தமிழ் நூல்கள் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இவையானவை
இலக்கண நூல்கள்
இலக்கிய நூல்கள்
இத்துடன் பாமர மக்கள் விரும்பும்
வரலாறுகள்
கதைகள்
இணைக்கப்பட்டுள்ளன.
உலகி்ல் பல பண்டய மொழிகள் இன்று மக்கள் பாவனையில் இல்லை.
தமிழ் மொழியை அழியவிடாமலும், காலத்துக்கேற்ப மாற்றி அமைத்து
இன்றும் பாவனையில் இருக்க உதவியோர்.
மன்னர்கள்
சான்றோர்
தமிழ் நாட்டவர்
வெளிநாட்டவர்
ஈழ தேசத்தவர்
உலகில் இன்றும் பாவனையில் உள்ள மொழிகளில் ஆகப் பழமை வாய்ந்தது என்று அனைவராலும் ஏற்க்கப்பட்டது.
தமிழ் இந்தியாவின் முதலாவது செம்மொழியாகும்.
செம்மொழி
தமிழில் (1 to 10^21) எண்களுக்கு தனிப் பெயர் உணடு. தமிழருக்கென தனி நீட்டல், நிறுத்தல், முகத்தல், கால அளவுகள் உண்டு.
எண்கள்,
பின்னங்கள்,
கால_அளவு,
நீட்டல்_அளவு,
நிறுத்தல்_அளவு,
முகத்தல்_அளவு,
பெய்தல்_அளவு
தமிழில் ஏழு பரம்பரைக்கு பெயர்களும், 23 ஆண்டுவிழா பெயர்களும் உண்டு.
பரம்பரை,
ஆறறிவு,
அறுசுவை,
நவரசம்,
நவரத்தினம்,
நவதானியம்,
ஆண்டு_விழா,
சுவையான ஆக்கங்கள்.
படித்ததில் பிடித்தது
பழமொழிகள் ஒரு சமுதாயத்தின்ஏ அனுபவக் குறிப்புகள் ஆகும்.
பழமொழிகள்
தவறாக விளங்கப்படும் பழமொழிகள்
கலை, இலக்கியம்
நாட்டுக்கூத்து
விளையாட்டு
கதை, கவிதை
விடுகதை
வாழ்க்கை முறை
குடிமனை
வீட்டு உபகரணம்
விவசாய உபகரணம்
ஈழத்து பழமொழிகள்
புண்ணுக்கு வலியோ மருந்துக்கு வலியோ
இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான அறிவுத் தொகுதிகள் (knowledge), மரபுரிமைகளை (archives)
ஆவணப்படுத்தி இலவசமாகத் கிடைக்கச் செய்யும் தொண்டு நிறுவனம்.
நூலக நிறுவனம்
இதன் செயற் திட்டங்களை
ஆவணகம் - Multimedia Archive Platform
நூலகம் - Digital Library
மூலம் நிறைவேற்றுகிறது.
உலக தமிழ் சங்கம், மதுரை
Youtube - Tamil Chinthanaiyalar Peravai
தமிழ் மின்பதிப்புகள்
சென்னை நூலகம்
Tamilnation
தொல்காப்பியம் இலக்கண நூல்களில் காலத்தால் முற்பட்டது. அதற்கு பின் வந்த இலக்கண நூல்கள் பலவும் தொல்காப்பியத்தை பின்பற்றி, விரித்தும், விளக்கியும், சுருக்கியும் எழுதப்பட்ட வழிநூல்களாகும். பின்வந்த நூல்கள் அந்த அந்த கால நடைமுறை மாற்றங்களையும், மொழி வழக்குகளையும் உள்வாங்கியுள்ளன.
இலக்கண நூல்களில் தொல்காப்பியமும், நன்னூலும் நன்கு அறியப்பட்டவை. தரவிறக்கம் செய்ய
நூற்றாண்டு   | நூல் |
---|---|
கி.மு. 5 | தொல்காப்பியம் |
கி.பி. 6 | சங்கயாப்பு |
கி.பி. 6 | அவிநயம் |
கி.பி. 6 | காக்கை-பாடினியம் |
கி.பி. 6 | பல்காயம் |
கி.பி. 6 | மயேச்சுரம் |
கி.பி. 7 | இறையனார் களவியல் |
கி.பி. 7 | சிறுகாக்கை-பாடினியம் |
கி.பி. 7 | நற்றத்தம் |
கி.பி. 8 | பன்னிருபடலம் |
கி.பி. 9 | இந்திரகாளியம் |
கி.பி. 9 | புறப்பொருள் வெண்பா மாலை |
கி.பி. 10 | தமிழ்நெறி விளக்கம் |
கி.பி. 10 | யாப்பருங்கலம் |
கி.பி. 10 | யாப்பருங்கலக் காரிகை |
கி.பி. 10 | அமுதசாகரம் |
கி.பி. 11 | வீரசோழியம் |
கி.பி. 12 | நேமிநாதம் |
கி.பி. 12 | வெண்பாப் பாட்டியல் |
கி.பி. 12 | தண்டியலங்காரம் |
கி.பி. 12 | நம்பியகப்பொருள் |
கி.பி. 13 | களவியல் காரிகை |
கி.பி. 13 | நன்னூல் |
கி.பி. 14 | நவனீதப் பாட்டியல் |
கி.பி. 14 | பன்னிரு பாட்டியல் |
கி.பி. 16 | வரையறுத்த பாட்டியல் |
கி.பி. 16 | சிதம்பரச் செய்யுட்கோவை |
கி.பி. 16 | மாறன்-அலங்காரம் |
கி.பி. 16 | மாறன் அகப்பொருள் |
கி.பி. 16 | பாப்பாவினம் |
கி.பி. 16 | சிதம்பரப் பாட்டியல் |
கி.பி. 17 | பிரயோக விவேகம் |
கி.பி. 17 | இலக்கணக் கொத்து |
கி.பி. 17 | தொன்னூல் விளக்கம் |
கி.பி. 17 | இலக்கண விளக்கம் |
கி.பி. 19 | பிரபந்த தீபம் |
கி.பி. 19 | பிரபந்தத் திரட்டு |
கி.பி. 19 | பிரபந்த மரபியல் |
கி.பி. 19 | குவலயானந்தம் 2 |
கி.பி. 19 | சுவாமிநாதம் |
கி.பி. 19 | அறுவகை இலக்கணம் |
கி.பி. 19 | வண்ணத்தியல்பு |
கி.பி. 19 | இரத்தினச் சுருக்கம் |
கி.பி. 19 | சந்திராலோகம் |
கி.பி. 19 | முத்துவீரியம் |
கி.பி. 19 | பிரபந்த தீபிகை |
கி.பி. 19 | குவலயானந்தம் 1 |
கி.பி. 19 | உவமான சங்கிரகம் |
கி.பி. 20 | விருத்தப் பாவியல் |
இலக்கிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு, பதினெண் மேல்கணக்கு, நீதி நூல்கள், பேரிலக்கியம், சிற்றிலக்கியம், பக்தி இலக்கியம் என வகுக்குக்கப்பட்டுள்ளன.
பதினெண் கீழ்க்கணக்கு
தமிழகத்தில் சங்கம், சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை குறைந்த அடிகளைக் கொண்டவை இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவை:
பதினெண் மேற்கணக்கு
தமிழகத்தில் சங்ககாலத்தில்பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை) பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை நிறைந்த அடிகளைக் கொண்டவை.
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.
பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, பட்டினப் பாலை, மலைபடுகடாம்.
நீதி நூல்கள்
தமிழ் இலக்கியத்தில் பல நீதிநூல்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. சங்க கால நீதி நூல்களுக்கு மேலாக, இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் பல நீதி நூல்கள் எழுதப்பட்டன.
சிற்றிலக்கியம்
காப்பியம் போல் கதைத் தொடர்ச்சி இல்லாமல், தனித்தனி எண்ணங்கள், தனித்தனி உணர்வுகள், தனித்தனிப் பாடல்கள் அமைந்து ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வருவது சிற்றிலக்கியம் என்பர்.
பேரிலக்கியம்
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன.
ஐம்பெருங் காப்பியங்கள்
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவையுடன் கம்பராமாயணம், பெருங்கதை என்பன போன்றவையும் பெருங்காப்பியங்கள்.
ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள்.
தமிழ் மக்களிடையே பரவலாக பாவனையில் இருந்த கதைகள். இவற்றில் சில தமிழ் இலக்கியத்தில் உள்ளதை வசன வடிவில் சுருக்கி எழுதப்பட்டவைகள். சில புராண உப கதைகள். வேறு சில ஒன்றையும் தழுவாத தனிப்பட்ட கதைகள ஆகும். இதில் சில கூத்துகளாக அரங்கேறின.
கண்ணகி கதை
நளன் தமயன்தி கதை
சத்தியவான் சாவித்திரி கதை
குசேலர் கதை
அரிச்சந்திரன் கதை
ஏழு பிள்ளை நல்லதங்காள்
உலகி்ல் பல பண்டய மொழிகள் இன்று மக்கள் பாவனையில் இல்லை. தமிழ் மொழியை அழியவிடாமலும், காலத்துக்கேற்ப மாற்றி அமைத்து இன்றும் பாவனையில் இருக்க உதவியோர்.
உலகி்ல் பல பண்டய மொழிகள் இன்று மக்கள் பாவனையில் இல்லை. தமிழ் மொழியை அழியவிடாமலும், காலத்துக்கேற்ப மாற்றி அமைத்து இன்றும் பாவனையில் இருக்க உதவியோர்.
எங்கோ பிறந்து தமிழ் மொழிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டு, அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்று தமிழ் புகழ் பாடியவர் பலர். இன்னும் சிலரோ, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் சிறந்த முறையில் தங்கள் பங்கீட்டினை அளித்துள்ளனர்.
ஆறுமுக நாவலர் (1822-1879)
நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907)
சுவாமி விபுலானந்தர் (1892-1949)
சுவாமி ஞானப்பிரகாசர் (1857-1947)
ந.சி.கந்தையாபிள்ளை (1893 - 1967)
நவாலியூர் சோமசுந்தர புலவர் (1878-1953)
தனிநாயக அடிகள் (1913-1980)
தமிழ் முதலாவது செம்மொழியாக இந்திய அரசால் 2004ம் ஆண்டு ஜூன் 6 அன்று அறிவிக்கப்பட்டது.
செம்மொழி எனும் தரத்தை வழங்கும் குழுவினர் மூன்று விதமான வரையறைகளை வகுத்துள்ளனர். 1,550 முதல் 2,000ஆண்டுகள் வரையிலான தொன்மையான நூல்களைப் பெற்றிருத்தல் வேண்டும், அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய நூல்கள் இருத்தல் வேண்டும். அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழிக் குடும்பத்திடமிருந்து கடன் பெறாததுமாக இருத்தல் வேண்டும்.
தமிழில் (1 to 10^21) எண்களுக்கு தனிப் பெயர் உணடு.
தமிழர் தமது பாவனைக்கு நீட்டல், நிறுத்தல், முகத்தல், கால அளவுகள் உண்டு.
எண்கள்,
பின்னங்கள்,
கால_அளவு,
நீட்டல்_அளவு,
நிறுத்தல்_அளவு,
முகத்தல்_அளவு,
பெய்தல்_அளவு
நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை = பரம்பரை
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும்.
1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு: மரம்.
2. உடல், வாய் (நாக்கால்) உணர்வது ஈரறிவு: மீன்.
3. உடல், வாய், மூக்கால் உணர்வது மூன்றறிவு: ஊர்வன எறும்பு.
4. உடல், வாய், மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு: பூச்சி இனங்கள்.
5. உடல், வாய், மூக்கு, கண், காதால் உணர்வது ஐந்தறிவு: விலங்குகள், பறவைகள்.
6. உடல், வாய், மூக்கு, கண், காது, மூளையால் உணர்வது ஆறறிவு: மனிதர்கள்
ஆறு சுவை. ஒவ்வொரு சுவைகளுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த சுவைகளில் எது அதிகமானாலும் எது
குறைந்தாலும் நமக்கு நோய் என்பது வரும்.
அறு சுவையாவது:
● துவர்ப்பு - இரத்தம் ஊறவும், இரத்த போக்கை நிறுத்தவும்
● இனிப்பு - தசை வளர
● புளிப்பு - கொழுப்பு வளர
● கார்ப்பு - ஜீரண சக்தியை கூட்ட
● கசப்பு - நரம்பு வலுப்படுத்த
● உவர்ப்பு - எலும்பு வலுப்படுத்த
ஒவ்வொரு சுவையுடைய பண்டங்களின் பெயர்கள்
தரவிறக்கம் செய்ய
நவரசம் என்பது பரத நாட்டியாத்தில் ஒன்பது விதமான பாவங்கள்:
● பயம்
● வீரம்
● இழிப்பு
● அற்புதம்
● இன்பம்
● அவலம்
● நகை
● கோபம்
● நடுநிலை
நவரத்தினம் என்பது ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும்:
● வைரம்
● புஷ்பராகம்
● முத்து
● பவளம்
● மாணிக்கம்
● வைடூரியம்
● மரகதம்
● கோமேதகம்
● நீலம்
இவை நவகிரகங்களுக்கு உகந்ததாகும். சுப நிகழ்ச்சிகள் பூஜை செய்வார்கள். அவை:
● கோதுமை - சூரியன்
● நெல் - சந்திரன்
● துவரை - செவ்வாய்
● பாசிப்பயறு - புதன்
● கொண்டைக்கடலை - குரு
● மொச்சை - சுக்கிரன்
● எள் - சனி
● உளுந்து - ராகு
● கொள்ளு - கேது
இரட்டை கிளவி - கட கட என சிரித்தான்.
(கடகடவை பிரத்த்தால் கட விற்க்கு அர்த்தம் இல்லை)
அடுக்கு தொடர் -
சிரித்து சிரித்து என்னை மயக்கி விட்டாள்.
சிரித்து ஒரு தமிழ் சொல் ஆகும்.
இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மைப் பட்டு நின்று வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது
அடுக்கு தொடர்
ஒரு சொல் இரண்டு, மூன்று, அல்லது நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்
பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன.
இவை நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.
அக்கம்பக்கம் பார்த்துப் பேசு
----------------------------
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல.
"பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க"
இதில் குறிக்கும் பதினாறு செல்வங்கள்:
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி ஆகியவை.
"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்"
பத்து சிறப்புகள் பறந்து போகும். அவை:
மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி
தாளாண்மை, காமம் ஆகும்.
"ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்"
ஆடம்பரத் தாய், பொறுப்பற்ற தந்தை, ஒழுக்கமற்ற மனைவி, துரோக உடன்பிறப்புகள், பிடிவாதப் பிள்ளைகள் என்ற ஐவரைப் பெற்றால் அரசனும் ஆண்டியாகி விடுவான்.
1 ஆண்டு – காகித விழா
2 ஆண்டு – பருத்தி விழா
3 ஆண்டு – தோல் விழா
4 ஆண்டு – மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு – மர விழா
6 ஆண்டு – சர்க்கரை / கற்கண்டு விழா
7 ஆண்டு – கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு – வெண்கல விழா
9 ஆண்டு – மண் கலச விழா
10 ஆண்டு – தகரம்
11 ஆண்டு – எஃகு விழா
12 ஆண்டு – லினன் விழா
13 ஆண்டு – பின்னல் விழா
14 ஆண்டு – தந்த விழா
15 ஆண்டு – படிக விழா
20 ஆண்டு – பீங்கான் விழா
25 ஆண்டு – வெள்ளி விழா
30 ஆண்டு – முத்து விழா
40 ஆண்டு – மாணிக்க விழா
50 ஆண்டு – பொன் விழா
60 ஆண்டு – வைர விழா
75 ஆண்டு – பவள விழா
100 ஆண்டு – நூற்றாண்டு விழா
60 மணி விழா என்பது. திருமணமான தம்பதியரில் ஆண் அறுபது வயதை அடையும் போது இரண்டாவது முறையாக திருமணம் நடத்தப்படுகிறது. இது "மணிவிழா" எனப்படும்.
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -?
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/1075200- இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/57511466188800000 0 – வெள்ளம்
1/57511466188800000 000 – நுண்மணல்
1/23238245302272000 00000 – தேர்த் துகள்.
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
7/5 ஓரை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்
4 காதம் – 1 யோசனை
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி