிறப்பு |
|
14 Apr |
பரு அம்மன் கொடி |
22 Apr |
23 Apr |
சித்திரா பூரணை விரதம் |
|
20 May |
வற்றாப்பளை பொங்கல் |
|
23 May |
வைகாசி விசாகம் |
|
4 Aug |
ஆடி அமாவாசை |
|
4 Aug |
செல்வ சந்நிதி கொடி |
18 Aug |
10 Aug |
நெடியகாடு கொடி |
18 Aug |
9 Aug |
நல்லூர் கொடி |
1 Sep |
16 Aug |
வரலக்சுமி விரதம் |
|
17 Aug |
கிருஷ்ண ஜெயந்தி |
|
2 Sep |
வல்லிபுரத்தாழ்வார் கொடி |
|
7 Sep |
விநாயகர் சதுர்த்தி |
|
3 Oct |
நவராத்திரி விரதாரம்பம் |
|
9 Oct |
சரஸ்வதி பூஜாரம்பம் |
|
11 Oct |
சரஸ்வதி பூசை |
|
12 Oct |
விஜயதசமி |
|
31 Oct |
தீபாவளி |
|
1 Nov |
கேதாரகௌரி விரதம் |
|
2 Nov |
கந்தசட்டி விரதாரம்பம் |
|
7 Nov |
கந்தசட்டி விரதம் |
|
13 Nov |
கார்த்திகை விளக்கீடு வீடுகளில் |
|
திருவம்பாவை ஆரம்பம் |
நன்றி ஆத்தம ஞானம்.