பெரியபுராணம்
63 நாயன்மார் வரலாறு

நாயன்மார்கள்

நாயன்மார்கள் என்பவர்கள் 3ம் நூற்றாண்டில் இருந்து 8ம் நூற்றாண்டு வரை பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் (SAINTS) ஆவார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலில் 60 நாயன்மார்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பின் நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டத் தொகை, திருவந்தாதியில் சுந்தரமூர்த்தி நாயனார் உட்பட மேலும் 3 நாயன்மார்களை சேர்த்து 63 நாயன்மார்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சேக்கிழார் பெருமானால் மேற்குறிப்பிட்ட நூல்களை மூலமாக கொண்டு, சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல் பெரிய புராணம்.

சமயக்குரவர் நால்வர்

சமயக்குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் சமயகுரவர் நால்வர் என்றும் அழைக்கப்படுவர்.
சிவாலயங்களின் பிரகாரத்தில் நால்வருக்கும் சிலைகளும், தனிச் சன்னதிகளும் அமைக்கப் பட்டுள்ளன. பொதுவாக இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலைகள் உள்ளன. இந்த வரிசையை மாற்றுவதில்லை.

பெரியபுராணம் தரவிறக்கம் செய்ய

பெரியபுராணம் - 63 நாயன்மார்கள் வரலாற்றை PDF வடிவில் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள DOWNLOAD ஐ அழுத்தவும்.

DOWNLOAD             நன்றி lankathamilnews.blogspot.com

27 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

வேள்வி வளர்க்கும் சீர்காழியில் கௌணியர் கோத்திரத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் திருஞானசம்பந்தர் அவதரித்தார். சமணம் தலைதூக்கிய காலம் இது சிவபாத இருதயரும் மனைவியாரும் சைவம் தழைக்க தவம் செய்த போது பகவதியார் வயிற்றில் ஞானசம்பந்தர் உதித்தார். திருவாதிரை நன்நாளில் அவதாரம் செய்தார்.
ஒருநாள் சிவபாத இருதயர் நீராடக் குழந்தையுடன் குளத்திற்குச் சென்றார். அங்கு குழந்தையைக் கரையில் விட்டுவிட்டு நீரில் மூழ்கினார். தகப்பனாரைக் காணாத குழந்தை பயந்து அழுதவண்ணம் தோணியப்பரின் கோபுரத்தைப் பார்த்து "அம்மையே அப்பா" என்று புலம்பியது.
சீர்காழிப் பெருமான் சிவகாம சுந்தரியுடன் குளக்கரையில் தோன்றியருளினார். அம்மையாரிடம் ஞானப்பாலைக் கொடுக்கும்படி கேட்க அம்மையார் சம்பந்தருக்கு ஞானப்பாலை ஊட்டினார். சம்பந்தர் ஞானம் பெற்றார். சிவபாத இருதயர் கரையேறி குழந்தையின் வாயில் பால் இருப்பதைக் கண்டு கோபம் கொண்டு தடியால் ஓங்கி யார் பால் கொடுத்தது என்று கேட்டார்.
ஞானசம்பந்தர் கோபுரத்தைக் காட்டி "தோடுடைய செவியன் விடை ஏறியோன்" எனும் பதிகத்தைப் பாடினார். மூன்று வயதான அவர் முதல் பாடிய பாட்டு இது. பின் திருக்கோலக்கா சென்றடைந்து கையால் தாளம் போட்டு "மடையில் வாளையும்" என்னும் பதிகத்தைப் பாடினார். அப்போது அவரது கையில் பெருமான் திருவருளால் செம்பொன் தாளம் கிடைத்தது. சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைத் தன் தோளிலேயே சுமந்து திருநணிப்பால் மதுரையம்பதி, தலைச்சங்காடு, திருவலம்புரம், திருச்சாய்க்காடு, திருப்பல்லவனீச்சுரம், திருவெண்காடு, திருமுல்லைவாயில், திருமயேந்திரி, திருக்குருக்காவூர் ஆகிய தலங்களைத் தரிசித்தார். திருநீலகண்டயாழ்பாணரும் அவர் மனைவி மதங்கதுளாமணியாரும் சீர்காழி வந்து சம்பந்தரைச் சந்தித்தனர். சீர்காழி கோவில் சென்று ஞானசம்பந்தர் விண்ணப்பத்தை ஏற்று திருநீலகண்டயாழ்ப்பாணர் யாழில் பாடினார்.
பின்னர் திருநீலகண்ட நாயனாருடன் கூடி சிதம்பரத்தை தெற்கு வாசலால் அடைந்தார். பின் திருவேட்களம் சென்று தரிசித்தார். ஒருநாள் சிதம்பரத்து அந்தணர்களெல்லாம் சிவகணங்களாக காட்டியளித்தனர். இதை யாழ்ப்பாணநாயனாருக்கும் காட்டினார். திருநீலகண்ட யாழ்பாணரது தலம் திருவெருக்கத்தம் புலியூர் அங்கு சில நாட்கள் தங்கினார். அங்கிருந்து திருமுதுகுன்றம். திருப்பொன்னாகடம், திருத்துங்கானைமாடம் தரிசித்துப் பின் திருவாராய்த்துறைக்குத் தன் தந்தையின் தோள்மீது ஏறாமல் நடந்து சென்றார்.
அங்கு நடந்து சென்ற போது ஈசன் திருவருளால் முத்துச்சிவிகை, முத்துச்சின்னம், முத்துக்குடை கிடைத்தது. அதன்பின் திருவராயத்துறை, திருப்பழுவூர், திருவியசமங்கை, திருப்புறம்பாயம், சண்டேசுர நாயனார் அவதரித்த திருச்சேஞ்சலூர், திருவோமாம்புலியூர், திருவாழ்கொளிப்புத்தூர், திருக்கடம்பூர், திருநாரையூர், திருக்கருப்பறியலூர் முதலான தலங்களை வணங்கி சீர்காழி திரும்பினார். ஏழுவயது நிரம்பிய அவருக்கு உபநயனம் என்னும் பூபால் சடங்கு நடந்தது.
மறை ஓதி வாழும் அந்நாளில் திருநாவுக்கரசர் அங்கு வந்தார். சம்பந்தர் அவரைப்போற்றி வரவேற்றார். பின் சம்பந்தர் திருக்கண்ணார் திருத்தலம் புள்ளிருக்கு வேலூர், திருநின்றயூர், திருநீழர், திருப்புங்கூர், திருப்பழமண்ணிப்படிக்கரை திருக்குறுக்கை, திருஅன்னியூர், திருப்பந்தனைநல்லூர், திருமணஞ்சேரி, திருவேள்விக்குழ திருக்கோலக்கா தரிசித்து திருப்பாச்சிலாச்சிராமம் சென்றார்.
அந்நாட்டின் மழநாட்டின் மன்னன் மகளொருத்தி முயலகன் என்னும் நோயால் பாதிக்கப்பட்டாள். சம்பந்தர் "துணிவளர் திங்கள்" எனும் பதிகம் பாடி நோயைத் தீர்த்தனர். அங்கிருந்து புறப்பட்டு. திருப்பைஞ்சலி, திருசங்கோய்மலை, திருச்செங்குன்றூர் வந்து அங்குள்ள அடியார்களின் குளிர்ச்சுரத்தை அவ்வினைக்கிவ்வினை என்ற திருப்பதிகம் பாடித் தீர்த்தார். அங்கிருந்து திருப்பாண்டிக்கொடிமுடி, திருக்கடுவூர், கொங்குநாடு கடந்தார். பின் திருச்செந்துறை, திரு எறும்பியூர், திருவலஞ்சுழி, திருப்பழையாறை, திருச்சக்திமுற்றம். தரிசித்து திருவாவடுதுறை சென்றார். அங்கு தந்தையார் வேள்விக்குரிய பொருள் இல்லை எனக் கேட்க, சம்பந்தர் பெருமானை வேண்டப் பூதமொன்று எடுக்க எடுக்க குறையாத பொற்கிளி வழங்கியது. அங்கிருந்து திருநல்லம், திருவழுந்தூர், திருத்துருத்தி, தருமபுரம் வந்தடைந்தார்.
அது யாழ்ப்பாணரது தாய் பிறந்த ஊர் அங்கே "மாதர் பிறைக்கண்னி யானை" எனும் பதிகம்பாடினார். அதன்பின் திருநல்லாறுக்கு வந்து திருநீலநக்க நாயனார் வாழும் ஊராகிய திருச்சாந்த மங்கையை அடைந்தார். அங்கிருந்து திருநாயைக்காரோணம், திருக்கீழ்வேளர், திருச்செய்காட்டைக்குடி வந்து அங்கு சிறுத் தொண்டரை சந்தித்தார். அங்கிருந்து திருமருகல் வந்து திருமணம் செய்ய இருந்த ஒரு வணிகன் பாம்பு தீண்டி இறந்ததைக் கேள்விப்பட்டு "சடையாய் எனுமால் சரன்நீ" எனுமால் பதிகம் பாடி உயிர்ப்பித்தார். பின் திருப்புகலூர் சென்று முருக நாயனாரைச் சந்தித்தார்.
அங்கு திருநாவுக்கரசரையும் சந்தித்தார். அங்கிருந்து திருவாரூர் சென்று திரும்பி மீண்டும் திருப்புகலூர் வந்து திருநாவுக்கரசரையும் முருக நாயனாரையும் சந்தித்தார். நாவரசரும். சம்பந்தரும் கூடி பல தலங்களைத் தரிசித்தனர். பின் திருக்கடவூர் வந்து குங்குலியக் கலய நாயனாரைச் சந்தித்தார். பின் திருவீழிமழலையில் தான் பிறந்த சீர்காழிக் காட்சியைக் கண்டார். அங்கிருந்து திருவாஞ்சியம். திருப்பெருவேளூர், திருச்சாந்தங்குடி, திருவெண்துறை தரிசித்து திருமறைக்காட்டினை அடைந்தார் திருமறைக்காட்டில் வேதங்களால் தொழப்பட்டுப் பூட்டப்பட்டு இருந்த கதவை திறந்தும் மூடியதுமான விரிவான வரலாற்றை திருநாவுக்கரசு நாயனார் வரலாற்றில் காணலாம்.
அங்கிருந்த காலத்தில் பாண்டிய நாட்டில் சைவம் குன்றி சமணம் ஓங்கியிருந்தது. பாண்டியன் மாதேவி மங்கயற்கரசியாரும் அவருடைய அமைச்சர் குலச்சிறையாரும் மட்டுமே சைவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருமே அரசனுக்குத் தெரியாது சைவமாக இருந்தனர். பாண்டியன் சமண வலையில் சிக்கிய விடயத்தை மங்கயற்கரசியார் குலச்சிறையார் அனுப்பிய ஏவலாளர் மூலம் சம்பந்தர் தெரிந்து கொண்டார். சம்மந்தர் நாவுக்கரசரைச் சோழ நாட்டிடுலயே விட்டுவிட்டு தான் மட்டும் பாண்டிநாடு புறப்பட்டார். போகும் போது தற்பாதுகாப்புக்காக “வேயுறு தோழி பங்கன்“ என்னும் திருப்பதிகம் பாடிப் புறப்பட்டார். மதுரை வந்தடைந்தார். குலச்சிறையார் சம்பந்தரை வரவேற்றார். அங்கிருந்து சொக்கநாதர் ஆலயம் சென்று திருப்பதிகங்கள் பாடினார்.
சமணர்கள் அரசனிடம் சென்று முறையிட்டனர். அரசன் அவர்கள் இங்குவரக் காரணம் என்ன என்று வினாவினார். அவர்கள் அச்சிறுவன் சமணரை வாதத்தில் வெல்ல வந்துள்ளானாம் என்றனர். பாண்டியன் சமணர்களின் யோசனைப்படி சம்மந்தரை விரட்ட மடத்திற்கு தீவைப்பித்தான். சம்பந்தர் “பையவே சென்று பாண்டியற்காகவே" என்று பதிகம் பாடினார். அவ்வெப்பு பாண்டியனுக்கு வெப்பு நோயாக மாறியது. சமணர்களாலும், வைத்தியர்களாலும் மாற்ற முடியவில்லை. பாண்டியன் சமணரை விரட்டினான். மங்கயற்கரசியாரும், குலச்சிறையாரும் சம்பந்தரிடம் போய் வணங்கி அவரை வரவேற்று மாளிக்கு அழைத்து வந்தனர்.
சம்பந்தரும், சமணரும் நோயைத் தீர்க்க முயற்சித்தனர். சமணர் இடப்பக்கத்தையும் சம்பந்தர் வலப்பக்கத்தையும் ஏற்றனர். சமணர்கள் இடப்பக்கத்தை மயிர்ப்பலிகளால் தடவினர். வலப்பக்கம் நோய் குறைந்து இடப்பக்கம் கூடியது. அரசன் சமரை விரட்டினார். சம்பந்தர் இடப்பக்கத்தையும் குணப்படுத்தினார். சமணர்கள். சம்பந்தரை வாதுக்கழைத்தனர் அரசன் முன்நிலையில் அவர்கள் இருவரும் ஏடுகளை எழுதி தீயில் இட்டனர். சமணர்களது எரிந்து சாம்பலானது. சம்பந்தரது மேலும் பசுமையாக காட்சியளித்தது. பின்னர் சமணர்களின் வேண்டுகாளின்படி ஏடுகளை வைகையாற்றில் விடப்பட்டது. சமணர்களது ஏடு ஓடிப்போய் கடலில் கரைந்தது.
சம்பந்தர் “வாழ்க அந்தணர் வானவராயினும்“ என்று பாடி அவ் ஏட்டை ஆற்றில் விட்டார். ஏடு எதிர்த்து நின்று வந்தனும் ஓங்குக என்று அருளிச் செய்து. கூன் பாண்டியனாயிருந்தவர் நெடுமாறன் ஆனார். 3000 சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர். சம்பந்தர் பல்லக்கிலேறி “கோவில் போய் விடலால் வாயிலாய்" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். அங்கிருந்து திருப்பரங்குன்றம், திருஆப்பனூர், திருப்புத்தூர், திருக்குற்றாலம், இலங்கையிலுள்ள சில தலங்கள் ஆகியவற்றை வணங்கி திருமண மேற்குடியில் தங்கினார்.
பின் திருக்கொள்ளம்பூர் சென்று பின் திருத்தெளிச்சேரி, போதிமங்கையை அடைந்தார். அங்கு பௌத்த மதத்தை வாதிட்டு வென்று சம்பந்தர் திருநீறு அளிக்க பௌத்தர்கள் அணிந்தனர். பின்னர் திருக்கடவூர் திருப்பூந்துருத்தி சென்றனர். அங்கு சம்பந்தருக்குத் தெரியாமல் நாவுக்கரசர் சம்பந்தரது பல்லக்கைத் தூக்கினார். பின் திருவையார், திருப்பழனம் போன்ற தலங்களை வணங்கி சீா்காழி வந்தார்.
திருக்கோவில் சென்று உற்றுமை சேர்வது மெய்வினையே" என்ற இமயத்திருப்பதிகத்தைப் பாடினார். பின் தில்லை, திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவதிகை, திருவாமாத்தூர், திருக்கோவிலூர், திருவெண்ணாமலை சென்றார். “உண்ணாமுலை என்னும் பதிகம் பாடினார். "பூவார் மலர் கொண்டடியார்" என்னும் பதிகம் பாடினார். அதன்பின் தொண்டைநாட்டுத் திருப்பதியான திருவோத்தூர் சென்றார். அங்கு ஆண்பனைகளை பெண்பனையாக்கி குலை குலையாக காய்க்க வைத்தார். அங்கிருந்து திருமாகறல் திருக்குறங்கனில் முட்டம் முடித்துக் காஞ்சிபுரம் வந்து பின்னர் திருமாற்பேறு, திருவல்லம், திருவிற்கோலம், தக்கோலம் சென்று திருவாலக்காட்டை அடைந்தார். அப்பகுதியில் காரைக்காலம்மையார் தலையால் நடந்து போவதைக்கண்டு அங்கு தான் காலால் நடக்கபயந்து அப்பகுதியின் அருகே தங்கினார்.
அப்போது சிவன் கனவில் தோன்றி நம்மைப் பாடமறந்தாயோ என்று கேட்க "துஞ்சுவாரும் தொழுவிப்பாரும்" என்ற திருப்பதிகம் பாடினார். அங்கிருந்து திருப்பாசச்சுர், திருவெண்பாக்கம் வணங்கி அவர் மனதில் கண்ணப்ப நாயனார் தோன்ற திருக்காளத்தி மலையை வணங்கப் புறப்பட்டார். பாம்பும், யானையும் வணங்கிய காளத்தி மனயை வணங்கி அங்கிருந்தபடியே திருக்கயிலை,. திருக்கேதாரம். இந்திரநிலபர்வதம் முதலிய திருப்பதிகளை பாடிமகிழ்ந்தார். அங்கிருந்து திருவேற்காடு, திருவலிதாயம் வணங்கி திருவொற்றியூரை அடைந்தார்.
அங்கு தங்கியிருக்கும் காலம் திருமயிலாப்பூரில் சிவனேசர் என்னும் வணிகர் சம்மந்தரின் புகழ்களைக் கேட்டு அவரது மகள் பூம்பாவையை சம்பந்தருக்குத் திருமணஞ் செய்ய நினைத்திருந்தார். கன்னிப்பருவமான பூம்பாவை முல்லைமர் பாம்பால் தீண்டி இறந்தார். அவ்வுடலை எரித்து எலும்பையும், சாம்பனையும் ஒரு புதுக்குடத்தில் வைத்து சிவ நேயர் கன்னிமாடத்தில் வைத்தார். பின்னர் திருவொற்றியூரிலுள்ள சம்பந்தரை அழைத்து நிகழ்ந்ததைச் சொன்னார். சம்பந்தர் திருமயிலைக் கோயிலை வணங்கிநிற்க பூம்பாவையின் சாம்பல் குடத்தை சிவனேயர் கொண்டுவந்தார்.
சம்பந்தர் “மட்டிட்ட புன்னை“ என்ற திருப்பதிகம் பாடி பூம்பாவையை உயிர்த்தெழப் பண்ணினார். சிவனயர் சம்பந்தரை மணம் முடிக்கக் கேட்க சம்பந்தர் இவள் எனக்கு மகளாவாள்." என்று சொல்லி மறுத்தார். பூம்பாவை கன்னிமாடத்திலிருந்து இறைவனடி சேர்ந்தார். சம்பந்தர் அங்கிருந்து திருவான்மியூர், திருவிடைச்சுரம், திருக்கழுக்குன்றம், அச்சிறுபாங்கம், பனங்காட்டூர் சென்று தில்லை வந்து சீர்காழி சேர்ந்தார். சிவபாத இருதயர் சம்பந்தருக்குத் திருமணம் செய்ய விரும்பினார்.
திருப்பெருமணநல்லூரில் உள்ள நம்பி என்பவர் மகளைத் திருநீலநக்க நாயனார் புரோகிதராக நின்று திருமணச் சடங்குகள் திருப்பெருமணநல்லூரில் நடந்தன. அங்கு இறைவன் ஜோதி வடிவாகத் தோன்றி அவ் ஜோதியில் மக்களையும். அங்குவந்தவர்களையும் பிரவேசிக்கப் பண்ணினார். அப்போது ஞானசம்பந்தர் “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்னும் திருப்பதிகத்தைப்பாடி பிரவேசித்தனர்.
திருநீலநக்கர், முருகர், சிவபாதவிருதயர், நம்பியாண்டார் நம்பிகள், திருநீலகண்டநாயனார் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் யாவரும் சிவபதம் அடைந்தனர். பிரமனும், தேவர்களும், முனிவர்களும் கண்டு தம் துயரம் ஒழியப் போற்றி நின்றனர்.

20 திருநாவுக்கரசு நாயனார்

திருநாவுக்கரசு என்றும் சிவத்தொண்டு வளர வாகீசர் என்றும் வாய்மை மிக்கத் திருப் பெயராகும். திருமுனைப்பாடி நாட்டில் பொன்னையாற்றங்கரையில் திருவாமூர் என்ற ஊரில் நல்ல அறங்காக்கும் பெருங்குடி மக்களே வாழ்த்தனர். அங்கு வேளாளர் குலத்தில் தருக்கையர் தடியில் தோன்றியவர் புகழனார் மாதினியம்மை என்ற மங்கையை மணந்து திலகவதியார் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அதன்பின் சிலகாலம் சென்று மருள்நீக்கியார் தோன்றினார். முற்பிறப்பின் பயனால் அவருக்கு சடங்குகள் செய்து கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்றார். திலகவதியாருக்கும் பண்ணிரண்டு வயதானதும் சிவனடியாரும் படைத்தொழில் செய்பவருமான கலிப்பகையார் என்பவர் மனம் பேசி வந்தனர். இரு பகுதியினரும் சம்மதித்தனர். அப்போது தென்னாட்டை வடநாட்டு அரசர்கள் படையெடுத்து வந்து தாக்கினர். இதனால் கலிப்பகையர் என்பவரை போர் செய்ய வேண்டியதாயிற்று. இதற்திடையில் திலகவதியாருடைய தந்தை நோயினால் இறந்தார். கணவனைப் பிரிந்த மாதினியாரும் தடித்து இறந்தார். கலிப்பகையாரும் போரில் வீரமரணம் அடைத்தார். திலகவதியார் உயிர்நீக்க எண்ணினார். மருள் நீக்கியர் அவரது காலில் விழுந்தார். திலகவதியார் தம்பிக்காக வாழ நினைத்தார். மருள்நீக்கியார் வளர்ந்தார்.
இவ்வுலகு நிலையில்லாதது என எண்ணி அறச்சாலைகள் தண்ணீர்ப்பந்தல், சோலைகள், குளங்கள் அமைத்தார். ஈகையில் சிறந்தார். சிவபெருமானது திருவருள் இல்லாததால் சமணசமயத்தை தழுவினார். திலகவதியார் வீரட்டானம் சென்று திருப்பணிகளைச் செய்தார். தம்பி மருள்நீக்கியாரை நினைத்து மனஉருகிக் கொண்டிருந்தார். சிவபெருமான் கனவில் தோன்றி அவனைச் சூலை தோய் கொடுத்து ஆட்கொள்வோம் என்று கூறினார். முன்பிறப்பின் தவத்தால் மருள்நீக்கியாருக்கு சூலைநோய் ஏற்பட்டது.
சமணர்களால் அதை மாற்ற முடியாமல் போக மருள்நீக்கியார் தமது தமக்கை திலகவதியாராலேயே நோயைத்தீர்க்க முடியும் என்று முடிவுக்கு வந்தார். யாரும் அறியாமல் சமையற்காரன் மூலமாக திலகவதியாருக்கு அறிவித்தார். திலகவதியார் நோய் தீர்ப்பது எப்படியென்று அவருக்கே தெரியும் என்றார். இதைக் கேட்ட மருள்நீக்கியார் சமணருக்கு தெரியாமல் திலகவதியாரிடம் சென்டி வணங்கி வீரட்டானர் சந்நிதியில் போய் “கூற்றாயினவாறு விலக்ககலீர்“ என்று தொடங்கும் பதிகத்தை (ஏழு பிறப்புகளிலும் துன்பத்தை நீக்கும்) பாடினார். சூலைநோய் நீங்கி ஞானம் பெற்றார். மருள்நீக்கியார்பாடிய இப்பாடல் பத்தையும் கேட்ட இறைவன் சரியாக மருள்நீக்கியாருக்கு திருநாவுக்கரசர் என்ற பெயரைச் சூட்டினார்.
திருநாவுக்கரசர் சிவதொண்டன் உழவாரப்பணியை ஏற்று ஆயுதத்தை ஏந்தினார். சமணர்கள் அவரைப் பழிவாங்கத் துடித்து திருவதிகை சென்று நாவுக்கரசரை கூட்டிச்செல்ல முயன்றனர். அதற்கு திருநாவுக்கரசர் “தாமார்க்கும் குடியல்லோம்" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். சமணர்கள் நாவுக்கரசரை அழைத்து வந்து நீற்றறையில் தள்ளினர். நாவுக்கரசர் “மாசில் வீணையும்" என்ற திருப்பதிகத்தைப் பாடினார். நீற்றறை குளிர்ந்த சோலை போல இருந்தது. ஏழு நாட்கள் கழித்துப் பின் நஞ்சைக் கொடுத்துப் பார்த்தனர். அப்போதும் பாதிக்கவில்லை பின்னர் மதம் பிடித்த யானையை மிதிக்கும்படி ஏவினர். திருநாவுக்கரசர் “சுண்ண வெண்சந்தனச் சாந்து" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். யானை அவரைச் சுற்றிவந்து வணங்கி நின்றது.
பின்னர் கல்லில் கட்டிக் கடலில் வீசினர். திருநாவுக்கரசர் “சொற்றுணை வேதியன்“ என்று பாடத்தொடங்கி "நற்றுணையாவது நமச்சிவாயவே என்று முடித்தார். கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்து நாவுக்கரசர் கல்லின்மீது தோன்ற கல் தெப்பமாக மிதந்து வருணன் திருப்பாதிரிப் புலியூரில் கொண்டு சேர்த்தார். அங்கே “ஈன்றாளுமாய் எனக்குத் தந்தையுமாகி“ எனும் பதிகம் பாடினார் அங்கிருந்து திருவதிகை புறப்பட்டார். அங்கிருந்து திருவெண்ணை நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் சென்று திருப்பதிகங்கள் பாடி அங்கிருந்து திருத்துங்கானைமாடம் சென்று திருத்தோள்களில் சிவபூதத்தால் தல முத்திரையும் காலை முத்திரையும் பொறிக்கப் பெற்றார்.
பின் சில தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார். அங்கு திருவிருத்தமொழி, திருதேரிசைத் திருப்பதிகம், பந்தனைப் பாடமாட்டேன், அம்மைப்பாலிக்கும் என்னும் பதிகங்களைப் பாடினார். பின் திருவேட்களம், திருக்கழிப்பாலை தரிசித்து மீண்டும் தில்லைக்கு வந்து “வண்ணமும் வடிவும்" எனும் திருக்குறுக்கையையும் “கங்கையைப் பாகம் வைத்தார்“ என்ற திருத்தாண்டகமும் பாடினார். “அரியானை" எனத் தொடங்கும் பாடலை பாடினார்.
அதன்பின் திருநாரையூர் சென்று சீர்காழி சென்றார். இதைனைக் கேட்டதிந்த திருஞான சம்பந்தர் எதிர் சென்று சந்தித்தார். ஞானசம்பந்தர் தன் கைகளால் நாவுக்கரசரைப் கைபற்றி “அப்பரே" எனக் கூதினார். நாவுக்கரசர் “அடியேன்“ என்றார்.
இருவரும் கூடி சீா்காழி அண்ணாலை வணங்கி நாவுக்கரசர் “பார்கொண்டு முடி" எனத் தொடங்கும் பதிகம் பாடினார். சோழநாட்டுத் தலங்கள் பலவற்றை இருவரும் தரிசித்து திருக்கோலக்காவில் ஞானசம்பந்தர் விடைபெற்றார். அப்பர் திருவாவடு துறையில் வீற்றிருக்கும் இறைவரை திருத்தாண்டகம் பாடி பின் நாகேச்சுரத்தில் திருநேரிசை, திருத்தாண்டகம் பாடினர். சில தலங்களை தரிசித்தபின் அப்பூதியடிகள் ஊரான திங்களுரை அடைந்தார்.
அங்கு அப்புதியடிகள் வீட்டிற்குச் சென்றார். அப்பூதியடிகள் திருவமுது சமைத்துவிட்டு மூத்தமகனான திருநாவுக்கரசனை இலை பறிக்க அனுப்பினார். அங்குபாம்பு தீண்ட அதைப்பொருட்படுத்தாமல் திருநாவுக்கரசன் இலையை வீடு கொண்டுவந்து சேர்த்துவிட்டு மயங்கிவிட்டான். மகன் இறந்த செய்தியைச் சொல்லாமல் நாவுக்கரசருக்கு விருந்து பரிமாற முயன்ற போது நாவுக்கரசர் அதை உணர்ந்து “ஒன்று கோலாம்" எனும் திருப்பதிகம் பாடி மகனை உயிர் பெறச் செய்தார்.
ஞானசம்பந்தப் பெருமான் சீர்காழியிலிருந்து பலதலங்களைத் தரிசித்துவிட்டு திருப்புகலூரில் தங்கியிருந்தார். நாவுக்கரசர் அங்கு வருவதைக் கேள்விப்பட்டு அங்கு நின்று சந்தித்தனர். பின் பலதலங்களை தரிசித்து திருமறைக்காட்டை அடைந்தனர். அங்குள்ள திருக்கோவில் நீண்டகாலமாகத் தாளிடப்பட்டிருந்தது. அதனை அப்பர் சுவாமி “பன்னிநேர் மொழி" என்னும் திருப்பதிகத்தைப் பாடி கதவைத் திறப்பித்தார். "சதுரம் மறை தான“ என்னும் பாடலைச் சம்பந்தர் பாடி மூடிடச் செய்தார். நாவுக்கரசர் பல தலங்களையும் சென்று தரிசித்து காவிரிக்கரையை அடைந்து பல தலங்களையும் வழிபட்டு திருப்பஞ்சலிக்கு போகும்போது பசியினால் களைத்தபோது சிவபெருமான் குளிர்ந்த சோலையை உண்டாக்கி பிராமன வடிவுடன் வந்து கட்டமுது கொடுத்தார்.
பின்னர் பலதலங்களையும் தரிசித்து காச்தாதரை வணங்கி கயிலைக்குப் புறப்பட்டார். கடினமான மேடு பள்ளங்களில் தடந்து நாவுக்கரசரின் கால்கள் தேய்ந்து. தவழ்ந்து தவழ்த்து கைகள் தேய்த்து இறுதியில் மார்பால் தவழ்ந்து மார்பெலும்புகளும் தேய்ந்து போகும் போது இறைவன் முனிவர் வேடம் பூண்டு ஒரு தளிர்பொய்கை உண்டாக்கி நாவுக்கரசர் முன்வந்து நின்றார். அவரை எங்கே போகிறாய் என்று கேட்ட அவரும் கயிலைக்கு எனக் கூற. அது தேவர்களாலும் முடியாது எனச்சொல்ல நாவுக்கரசர் என் உயிர் நாயகனைத் தரிசியாமல் போகமாட்டேன் என்றார்.
உடனே சரியாக ஓங்கு புகழ் நாவரசரே எழுந்திரு" என்று ஒலித்தார். உடனே தாவரசரது உடல் பொலிந்தன நாவுக்கரசர் கயிலைக்காட்சி காண விரும்புவதாகக் கூற மீண்டும் அசரியாக "அடியவரே இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் போய் எழுந்திரும் அங்கு கயிலையில் எழுந்திருக்கும் காட்சியைக் காண்பாய்" என்றது.
நாவுக்கரசர் “வெற்றாகி விண்ணா" எனும் திருப்பதிகத்தைப்பாடி பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் உள்ள ஒரு தளத்தில் எழுந்தார். திருக்கோயிலை அடைந்தார். அக்கோயில் கயிலை மலையாகக் காட்சி தந்தது. சிறிது நேரத்தில் இறைவன் அக்கோலத்தை மறைத்தார் நாவுக்கரசர் திருத்தொண்டு செய்துவந்தார். அப்போது ஞானசம்பந்தர் மதுரை சென்று சமணரை வென்று சோழநாடு திரும்பினார். சம்பந்தர் பல்லக்கை நாவுக்கரசர் சுமக்கவிரும்பி தமது உருவத்தை மறைத்து பல்லக்கு சுமப்பவர்களோடு கூடி பல்லக்கு சுமந்தார்.
பின் சம்பந்தருக்கு தெரியவந்ததது. பின் நாவுக்கரசர் திருப்புகலூரை அடைந்து உழவாரப்பணி செய்தார். இறைவன் இப்பணியை உலகிற்கு உணரச் செய்யும் பொருட்டு உழவாரம் நுழையும் இடமெல்லாம் பொன்னும் நவரத்தினங்களும் வெளிவரும்படி செய்தார். அவற்றைக் கண்ட நாயனார் அவற்றை எடுத்து பூங்கமலவாயிலில் எறிந்தார். பெண்ணாசையம் இல்லையென்று உணர்த்த தேவ அரம்பையர்களை அவர் முன்னால் நிற்கப்பண்ணினார். நாவுக்கரசர் அதையும் பொருட்படுத்தவில்லை.
திருப்புகலூரில் அவரது காலத்தைக் கழித்தார். ஞானவடிவாகி இறைவனின் சேவடிக்கீழ் திருநாவுக்கரசர் அமர்ந்தார்.

63 சுந்தரமூர்த்தி நாயனார். (நம்பியாரூரர்)

திருமுனைப்பாண்டி நாட்டில் திருநாவலூர் என்ற தலத்தில் சிவாச்சாரியார் சடையனார் அவருக்கும் இசைஞானியாருக்கும் ஒரு இளம் கதிர் போன்ற குழந்தை பிறந்தது. அதற்கு நம்பியாரூரர் எனப் பெயர் இட்டனர். அக்குழந்தை தெருவில் சிறு தேர் ஓட்டி விளையாடும் போது நரசிங்க முனையார் என்ற மன்னர் கண்டு சடையனார் அனுமதியோடு அக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார்.
நம்பியார் அரசரிடம் வளர்ந்தாலும் சைவ நெறிப்படி வளர்ந்து வந்தார். நம்பியாரூரர் மணப்பருவம் அடைந்தபின் சடங்கவி சிவாச்சாரியாருடைய மகளுக்கு மணம் முடிக்க முடிவு செய்தனர். திருமணத்திந்தரிய சடங்குகள் தொடங்கின.
அப்போது ஒரு முதியவர் வேடம் தாங்கி சிவபெருமான் அங்கு வந்தார். அவர் சபையில் உள்ளவர்களை நோக்கி இவருக்கும் எனக்கும் ஒரு வழக்கு உண்டு என்றார். நம்பி அவ் வழக்கு என்ன என்று கேட்க, நீ எனது அடிமை என்றும் ஒரு ஓலையைக் காட்டி இதை உனது பாட்டன் எழுதிக் கொடுத்துள்ளார் என்றும் சொன்னார்.
இதனைக் கேட்ட அவர்கள் பிராமணனுக்கு பிராமணன் எப்படி அடிமையாக முடியும் என்று கேலி செய்து அதற்கு ஆதாரம் இருக்கா என்று கேட்டனர். அவ் அந்தணர் கையில் ஏட்டைக்காட்ட அதை நம்பி வாங்கி உனக்குப் பித்தா" என்று கேட்டு ஏட்டைக் கிழித்து விட்டார். சபையோர் அம்முதியோரை நோக்கி எங்கேயுள்ளாய் என்று கேட்க பக்கத்தினுள்ள திருவெண்ணை நல்லூர் என்று கூறினார்.
அங்கு போனார்கள். அங்கு மூல ஓலையைக் காட்டும்படி கேட்க சிவபெருமானாகிய வயோதிபர் ஓலையைக் காட்டினார். சபையார் ஒப்பு கொண்டனர். அதன் பின் அம் முதியோர் எங்கு தங்கினார் என்று கேட்க அம்முதியோர் திருவருட்துறை என்ற திருக்கோயிள் புகுந்தார். அதைத் தொடர்ந்து நம்பியாரூரரும் கோயிள் புகுந்தார். அங்கு அக்கிழப் பிராமண உருவம் மறைந்தது. அதன் பின் சிவபெருமான் வானில் தோன்றி நம்பியே நீ முற்பிறப்பில் கயிலைமலையில் எனக்குத் தொண்டு செய்தவன். நீ மங்கையர் மேல் விருப்பம் வைத்தாய் அதனால் இப்பிறவி எடுத்தாய். இப்போது உன் விருப்பப்படி மன்னனாக வாழ்வு தொடராமல் தடுத்தாட் கொண்டேன். என்றார். அத்துடன் மணப்பந்தலில் பித்தா என்று பேசியதை வைத்து தேவாரம் பாடும்படி கேட்டார். அதன்படி “பித்தாப் பிறைசூடி" என்னும் திருப்பதிகம் பாடினார்.
திருவாரூர் சென்றடைந்த நம்பி திருவாரூர் பெருமானை நோக்கி உடலம் உருக்கும் தேவாரம் பாடினார். இதனால் திருவாரூர் பெருமான் சுந்தரரை நோக்கி எம்மையே உனக்கு தோழனாக தந்தோம் என்றும் "உனது திருமணக் கோலத்தில் ஆட்கொண்டோம் "என்றும் இளமையாக உலகில் இருப்பாயாக" என்றும் கூறினார். இதனால் தம்பிரான் தோழர் எனப் பெயர் பெற்றார்.
சுந்தரர் திருவாரூருக்கு வருமுன் கமலினியார் திருவாரூரில் கமலினியர் குலத்தில் பிறந்து வாழ்ந்தார். அவர் ஒரு நாள் திருவாரூர்ப் பெருமானை தோழியருடன் வணங்கவரும் போது சுந்தரரும் அங்கு வந்து இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப இறைவன் அடியார்கள் கனவில் தோன்றி இருவரையும் மணம் முடித்து வைத்தார்.
திருத்தொண்டர் தொகையை திருவாய்மலர்ந்த சுந்தரர் திருவாரூர்ப் பெருமானை முப்பொழுதும் தரிசித்து அங்கு தங்கியிருந்தார். தண்டையூர்கிழார் என்னும் சிவபக்தர் சுந்தரமூர்த்திநாயனாருக்கு வேண்டிய நெல், பால், காய்கறி வகையினை கொடுத்துவந்தார். நாட்டில் மழை பெய்யாததால் அம்மானியத்தைக் கொடுக்க இயலாது வருந்தி உறங்கினார். பெருமான் நெல் மலையைக் கொடுத்தார். கிழார் அதை எப்படி எடுத்துச் செல்வது எனத் தெரியாமல் சுந்தரரிடம் கூற, சுந்தரர் அங்கு வந்து பார்த்து விட்டு இதனைப் பரவையாரது மாளிகைக்குச் சேர்க்க இறைவனையே ஆட்கட்போம் என்று சொல்லி அருகிலுள்ள திருக்கோளிலி என்றும் கோவிலை அடைந்து "நீள நினைந்தடியேன்" எனும் பதிகத்தைப் பாடி பெருமானிடம் முறையிட்டார்.
நெல் மூடைகள் இரவு பூதங்களால் கொண்டுவரப்பட்டன. பரவையார் சுந்தரரை வணங்கினார். சுந்தரர் திருவாரூரில் இருக்கும் பொழுது கோட்புலி நாயனார் தனது ஊராகிய திருநாட்டியத்தூருக்கு வரும்படி கேட்க சுந்தரர் அங்கு சென்றார். அங்கு கோட்புலிநாயனார் மிகவும் உபசரித்து தமது பெண்களாகிய சிங்கடியார், வனப்பகையார் என்பவர்களை அவரது அடிமைகளாக ஏற்க வேண்டும் என்று பணித்தார். சுந்தரர் அவர்களை மக்களாக ஏற்றார். அங்கிருந்து புறப்பட்டு திருவலிவலம் சென்று திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் "பாட்டுகந்தர் எனும் பாடலைப் பாடி திருவாரூர் திரும்பியிருந்தார்.
ஒவ்வொரு பங்குனி உத்திரத்தன்றும் பரவையார் அடியார்களுக்குப் பொருள் கொடுப்பது வழக்கம். அந்தத் திருநாள் நெருங்கியது பொருள் இல்லை. சுந்தரர் திருப்புகளூர் பெருமானை வேண்டி பதிகம் பாடினார் எழுந்துபார்க்க செங்கற்கள் செம் பொன் கட்டிகளாக மாறியிருந்தது. அதைக் கொண்டு பங்குனி உத்தரப் பொருட்கள் செய்யப்பட்டன. பின் திருவீழிமலை, திருவாஞ்சியம், அரசிற்கரைப்புத்தூர் சென்று திருப்புத்தூரில் புகழ்ந்துணை நாயனாருக்கு பெருமான் படிக்காசு கொடுத்தது சுந்தரர் பாடி மகிழ்ந்தார்.
அங்கிருந்து திருவாவடுதுறை அடைந்த நம்பியாரூரர் தென்கரைத் தலங்கள் திருவிடை மருதூர், திருக்கலய நல்லூர், திருவலஞ்சுழி சென்று திருவலம் பொழிலை அடைந்தார். அதன் பின் இறைவன் கனவில் தோன்றிச் சொல்லிய திருமழபாடியை அடைந்தார். அங்கிருக்கும் பெருமானை “பொன்னார் மேனியனே" எனப் பாடினார் பின் திருவானைக்கா, திருப்பாச்சிலாமம் சென்றார். திருப்பாச்சிலாமத்தில் இறைவனிடம் பொருள் வேண்டினார். இறைவன் அருளவில்லை . பின் “வைத்தனன் தனக்கே" எனும் பதிகம் பாடி பொருள் பெற்றார். திருப்பாண்டிக் கொடிமுடியில் “மற்றுப்பற்றெனக்கின்றி“ எனும் திருப்பதிகம் பாடினார்.
பின் திருப்பேரூர், திருக்கற்குடி, திருஇன்னம்பர் எல்லாம் வணங்கி திருக்கூடன் யாற்றூர் செல்லத் துணிந்தார் முடியவில்லை, திருமுதுகுன்றத்தை நோக்கிச்செல்ல பரமன் அந்தணர் வடிவம் கொண்டு எதிரில் நின்றார். சுந்தரர் திருமுதுகுன்றம் செல்லும் சிறிதளவு தூரம் வழித்துணையாக வந்து மறைந்தார். திருமுதுகுன்றப் பெருமானிடம் “மெய்யை முற்றப் பொடி பூசி“ என்ற திருப்பதிகம் பாடி பன்னீராயிரம் பொற்கட்டிகளைப் பெற்றார்.
அதைத் திருவாரூரில் சேர்க்கும்படி இறைவனைக் கேட்டார். இறைவன் “மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர்க் தளத்தில் பெறுவாயாக என்றார். அடையாளமாக ஒரு துண்டை எடுத்துக் கொண்டு சென்றார். வழியில் சிதம்பரம், திருநள்ளாறு, திருவேல்விக்குடி தரிசித்து திருவாரூர் வந்தடைந்தார். அங்கு பரவையாருடன் கூடிப் பதிகம்பாடி குளத்தில் பொன்னை எடுத்தார்.
அங்கு சில நாட்கள் தங்கிப்பின் திருநள்ளாறு, திருக்கடவூர், திருநின்றியூர், திருக்கோலக்கா சென்றார். அங்கு பெருமான் காட்சி கொடுத்தார். அங்கிருந்து திருக்குருகாவூரை நோக்கிச் சென்றார். வழியில் பசிதாகம் அடைய இறைவன் பிராமன வடிவம் கொண்டுவந்து கட்டுச்சாதம் கொடுத்தார். பின்னர் திருத்தினைநகர், திருநாவலூர், திருக்கழுக்குன்றம் தரிசித்து திருக்கச்சுரை அடைந்தார். அங்கு இறைவன் பிராமன வடிவில் யாசித்துவந்த உணவினை உண்டார். அங்கிருந்து காஞ்சிபுரம் சென்று திருக்காளத்தியை அடைந்தார். அங்கிருந்தபடியே திருப்பருப்பதத்தையும், திருக்கேதாரமலையையும் இன்னும் பல பதிகளையும் பாடிப்பின் திருவொற்றியூரை அடைந்து அங்கு இருந்தார்.
திருக்கயிலையில் உமையம்மையாருக்கு பணி செய்த அதிந்திகை, கமலினி என்னும் செடியர் இவருள் கமலினி திருவாரூரில் பரவையாக அவதரித்தார். அதிந்திகை ஞாயிறு என்ற ஊரில் வாழ்ந்த கிழார் என்பவருக்கு மகளாக சங்கிலியாராக அவதரித்தார். அவர் வளர்ந்து மணப்பருவரும் அடைந்ததும் தகப்பனார் மணம் பேசினார். அவர் விரும்பவில்லை. பின் திருவொற்றியூர் போவேன் என்றார். அங்குள்ள பெருமான் ஆணைப்படி திருவொற்றியூர் சென்று கன்னிமாடம் அமைத்து தவம் செய்தாள். சுந்தரரும் பெருமானை வணங்கப் போனார். அங்கு சங்கிலியாரைக் கண்டு விரும்பினார். இறைவனை வேண்டினார். இறைவன் "எந்தருளிழூ உனக்கு சங்கிலியைத் தந்தேன்“ என்றார். பின்னர் சங்கிலியாருடைய கனவில் தோன்றி சுந்தரரை மணக்கச் சொன்னார்.
சங்கிலியார் பெருமானை நோக்கிச் சுந்தரர் பரவையாரிடம் போகாது சத்தியம் செய்யும்படி வேண்டினார். சுந்தரர் பெருமானை தான் சத்தியம் செய்யவரும் போது இறைவனை கோவிலில் விட்டகன்று மகிழமரத்தின் கீழ் அமரவேண்டும் என்றார். இறைவன் சம்மதித்தார். இறைவன் சுந்தரரைச் சோதிக்க எண்ணி சங்கிலியார் கனவில் தோன்றி மகிழ மரத்தடியில் சத்தியம் பண்ணச்செய்து மணம் முடித்து இன்பமாக வாழ்ந்தனர்.
வசந்தகாலம் வந்தது. சுந்தரருக்கு திருவாரூர் வீதிவிடங்கப் பெருமானைக்காணத் துடித்தது. ஒருநாள் திருஒற்றியூர் எல்லையைக் கடந்தார். அவரது கண்ணொளி குறைந்தது. பதிகம் பாடியும் ஒளி வரவில்லை . அப்படியிருந்தும் திருஒற்றியூரை நோக்கிப் போய் திருமுல்லைவாயில் போய் அங்கு திருப்பதிகம் பாடினார். அங்கிருந்து திருவெண்பாக்கத்தை அடைந்தார். அங்கு பெருமான் சுந்தரருக்கு ஒரு ஊன்றுடுகால் கொடுத்தார். அங்கு பிழையினைப் பொறுத்திடுவீர் எனப்பாடி திருவாலங்காடு திருவூரனைப் போற்றித் திருக்காஞ்சியை அடைந்தார்.
ஏகாம்பரநாதரை வணங்கி வேண்டினார். இடக்கண் கிடைத்தது. பின் திருவாமாத்தூர், திருவரத்துறை இறைவனை வேண்டிப் பிணியை ஒழித்தார். பின் திருவாரூர் போகும் வழியில் ஆரூர் சென்று வணங்கினார். "மீளா அடிமை" எனத்தொடங்கும் பாடலைப்பாடி கண்ணொளி பெற்றார். பரவையார் மனந்தளர்வுற்று கோபம் கொண்டாள். சுந்தரர் சிவபெருமானை வேண்டினார். இறைவன் தோழனாக வந்து சுந்தரருக்காக பரவையாரின் திருமாளிகை சென்று இருவரையும் சேர்த்து வைத்தார்.
சுந்தரர் பரவையாரோடு இறைவனைப் போற்றி இன்புற்றிருந்தனர் இறைவனைத் தூதனுப்பிய செயல் கூடாதெனக் கலிக்காமநாயனார் சுந்தராமீது கோபம் கொண்டார். இறைவன் இருவரும் ஒற்றுமையாக இருக்க எண்ணி கலிக்காமருக்குச் சூலை நோயைக்கொடுத்து இறக்கப்பண்ணி மீண்டும் சுந்தரராலேயே எழுப்பப்பண்ணி இருவரையும் நண்பராக்கினார். இருவரும் திருப்புங்கூர் சென்று அங்குதங்கிப் பின் திருவாரூர் சென்று கலிக்காமர் தொண்டுகள் செய்து இறைவனடி சேர்ந்தார்.

1 திருநீலகண்ட நாயனார்

சிதம்பரம் என்னும் சிவாலயத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர். நஞ்சை உண்ட கழுத்தையுடைய சிவனை நினைத்து வழிபட்டதால் திருநீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.
சிவனடியார்களுக்கு திருவோடுகளைச் செய்து வழங்குபவர். அருந்ததியைப் போல கற்புடைய மனைவியை மணந்து இல்வாழ்க்கை நடத்தினர்.
இத்தகைய திருநீலகண்டர் பரத்தை வீட்டுக்குப் போய்வந்தார். இதையறிந்த அவர் மனைவி கணவருக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து உடலுறவு மட்டும் செய்யவிடாது இருந்தார், சிவபெருமான் இதை உலகிற்கு உணர்த்த எண்ணினர்.
இவர்களது நல்லொழுக்கத்தை உணர்த்த எண்ணி சிவன் சிவனடியார் வேடம் பூண்டு கையில் ஒடு தாங்கி திரு நீலகண்டரது வீட்டிற்குச் சென்றார். திருநீலகண்டர் அவரை எதிர்நோக்கிச் சென்று உபசரித்தாா். சிவன் அவரது கையில் உள்ள ஓட்டைப் பவுத்திரமாக வைக்கும்படியும் தாம் கேட்கும்போது திருப்பிக் கொடுக்கும்படியும் சொல்லி அவரிடம் கொடுத்துச் சென்றார்.
பின்னர் இறைவன் அவ்ஓட்டை மறையப்பண்ணி விட்டார். அதன்பின் மறுபடி திருநீலகண்டர் வீட்டிற்கு வந்து அவ்ஒட்டைக் கேட்டார்.
திருநீலகண்டர் வைத்த இடத்தில் போய்ப்பார்க்க அங்குகாணவில்லை. இதனால் யோசித்துக் கொண்டிருக்க சிவனடியார் உள்ளே போய் கேட்க அவ்ஒடு கானவில்லை என்றார். சிவனடியார் சீற்றம் கொண்டார். அவ்ஓட்டுக்குப் பதிலாக வேறு ஒடு தருவதாக கூறியும் கேட்கவில்லை.
இதற்கு என்ன செய்யவேண்டும் என்றார். சிவனடியார் உனது பிள்ளையுடன் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்ய வேண்டும் என்றார். திருநீலகண்டர் தமக்கு குழந்தை இல்லை எனக்கூற அப்படியானால் உனது மனைவியுடன் கைகோர்த்து சத்தியம் செய் என்றார்.
திருநீலகண்டர் தமது மனைவியை தொடமுடியாததால் திருப்புலிச்சுரம் சென்று ஒரு மூங்கிலை எடுத்து ஒருபக்கம் தாமும் படுத்தபக்கம் மனைவியும் பிடித்து மூழ்க முற்பட்டபோது இறைவன் வெளிப்பட்டு இருவரும் கைப்பிடித்த வண்ணம் மூழ்கும்படி கூறி அவர்களுக்கு இளமைப் பருவத்தையும் கொடுத்தருளினார்.

2 இயற்பகை நாயனார்

சோழநாட்டில் காவிரி பூம்பட்டனத்தில் காவிரி கடலில் கலக்கிறது. இங்கு வணிக தலத்தில் இயற்பகை நாயனார் அவதரித்தார். இவர் சிவனடியாருக்கு இல்லை என்று சொல்லாது எதையும் கொடுப்பவர்.
இவரது சிறப்பை உலகிற்கு உணர்த்த நினைத்த சிதம்பரக் கூத்தர். ஒருநாள் அந்தணர் வடிவமெடுத்து காமம் வெளிப்படுத்தும் உருவத்துடன் இயற்பகைநாயனார் வீட்டிற்கு வந்தார்.
நாயனார் அவரை உபசரித்து வணங்கி நின்று அச்சிவனடியாருக்கு வேண்டியது யாது எனக்கேட்க அச்சிவனடியார் உமது மனைவியாரை எனக்குத்தர வேண்டும் எனக்கேட்டாா்.
நாயனாரும் மனமுவந்து தனது மனைவியாரிடம் உள்ளேபோய் கேட்டார். அவரது மனைவியார் சிறிது தயங்கியபின் தனது கணவருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு சம்மதித்தார்.
அதன்படி செய்ய முற்பட்டபோது அவரது சுற்றத்தார் எதிர்த்து நின்றனர். இயற்பகையனார் அவர்களோடு வாளேந்தி போரிட்டுச் சென்று தன் மனைவியையும் சுவாமிகளையும் வனம் தாண்டி கொண்டுபோய் விட்டு விட்டு திரும்பினார்.
அப்படித் திரும்பி வரும்போது சிவனடியார் “இயற்பகை நாயனாரே திரும்பிவா" என கூறினார். அவர் திரும்பிவந்தபோது சிவனடியார் மறைந்து போய் இறைவன் வடிவாகக் காட்சி அளித்து இயற்பகைநாயனாரையும் மனைவியாரையும் வீரசொர்க்கம் சேர்த்தார்.

3 இளையான்குடி மாறநாயனார்

இளையான்குடி என்னும் இடத்தில் வேளாளர் குளத்தில் தோன்றியவர் மாறனார். ஆடும் கூத்தனை வழிபடும் இவர் சிவனடியாரை வழிபட்டு அவர்களுக்கு ஆவன செய்வதில் விருப்பமுடையவர்.
இதனால் இவரது செல்வம் பெருகியது. இறைவன் இவரை வறுமை அடையப் பண்ணினார். அப்படியிருந்தும் பொருள்களை விற்றும், கடன்பட்டும் அடியார்க்கு உணவளித்தார்.
ஒருநாள் இரவு இறைவன் துறவி வேடம் பூண்டு நல்ல மழையில் வந்து மாறன் வீட்டின் கதவல் தட்டினார். மாறன் கதவை திறந்து அத்துறவியை உள்ளே வரப்பண்ணிணார்.
ஈரத்தை துடைத்து இருக்கப்பண்ணிவிட்டுத் தன் மனைவியாரிடம் துறவிக்கு எப்படிப் பசியாற வைப்பதெனக் கேட்டார். இரவு வேளை எதுவும் செய்ய முடியவில்லை. இன்று வயலில் விதைத்த நெல் முளைத்து இருக்கும் அதைப் பிடுக்கிவாருங்கள் என்று சொன்னார். அதன்படி மாறன் கொண்டுவந்தார்.
சமைக்க விறகு இல்லாததால் கூரையை அறுத்து விறகாகப் பாவித்து, சிறிய முளைத்த கீரையை பிடுங்கி கறியாக சமைத்து அடியாரை உண்பதற்கு அழைத்தார்.
உடனே அடியார் வடிவில் வந்த சிவனார் சோதி வடிவாகக் காட்சி கொடுத்து மாறனைப் பார்த்து நீங்கள் இவரும் அடியார்கள் பூஜையை சிறப்புறச் செய்தீர்கள். நீங்கள் நம்முலகம் வருவீர்களாக என வரம் கொடுத்து மறைந்தார்கள்.

4 மெய்ப்பொருள் நாயனார்

சோழ நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையிலுள்ள சேதி நாட்டில் மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி புரிந்தார். இவர் கோவில்கள் சிவனடியார்கள் எல்லாம் சிறப்புற இனிதே நாட்டை ஆண்டு வந்தார். அப்பேற்பட்ட நாயனாருக்குப் பகைவன் ஒருவன் தோன்றினான்.
அவன் பெயர் முத்தநாதன். அவன் மெய்ப்பொருள் நாயனாரை கட்சியால் வெல்ல நினைத்துää சிவனடியார் வேடம் பூண்டு பையில் புத்தகம் போன்று ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு அரண்மனையில் நுழைந்தான் நாயனார் கட்டளைப்படி அடியார்கள் எப்பவும் உள்ளேபோகலாம் என்பதால் யாரும் தடுக்கவில்லை.
கடைசியில் நாயனார் எழுந்தருளியிருக்கும் வாயிலை அடைய அவரது மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் தடுத்தான். அதையும் மீறி முத்தநாதன் உள்ளே போனான். இதனைக் கண்ட தேவியார் அரசரை எழுப்ப போலிச்சாமியாரை அரசர் வணங்கி நின்றார்.
உடனே முத்தநாதன் உங்கள் தலைவரான இறைவரது முக்கிய ஆகமநூலைப்பற்றி விளக்கம் சொல்ல வேண்டும். தனியே இருக்க வேணும் என்றார். அரசன் தேவியை அந்தப்புரம் அனுப்பி விட்டார். அத்தருணம் மெய்ப்பொருள் நாயனாரை முத்தநாதன் வெட்டி வீழ்த்தினான்.
இதை அவதானித்த தத்தன் உடனே வந்து முத்தநாதனை வெட்டப்போக மெய்ப்பொருள் நாயனார் அதைத்தடுத்து முத்தநாதனை யாரும் நீண்டாமல் கொண்டுபோய் காட்டிற்குள் விடும்படி கட்டளையிட்டார்.
அதன்படி முத்தநாதனை தத்தன் கொண்டு போய் விட்டு விட்டு வரும்வரை மெய்ப்பொருள் நாயனார் உயிர்பிரியவில்லை. அதன்பின் சிவபெருமான் நாயனாரை தம்மடி சேர்த்தார்.

5 விறன்மிண்ட நாயனார்

சேர நாட்டில் செங்குன்றூரில் விறன்மிண்ட நாயனார் அவதரித்தார். இவர் நிறைய சிவஸ்தலங்களை வணங்கியவர். சிவனடியார்களை வணங்கிய பின்னரே சிவனை வணங்குபவர்.
இவர் ஒரு சமயம் திருவாரூருக்கு வந்தார் அப்பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர் கோயிலுக்குள் நுழைந்தார். அவர் அடியார்களை வணங்கிவிட்டு அக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கிச் சென்றார்.
இதனைக் கண்ட விறல் மீட்ட நாயனார், சுந்தரர் அடியார்களை வணங்கிய பின் சிவனை வணங்காமலும் அடியார்களுடன் சேராமலும் புறம்பானவர் என்று கூறினர்.
இதனைச் சுந்தரர் கேட்டார். உடனே சிவனடியார்களை வணங்கி அவர்களுடைய பெருமையைக் குறிக்கும் திருத்தொண்டர் தொகையை பாடினார்.
இத்திருத்தொண்டர் தொகை பாடக் காரணமாயிருந்தவர் விறன்மிண்ட நாயனார் நாயனாராகும்.

6 அமர்நீதிநாயனார்

சோழவள நாட்டில் பழையறை என்னும் ஊரில் வணிகர் குலத்தில் பிறந்தவர் அமர்ந்திநாயனார். இவர் நல்வழியில் வணிகம் செய்து பொருள் சம்பாதித்தார்.
ஒருசமயம் திருநல்லூர் சிவன் திருவிழா தரிசிக்கச் சென்று அங்கு தரிசித்தபின் அம்மடத்திலிருந்து அடியார்களுக்கு உணவும், கூளும், கோவனமும் கொடுத்து அங்கு வாழ்ந்தார்.
ஒருநாள் திருநல்லூர்ப் பெருமான் அந்தணப்பிரமச்சாரிய வடிவமெடுத்து அங்கு வந்தார். பெருமான் கையில் ஒரு தண்டு இருந்தது. அதில் இரண்டு கோவனங்களும் ஒரு திருப்பையும் முடிந்த தாப்பப்பையும் இருந்தது.
அமர்நீதி நாயனார் அவரை வணங்கி இதுவரை இப்மடத்தில் உம்மை கண்டதில்லை. மிகவும் சந்தோசப்படுகிறேன் என்றார். இப்படிப் புகழ்ந்த அமர்ந்தியாரை நோக்கி பிரமச்சாரிப் பெருமான் தீர் சிவனடியாருக்கு கந்தையும், கூளும், கோவணமும் அளிப்பதைக் கேள்விப்பட்டோம். அதனால் உம்மை காண வந்தோம் என்றார்.
அமர்த்தியார் அவரை உணவு உட்கொள்ளும்படி கேட்டார். பிரமச்சாரி வேதியர் தான் நீராடிவிட்டு வருகிறேன் என்று சொல்லித் தண்டிலிருந்த கோவணத்தை வைத்திருக்கும்படி சொல்லிக் கொடுத்தார். நாயனார் அதை வாங்கி பாதுகாப்பான இடத்தில் வைத்தார்.
இறைவன் அதை மறையப்பன்ணிவிட்டு நீராடிவந்து கோவணத்தைக் கேட்டார். நாயனார் அக்கோவணம் கிடந்த இடத்தில் போய்ப் பார்க்க அது இல்லாது போகக்கண்டு மிகவும் வருந்தி அதற்கினையாக வேறு ஒரு கோவணத்தை கொண்டு வந்து அதனை ஏற்கும்படி கேட்டார்.
பிரமச்சாரி வேதியர் அது முடியாது வேண்டுமானால் எனது கோவணத்திற்கு பதிலான எடையுள்ள கோவணத்தைக் கொடு என்று தனது தண்டிலுள்ள அடுத்த கோவணத்தை எடுத்தார். அமர்த்தி நாயனார் தராசு எடுத்து அக்கோவணத்திற்குப் பதிலாக எல்லாக் கோவணங்களையும் வைத்தார்.
அது போதாமல் தனது பொன், பொருள், மணி யாவையும் வைத்தார். அப்பவும் தட்டு சமடாக வராததால் அமர்நீதியார் பிரமச்சாரி வேதியரை நோக்கி நானும், எமது மனைவியாரும், மகனும் இத்தட்டில் ஏற அனுமதி தரவேண்டும் என்றார்.
வேதியர் சம்மதிக்க மூவரும் தட்டில் ஏறினர். இரு தட்டுகளும் சமமாக வந்தன. தேவர்கள் பூமாரி பொழிய திருநல்லூர்ப் பெருமானும் உமையம்மையும் காட்சி அளித்தனர். அமர்ந்தியார் குடும்பம் பேரின்பம் அடைந்தது.

7 எறிபத்த நாயனார்

கரிகால் வளவன் சங்ககால சோழர்களுள் சிறந்தவன். இமயத்தில் புலிக் கெடி பொறித்தவன். இலங்கையில் கொடியேற்றியவன். சோழ மன்னர் முடி சூட்டும் தலைநகரில் ஒன்று கருவூர்.
திருவானிலை என்ற சிவன் கோவில் கருவூருக்கு திருமுகமாக விளங்கும். அங்கு எறிபத்தர் என்னும் சிவனடியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியாருக்கு தொண்டு செய்பவர்.
கையில் மழு வைத்திருப்பவர். சிவனடியாருக்கு யாராவது தீங்கு செய்தால் அம்மழுவால் வெட்டிச் சாய்ப்பார்.
அவ்வூரில் சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவர் இருந்தார். அவர் மாலை கட்டி சிவனுக்கு அணிபவர். ஒருநாள் பூப்பறித்துக் கொண்டு வரும் போது புகழ்ச்சோழ நாயனாருடைய பட்டவர்த்தனம் பட்டத்து யானை ஆம்பிராவதி நதியில் நீராடி விரைந்து வந்தது. அத்தயானை தவராத்திரிக்கு முன்நாள் மதம்பிடித்து சிவகாமி ஆண்டாரின் பூக்கூடையை பிரித்து எறிந்தது. அதன் மேலிருந்த யானைப்பார்கள் அதை விலக்கவில்லை.
ஆண்டார் கோபம் கொண்டார். தனது கையிலுள்ள தடியால் யானையை அடிக்க ஒங்க யானை ஓடிவிட்டது. ஆண்டார் சிவதா என்று கூறிக்கொண்டு கீழே விழுந்து கண்ணீர் விட்டார். இவ்வோலம் எறிபத்த நாயனாரின் காதில் வழ்ந்தது. அவர் அந்த யானையை துரத்தி அதன் துதிக்கையை வெட்டிச்சாய்த்தார்.
அத்துடன் பக்கத்தில் வந்த குத்துக்கோற்காரர் மூவரையும் பாகர் இருவரையும் குத்திக் கொன்றார். இதனைக் கேள்விப்பட்ட புகழ்ச்சோழநாயனார் கோபம் கொண்டு தன் படையுடன் வந்தார்.
எறிபத்த நாயநாரைப் பார்த்ததும் அவரது மனதில் தனது பட்டத்து யானை ஏதோ தவறு செய்ததால்தான் எறிபத்தர் யானையைக் கொன்றதாகத் தோன்றியது.
உடனே எதிபத்தரை வணங்கி அப்பிழைக்கு அத்தண்டனை போதது என்று தன்னையும் கொல்லும்படி தனது வாளினைக் கொடுத்தார்.
எறிபத்தர் அரசரது காலில் விழுந்தார். தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்ää யானை உயிர்பெற்றது. மலர்க் கூடையில் மலர்கள் மீண்டும் நிரம்பின.
வானிலிருந்து ஒரு திருவாக்கு எழுந்தது. அதில் இருவரதும் திருத்தொண்டை உணர்த்தவே இச்சம்பவம் நடந்தது எனக் கூறப்பட்டது. எறிபத்தர் அவ்விடத்தில் திருத்தொண்டினைச் செய்து திருக்கயிலை இறைவன் கணங்களுக்குத் தலைவரானார்.

8 ஏனாதிநாத நாயனார்

சோழநாட்டில் எயினனூர் என்ற இடத்தில் ஈழர் குலத்தில் ஏனாதிநாதர் அவதரித்தார். அவர் திருநீற்றிடத்து அன்பு செலுத்துபவர்.
அரசருக்கு படைக்கலப் பயிற்சி செய்பவர். அதில் வரும் பொருள்களை அடியார்க்கே செலவு செய்பவர் அதே குலத்தில் போர்ப்பயிற்சி செய்யும் அதிசூரன் என்பவன் இருந்தான்.
ஏனாதினாயருக்கு தாயாதி முறை உடையவன். செருக்குடையவள் இதனால் அவனிடம் பயிற்சி பெற வருபவர்கள் குறைந்தது. இதனால் அவன் ஏனாதினாதரிடம் போருக்கு வரச் சொன்னான். அங்கு ஏனாதினாதரைப் போருக்கு அழைத்து இருவரில் யார் வெல்கிறார்களோ அவர்களே போர்ப்பயிற்சி அளிக்க தகுதியுள்ளார் என்று கூறினான்.
ஏனாதிநாதரும் சம்மதித்து போரில் இறங்கினார். போர்க்களம் செங்குருதிக்களம் ஆயிற்று. இறுதியில் அதிசூரனின் தலையை துண்டிக்கப் போகும் போது அதிசூரன் தப்பி ஓடிவிட்டான்.
பின்னர் எப்படியும் வஞ்சணையால் ஏனாதிநாயனாரை வெல்ல எண்ணி ஏனாதிநாயனாரை தனியிடத்தில் சண்டைபோட அழைத்தான் ஏனாதிநாயனாரும் சம்மதித்தார்.
அதன்படி குறிப்பிட்ட இடத்தில் அதிசூரனை எதிர்பார்த்து நின்றார். ஏனாதிநாதர் திருநீற்றில் பற்றுள்ளதால் வஞ்சனை உள்ளம் கொண்ட அதிசூரன் நெற்றி நிறைய திருந்து பூசிக்கொண்டு முன்வந்தான்.
ஏனாதிநாதர் அவனது நெற்றித் திருநீற்றினைக்கண்டு வியந்து தானாகவே தோற்றார். அப்போது இறைவன் உமையொருபாகனாகத் தோன்றி ஏனாதிநாத நாயனாரை ஆட்கொண்டார்.

9 கண்ணப்பநாயனார்

கடம்பை மாவட்டத்தில் பொத்தம்பி என்ற ஊரைச் சார்ந்தது உடுப்பூர். இங்கு வேடர்கள் மிகுதியாக வாழ்ந்தனர். வீரம்மிக்க வேடர்களுக்கு தலைவனாக நாகன் என்பவன் விளங்கினான். சிவனது மனைவி தத்தை. இவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தது. இருவரும் அவர்களுடைய குலதெய்வமாகிய முருகனை வேண்டி வழிபட்டு ஒரு குழந்தையைப் பெற்றனர். அக்குழந்தை திண்மையாக இருந்ததால் திண்ணன் எனப் பெயரிட்டனர். திண்ணன் பதினாறு வயதில் சகல வித்தைகளையும் பழகியிருந்தான்.
நாகன் தனது முதுமையால் உடல் தளர்த்தபோது தன் மகனான திண்ணனை வேடர்கள் தலைவனாக்கினான். மறுநாள் திண்ணான் வேட்டைக் கோலத்தைப் புண்டு வேட்டைக்கு சென்றார். பல விலங்குகளையும் அழித்து செல்லும்போது ஒரு பன்றி இடிமுழக்கம் போல கத்தி வலையைப்பிரித்து ஓடியது.
திண்ணன் அதைத் துரத்தி ஓட காடன், நாணன் என்னும் இருவர் பின் தொடர்ந்து போயினர்.
அது ஒரு மலைச்சாரலில் பதுங்க திண்ணன் அதை உறைவாளால் வெட்டி இரண்டு துண்டுகளாக்கினான். நாணனும். காடனும் அரசரை நோக்கி நாம் களைத்துவிட்டோம், இப்போது இப்பன்றியைச் சுட்டுப்பசி ஆறிவிட்டு பின் வேட்டைக்குச் செல்வோம் என்றனர்.
இக்காட்டில் தண்ணி எங்கே கிடைக்கும் என திண்ணர் வினவினார். அதற்கு நாணன் இத்தேக்கு மரச்சேலையை கடந்து சென்றால் ஒரு நீண்ட மலை இருக்கிறது. அதன்பக்கம் “பொன்முகலி“ ஆறு ஓடுகிறது என்றான்.
அதன்படி செல்லும் போது சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்காளத்தி மலைச்சாரலை அடைந்தனர். அங்கு அம்மலையில் ஏறினார் ஏறும்போது திண்ணன் நாணனை நோக்கி இம்மலையில் ஏறும்போது எனது பாரம் குறைவது போலவும், புதுவிதமான அனுபவம் ஏற்படுகிறது என்ன காரணம் என்று கேட்டார்.
அதந்த நாணன் குடுமித்தேவராம் சிவபெருமான் அங்கு உள்ளதாலேயே எனக் கூறினார். திண்ணனார் நாணனுடன் மலையை நோக்கி விரைந்தார். அங்கு பொன்முகலி ஆற்றை அடைந்தனர். அங்கு காடனை நோக்கி இப்பன்றியினைச் சுடுவதற்கு தீயை உண்டாக்கு நானும் நாணனும் இக்காளத்தி மலையைச் சென்று பார்த்து வருகிறோம். என்று கூறிவிட்டு மலை மீது ஏறினார்.அங்த காளத்தி நாதனைக் கண்டாா். அவரைக்கட்டித் தழுவி உச்சிமோர்ந்து உருகி நின்றார்.
திண்ணனார் கையிலிருந்த வில் தானாக நழுவியது. காளத்திநாதர்மீது பச்சிலையையும் தண்ணீர் ஊற்றப்பட்டதையும் கண்ட திண்ணனார் இந்த நல்ல செயலைச் செய்தது யார் என நாணனைக் கேட்டார். அதற்கு நாணன் முன்னொரு காலத்தில் உனது தந்தையோடு வேட்டைக்கு வந்தபோது ஒரு அந்தணர் இப்படிச் செய்தார். அவரேதான் இப்பவும் இச்செயலை செய்திருக்க வேண்டுமெனச் சொன்னார்.
திண்ணர் அதேபோலத் தானும் செய்ய எண்ணினார். பின் இறைவனுக்கு இறைச்சி வேண்டிப் பொன்முகலி ஆற்றைக் கடந்து ஒரு பூஞ்சோலையில் சென்றான். காடன் திண்ணாள்டம் வந்து தீயைக் கடைத்து வைத்தான்.
பன்றியின் உறுப்புகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் என்று கூறி அவர்கள் கால தாமதம் ஏன் என்றும் கேட்டான். அதற்கு நாணன் திண்ணன் குடுமித்தேவர் வசப்பட்டுவிட்டார். இப்பவும் அவருக்கு உணவு தேடியே வந்தார் என்று விடையளித்தார்.
அத்துடன் இத்தெய்வ மயக்கம் தீர தேவராட்டியையே அழைத்து வரவேண்டும். ஆகவே மற்ற ஏவலாளர்களையும் கூட்டிக்கொண்டு ஊர்போவோம் என்றார்.
திண்ணரோ குடுமித்தேவரது சிந்தனையோடு கல்லையில் இறைச்சியை எடுத்தார். குடுமித்தேவரை நீராட்டத் தமது வயில் பொன்முகலி நீரை எடுத்தார். அவருக்கு பூச்சுட பூவைத் தலையில் வைத்தார். விரைந்து காளத்தி மலையில் ஏறினார். அங்கு குடுமித் தேவரின் தலையில் இருந்த மலர்களை தன் செருப்புக்காலால் தள்ளினார். வாயில் இருந்த நீரால் குடுமித் தேவரை நீராட்டித் தன் தலையில் இருந்த மலர்களை தலையில் வைத்தார்.
திருவமுதைக் காளத்திநாதர் முன் வைத்தார். உண்ணும்படி பணித்தார். அப்போது அந்திநேரம் போய் இரவு வந்தது குடுமித்தேவரை விலங்குகள் தாக்காவண்ணம் வில்லை ஏந்தி நின்றார். இரவு மறைந்தது பொழுது புலர்ந்தது பெருமானுக்கு அமுது தேடி திண்ணனார் புறப்பட்டார்.
நாள் தோறும் ஆகம முறைப்படி பூசை செய்யும் சிவகோச்சாரியார் அங்கு வந்தார். அங்கு இறைச்சி எலும்புகளைக்கண்ட அவர் பதறித் துன்புற்று கீழே விழுந்தார். பின் சிவபூஜைக்கு நேரம் வந்ததால் அங்குள்ளவற்றை திருவலக்கினால் நீக்கி திருமுகலி ஆற்றில் நீராடித் திரும்பினர் குடுமித்தேவருக்கு ஆகம முறைப்படி பூஜைசெய்து தாம் தவம் செய்ய காட்டை அடைந்தார். திண்ணனார் இறைச்சியை தேனில் ஊறவைத்து கொண்டுவந்து படைத்தார்.
சிவகோச்சாரியாரும் நாள்தோறும் வந்து இறைச்சியைப் பார்த்து வருந்திப் பின் அவற்றை நீக்கி சிவபூசை செய்வார். நாணனும் காடனும் ஊர்திரும்பி நாகனிடம் நிகழ்ந்ததைக் கூறி வேடர் குலமே தீராத்துயரில் ஆழ்ந்தனர்.
நாகன் தேவராட்டியை அழைத்துவந்து மந்திரம், தந்திரம் செய்தும் திண்ணனின் தெய்வ மயக்கம் தீரவில்லை.
இது இவ்வாறிருக்க சிவகோச்சாரியார் திண்ணரால் செய்யப்படும் அசிங்கமான செயலைப் பொறுக்காது காளத்தியப்பரை நோக்கி இச்செயலைச் செய்பவரை நீ ஒழித்தருளக் கூடாதோ என்று வேண்டி தின்றார்.
அன்றிரவு சிவகோச்சாரியாரின் கனவில் குடுமித்தேவர் தோன்றி "அப்பனே அவன் சாதாரன வேடனல்ல அன்பினால் எல்லாம் செய்கிறான். நாளை நீ எனது கோவில் வந்து ஒளித்திருந்து அவனது அன்புச் செயல்களை அறிவாய்' என்றார்.
சிவகோச்சாரியார் அடுத்தநாள் அங்கு போய் வழக்கம் போல் வழிபாட்டை நடத்திக் கோவிலின் பின்புறம் ஒளித்து நின்றார்.
ஐந்து நாட்கள் பின்னர் திண்ணனார் வழக்கம் போல வேட்டையாடிவந்து குடுமித்தேவர் முன் நின்றார். காளத்திநாதர் தன் வலக்கண்ணில் இரத்தம் ஒழுகுமாறு செய்தார். திண்ணனார் பொறுக்காது மயங்கி கீழே விழுந்தார். பின் எழுத்து இரத்தத்தை துடைத்தார். இரத்தம் திற்காததால் பச்சிலை தேடி அதைக் கண்ணில் பிழிந்துவிட்டார். அப்படியும் இரத்தம் திற்கவில்லை. உடனே ஊனுக்கு ஊனே உற்ற நோய் தீர்க்கும் என்று சிந்தித்து தனது அம்பால் வலக்கண்ணை குற்றி எடுத்து காளத்தி நாதரது கண்ணில் அப்பினார். இரத்தம் நின்றது. பின்னர் இடக்கண்களிலும் இரத்தம் வடியப் பண்ணினார்.
திண்ணணார் அடுத்த கண்னையும் பிடுங்கி வைக்க எண்ணினார். அதைப் பிடுங்கினால் இடக்கண் இருக்கும் இடம் தெரியாது போகும் என எண்ணி செருப்புக்காலால் இடக்கண்பாகத்தை ஊன்றிக்கொண்டு இடக்கண்ணைப் பிடுங்க முயன்றார்.
இச்செயலைக் காணப்பொறுக்காத குடுமித்தேவரான இறைவன் கரம் நீட்டி தின்ணனார் கையைத்தடுத்து ‘நில்லு கண்ணப்பா" என மூன்று முறை இறைவன் அருள்வாக்கு எழுந்தது.
இக்காட்சியை சிவகோச்சாரியா கண்டார். இறைவன் கண்ணப்பனை நோக்கி “நீ என் வலப்பக்கத்தில் இருப்பாயாக“ என்று அருளினார்.

10 குங்குலியக்கவியனார்

மார்க்கண்டேயரது உயிரைக்காக்க இயமனைக் காலால் உதைத்த இறைவன் எழுந்தருளிய சோழநாட்டுத்தலம் திருக்கடவர். அவ்வூரில் அந்தணர் தொழிலானவர் கலயர். இவர் அத்தலத்துப் பெருமானுக்கு குங்கிலியத்தூபமிடும் தொழிலானவர்.
இவருக்கு வறுமை வந்தது. அப்படியிருந்தும் தூபமிட்டார். இரண்டு நாள் உணவுமில்லாமல் துன்புற்றபோது அவரது மனைவியார் தனது பொன்தாலியை விந்து நெல் வாங்கி வரும்படி கலையனாரிடம் கொடுத்தார்.
கலயனார் போகும்போது குங்கிலிய வியாபாரி ஒருவர் வந்தார். கலயனார் பொன்தாலியை கொடுத்து அக்குங்கிலிய மூட்டையை வாங்கி குடும்பத்தையும் சுற்றத்தையும் மறந்து கோவிலில் புகுந்தார்.
ஆனந்தக் கடலில் ஆழ்ந்தார். இறைவன் கலயனார் வீட்டில் நெல்லும் பொன்னும் ஒப்பிலா வளங்களையும் ஆக்கினார். கலயனர் மனைவி இது யாவும் இறைவன் செயலே என்று கூறி சமையல் அறையில் சமைக்கப்போனாள்.
இறைவன் திருவடிகளில் இருந்த கலயனர் உணரும்படி இறைவள் வீட்டிற்குப் போய் பசியாறும் என்றார். கலயனார் வீடு திரும்பியதும் யாவையும் கண்டு இறைவன் தந்தவற்றைக் கொண்டு திருப்பணிகளையும் தானங்களையும் செய்து இறைவனடி சேர்ந்தார்.

11 மானக்கஞ்சாற நாயனார்

கஞ்சாறு என்னும் ஊரில் வேளாளர் குடியில் மானக்கஞ்சாறர் என்னும் சான்றோர் வாழ்ந்து வந்தார். மன்னருக்கு படைத்தலைவராய் இருந்தார்.
இவர் சிவனடியார்களுக்கு செல்வத்தை செலவு செய்து வாழ்ந்தார். பிள்ளைப்பேறு இல்லாத்தால் பெருமானை வேண்டித்துதித்தார். நடராசப்பெருமான் திருவருளால் பெண்குழந்தை பிறந்த்து. அது வளர்ந்து மணப்பருவம் அடைந்த்து. வேளான் குல ஏயர்கோன்கலிக்காமர். எனும் சிவத்தொண்டர் இருந்தார், அவருக்கு பெண் கேட்டுப் பெரியோர் மனக்கஞ்சாறர் வீட்டுக்கு வந்தார். மனக்கஞ்சாறரும் சம்மதித்தார். திருமணநாள் குறித்து கஞ்சாறு திருமணக்கோலம் பூண்டது. அவர்கள் ஊர் வந்தடைய முன் சிவபெருமான் அங்கு எழந்தருளத் திருவுளம் கொண்டார். தமது நெற்றியின் மூன்று கீற்றாக திருநீறு அணிந்தார். திருமுடியின் நுனியில் எலும்பு மணியைக் கொண்டார். காதில் குண்டலமும், எலும்பாலான மணிகளைக் கொண்டதால் வடமும் இடுப்பில் உத்திரயமும் கரிய மயிரால் முறுக்கப்பட்ட பூணூலும் வெண்ணீற்றுப் பையும், முன்கையில் எலும்பு மணியைக் கோர்த்த கயிற்றையும் கட்டிக்கொண்டு, பஞ்ச முத்திரைகள் விளங்கும் திருவடிகள் மண்ணிலபட கஞசாறு வீதிகளில் நடந்தார். மாவிரத முனிவரின் வேடம் கொண்ட பெருமான் மனக்கஞ்சாறர் வீட்டை அடைந்தார். மனக்கஞ்சாறர் அன்புடன் வணங்கினார். மாவிரதர் இங்கு என்ன மங்கள நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று கேட்டார். அவர் தனது மகளுக்கு திருமணம் என்று கூறி மகளுடன் காலடியில் வீழ்ந்து வணங்கினார். மாவிரதரான இறைவன் மனக்கஞ்சாறரை நோக்கி உனது மகளது முடி எனது பஞ்சவடிக்கு பொருத்தமாயிருக்கும் என்றார். சிவனடியாருக்கு மனமுவந்து தனது மகளது முடியை அரிந்து மாவிரதர் கையில் கொடுக்க முயன்றதும் மாவிரதர் மறைந்தார். உமையுடன் காளையில் ஏறிக்காட்சி கொடுத்தார். மணப்பெண்ணின் கூந்தல் திரும்பவும் வளர்ந்து திருமணம் நடந்தது.

12 அரிவாட்டநாயனார்

காவிரி பாயும் சோழ நாட்டில் கண்ணமங்களம் ஒரு சிறந்த தலம். அங்கு வேளான் குலத்தில் அவதரித்தார் தாயனார். இவர் அக்குடிக்குத் தலைவர். இவர் நாள்தோறும் செந்நெல் அரிசிச் சோற்றையும், மாவடுவையும் இறைவனுக்கு அமுதாகப் படைத்து வந்தார்.
வறுமை வந்த போதும் செந்நெல்லை இறைவனுக்குப் படைத்து கார் நெல்லை தமக்கு உணவாக்கிக் கொண்டார். சிவபெருமான் அதனைமாற்ற எல்லாவற்றையும் செந்நெல்லாக விளையும்படி செய்தார்.
கார்நெல் இல்லாததால் மனைவியார் கீரைகளைச் சமைப்பார். ஒருநாள் இநைவனுக்கு படைக்க தாயனார் செந்நெல்லையும், மாவடுவையும், செங்கீரையையும் கூடையில் சுமந்து கொண்டு போக மனைவியார் ஒரு மண் கலத்தில் பஞ்சகவ்வியத்தை எடுத்துச் சென்றார்.
அப்போது திடீரென கால்கள் சோர கீழே விழுந்தார். மனைவியார் தலையிலிருக்கும் கலசமும் கணவரும் விழாமல் பிடித்தார். ஆனால் கூடையிலுள்ள செந்நெல், மாவடு, செங்கரை தரையிலுள்ள பிளவிலுள் விழுந்தன.
நான் என் செய்வேன் என்று தாயனார் நினைத்தார். படைக்க முடியவில்லையே என்ற கவலையால் தன்னுடைய தலையை அரிவாளால் அரியத் தொடங்கினார். மாவடுவைக் கடிக்கும் ஓசையான விடேல் விடேல் என்ற சத்தமும் கையும் வெடிப்பிலிருந்து எழுந்து தாயனாரின் கையைப் பிடித்தது.
சிவப்பரம்பொருள் காளையின் மீதேறிக் காட்சி கொடுத்து தாயனாரே நீ உன் மனைவியுடன் என்றும் நம் உலகில் நீங்காமல் வாழ்க என்று கூறி மறைந்தார்.

13 ஆனாய நாயனார்

மேல்மழநாட்டில் திருமங்கலம் என்னும் ஊர் உண்டு. நீர்வளம் மிக்க ஊர். இங்கு ஆயர் (இடையர்) குலத்தில் ஆனாயர் அவதரித்தார். தூய்மையான திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்டார். பசுக்களை மேய்ப்பவர். ஏழிசைகளில் வல்லவரான இவர் மூங்கிலில் துளை செய்து இசைப்பார்.
இசையில் ஒருநாள் ஐந்தெழுத்தை இசைத்தார். ஒருநாள் தலைமயிரை பக்கத்தில் உயரக்கட்டி பூச்சூடி காதுகளில் மலர்சூடி நெற்றியிலும் மார்பிலும் திருநீறு பூசி, முல்லைமாலை சூடி இடையில் மரவுரி தரித்து. செருப்பு அணிந்து மாடுகள் சூழ்ந்து வர வெளியில் புறப்பட்டார்.
கொன்றை மரத்தடியில் வந்து நின்று கொன்றைமாலை அணிந்த சிவனை நினைத்தார். கொன்றை மரம் சிவனாகக் காட்சியளித்தது. சிவபெருமானின் திருவைந்தெழுத்தை குழலில் வாசித்தார்.
எல்லா உயிர்களது காதுகளிலும் இசை எட்டியது. எல்லா விலங்குகளும் அசையாது கேட்டன. நாக லோகத்தவரும், தெய்வமகளிரும், வித்தியாதர்களும், சாரணர்களும், கின்னர்களும், தேவர்களும் வானுலகம் விட்டு அங்கு வந்தனர்.
பொன்னம்பலத்துப் பெருமானுக்கும் இசை எட்டியது. உமையாளோடு காளைமீதேறி சிவபெருமான் வந்தார். அவர் ஆனாயநாயனாரை எப்பவும் இசை கேட்க விரும்பி பொன்னம்பலத்துக்கு அழைத்துச் சென்றார்.

14 மூர்த்தி நாயனார்

பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில் வணிகர் மரபில் மூர்த்தி நாயனார் அவதரித்தார். இச்சிவபக்தன் மதுரையம்பதி பெருமானுக்கு தினமும் சந்தனத்தை அரைத்துக்கொடுத்து வந்தார்.
வடுகக் கருநாடக மன்னன் மதுரையைக் கைப்பற்றி மதுரையை ஆண்டுவந்தான். அவன் சமணசமயத்தைக் பின்பற்றி சைவசமயத்தவருக்கு கொடுமை செய்தான். மூர்த்தி நாயனாரையும் சமணமாக்க முயன்றான். முடியவில்லை. இதனைால் மூர்த்திநாயனாருக்கு சந்தனம் கிடைக்காதவாறு தடைசெய்தான்.
மூர்த்திநாயனர் மிகவருந்தினார். இதனால் தனது முழங்கையைத் தேய்த்தார். இரத்தம் ஒழுகி நரம்பும். எலும்பும் தேய்ந்து குறுகியது.
அன்றிரவு பெருமான் கனவில் தோன்றி உனக்குத் தீங்கு விளைத்த அரசன் தோற்று உன்னிடம் அரசு வரும் என்று கூறினார். கைப்புண் மாறி ஓர் ஒளியினைப் பெற்றார்.
வடுகக் கருநாடக அரசனும் அன்று இரவே இறந்தான். அமைச்சர்கள் நாட்டை ஆளும் அரசனை எப்படிப் பெறுவது என எண்ணினார். பின் ஒரு யானையைக் கண்கட்டிவிடுவோம் அந்த பானை யாரைக் கொண்டுவருகிறதோ அவரை அரசனாக்குவோம் என்ற தீர்மானித்தனர். யானை ஊரெல்லாம் திரிந்து கோவில் வாசலிலுள்ள மூர்த்தி நாயனாரை வணங்கி அவரைத்தன் பிடரியில் தூக்கி வைத்தது. அரண்மனையில் கொண்டு சென்று முடிசூட்ட ஆயத்தம் செய்யப்பட்டது. அப்போது மூர்த்திநாயனார் மங்களச் சடங்குகள் செய்பவரைப் பார்த்து சமண சமயம் வீழ சைவம் ஓங்கும் படி செய்வதானால்தான் தான் முடிசூட்டுவேன் என்றார்.
அமைச்சர்களும் சம்மதித்தனர். முடிசூட்டுவிழா நடந்தது. சைவநெறிப்படி உலகை ஆண்டார். பென்கள் தொடர்பை நீக்கி துறவு ஒழுக்கத்தை மேற்கொண்டார். இறுதியில் இறைவனடி சேர்ந்தார்.

15 முருகநாயனார்

கங்கையணிந்த சிவபெருமான் சோழநாட்டின் திருப்புகலூரில் எழுந்தருளியிருந்தார். இப்புகலூரில் வேதியர் குலத்தில் முருகனார் அவதரித்தார்.
சிவன் திருவடிக்கீழ் அன்பால் உருகும் தன்மையுள்ளவர். இவர் பூமாலைத் தொண்டு செய்பவா். திருஞானசம்பந்தருக்கு நண்பராவார். சிவபெருமானின் சிவ ஐந்தெழுத்தை எப்பவும் உச்சரிப்பார் திருஞான சம்பந்தரின் சிவம் பெருகும் திருமணத்தில் முன் செய்த சிவ பூஜையின் பயனால் கலந்துகொண்டு இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

16 உத்திரபசுபதிநாயனர்

சோழ நாட்டில் திருத்தலையூர் வளம்மிக்க நல்ல குடிமக்கள் திறைந்த ஊர். அவ்வூரில் அந்தணர்குலத்தில் பசுபதியார் உதித்தார்.
உருத்திரம் என்னும் மந்திரத்தை உச்சரிப்பவர். சிவபெருமான் மகிழ்ந்தார். அரிய தவத்தையும் மந்திரத்தையும் மக்களுக்கு உணர்த்தினார். இதனால் உருத்திர பசுபதி எனப் பெயர் பெற்றார். இறுதியில் ஆடும் திருவடிநிழலை அடைந்தார்.

17 திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்)

நிலவளம், நீர்வளம் மிக்க கொள்ளிடம் ஆற்றங்கரையில் வெளியே ஒரு புலிச்சேரி உள்ளது. அங்கு நந்தனார் அவதரித்தார். சிவன் திருவடிச்சிந்தனையுடனேயே வாழ்ந்தவர். அவர் செய்த வெட்டிமைத் தொழிலுக்காக ஊரார் மானியம் விட்டிருந்தனர்.
அதை உழுது அவ்வருமானத்தில் வாழ்ந்தார். இவர் கோவிலுக்கு வேண்டிய தோல்வகை, வீணைக்கு நரம்புகள், கோரோசனைகள் கொடுத்து வந்தார்.
ஆதனூருக்கு வடமேற்பக்கத்தில் திருப்புங்கூர் என்னும் தலம் உள்ளது. அங்கு சென்று சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினர். ஆனால் நந்தி மறைத்திருந்தது. சிவபெருமான் நந்திக்கு சற்று விலகுமாறு கட்டளை இட்டார். நந்திவிலகியது.
சிவபெருமானை நந்தன் தரிசித்தார் பின் ஆதனூர் நோக்கிப் புறப்பட்டார். அங்கு ஒரு பள்ளம் இருந்தது அதைக் குளமாக வெட்டினார். ஆதனூர் சென்று பின் பல தலங்களை வழிபட்டுப் பின் சிதம்பரத்திலுள்ள தில்லைக் கூத்தனை வழிபட விரும்பினார்.
அவர் குலத்திற்கு சிதம்பரம் போவது தகாது என்பதால் வருத்தமடைந்து நாளைபோவேன், நாளை போவேன் என்று எண்ணி பலநாள் கழிந்தன. ஒருநாள் சிதம்பரம் சென்றார்.
அங்கு பிராமணர்களால் செய்யப்படும் ஓமப் புகைகளை கண்டார். சிறுவர்கள் மறைகளை ஓதும் மடங்களைக் கண்டார். ஆனால் தான் பிறந்த குலத்தை எண்ணி உள்ளே செல்லாமல் தின்றார்.
பலநாள் வெளிப்புறத்தைச் சுற்றிவந்தார். எம்பிரான் நடனத்தை எப்படி வணங்குவது என்று கவலையுடன் தூங்கினார். அம்பலத்தாடும் பெருமான் கனவில் தோன்றி உன் இப்பிறவிப்பழி நீக்கி தீயில் குளித்து தில்லைவாழ் அந்தணர்களுடன் என்முன் வருவாயாக" என்று கூறினார்.
தெற்குத்திருவாயிலில் தீயை அந்தணர் மூட்ட நந்தனார் தீயைச்சுற்றி அதனுள் பிரவேசித்தார்.
நந்தனார் பூணுால் தரித்த முனிவர் வேடம் கொண்டுவந்தார் பின் பொன்னம்பலத்துள் பிரவேசித்து மறைந்தார்.

18 திருக்குறிப்பு தொண்டநாயனார்

தொண்டைநாட்டில் காஞ்சிபுரம் என்னும் ஊர் உள்ளது. அங்கு ஒரு புறத்தில் ஏகாலியர் குலத்தில் வண்ணார் ஒருவர் அவதாரம் செய்தார்.
அவா் சிவனடியார்களின் குறிப்பறிந்து தொண்டு செய்வதால் திருக்குறிப்புத் தொண்டர் எனப் பெயர் பெற்றார். துணியைத் தோய்க்கும் தொழிலுடைய அவர் சிவனடியார்களின் உடுப்பை தோய்க்க மிக விருப்பம் கொண்டார். துணிகளின் அழுக்கைப் போக்குவது போல் பிறவி அழுக்கையும் போக்கி வந்தார்.
இமையமலை நாதனாகிய சிவன் இவரது பொறுமையை உணர்த்த திருவுளம் கொண்டு சிவனடியாா் வடிவம்கொண்டு வந்தார். தொண்ட நாயனார் அவரது துணியைத் தரும்படியும் வெளுத்துக் கொடுப்பதாயும் வேண்டினர்.
அதற்கு சிவனான சிவனடியார் இரவு தளிர் தாங்க முடியாது ஆகவே பொழுது மறைவதந்தள் துணியை துவைத்துக் காயவைத்து தரவேண்டும் என்றார்.
நாயனர் சம்மதித்து உடுப்பை புழுங்கித் தோய்த்தார். முற்பகல் கழிந்தது. எதிர்பாராமல் மழைபொழிந்தது. இரவானது. அடியார் உடுப்பு உலராததால் அலறிக் கீழே விழுந்தார். எழுந்து பாறையில் தலையை மோதினார். சிவனது மலர்க்கை தடுத்தது.
சிவன் உமையுடன் காட்சிகொடுத்து நிலையான உலகில் இன்பம் பெறப்பண்ணினார்.

19 சண்டேசுரநாயனார்

சோழ நாட்டின் மண்ணியாற்றின் தென்கரையில் செஞ்சலூர் திருத்தலம் உண்டு. அங்கே எச்சதத்தன் என்னும் அந்தணர் வாழ்ந்தான். காசிய கோத்திரத்தில் பிறந்தவள். அவள் நல்வினை, தீவினை இரண்டையும் சேர்ந்த வடிவுடையவன்.
அவன் மனைவி பவித்திரை. இவரது வயிற்றில் சைவம் விளங்கும் “விசாரசருமா“ என்னும் மைந்தர் அவதரித்தார். அவருக்கு ஏழு வயதில் பூணூல் சடங்கு செய்ய வேதம் முதலியனவற்றை அவரை ஓதச் செய்தனர்.
ஆசிரியர்கள் விசாரசருமாலின் அறிவின் ஆற்றலைக் கண்டு மிக வியப்படைத்தனர் விசாரசர்மா. பெருமான் திருவடிகளை நினைத்து தம் கடமைகளைச் சிறப்பாகச் செய்தார். ஒருநாள் விசாரசருமா வேதம் ஒதும் மானவர்களுடன் வெளியே சென்றார். அப்போது பசுக்கூட்டம் போனது.
கன்றினை ஈன்ற இளம்பசு ஒன்று இடையனை முட்டியது. அதற்கு அவ்விடையன் அடித்தான். அவ் இடையன் மீது இரங்கி பசுக்கள் பெருமையை நாயனார் கூறினார்.
பசு எல்லா உயிர்களையும் விட மேலானது. தூய்மையான நீர்த்தங்களைக் கொண்டது. ஒவ்வொரு உறுப்புகளிலும் தேவர்கள், முனிவர்கள் உள்ளர். பஞ்சகவ்வியமான பால், தயிர், நெய், சாணம், நீர் ஆகியவற்றைக் கொடுப்பது, திருத்ததிற்குரிய சாணத்தையும் கொடுப்பது. பசு இல்லையேல் உயிர்களே இல்லை.
பெருமானும் உமையம்மையும் எழுந்தருளும் விடையும் இப்பசுக்குலமே என்றும், கன்றுடன் பசுவைக் காப்பதைவிட வேறு பேறு இல்லை என்றும் சொன்னார். பின் அவ் இடையனை இனிப்பசுக்களை மேய்க்க வேண்டாம் நானே பசுக்களை மேய்க்கிறேன் என்று கூறி அப்பசுக்களை சிறப்பாக மேய்த்து வந்தார்.
பால் மித்தியாகப் பொழிந்தது. அப்பால் வீணாகாமல் மண்ணி ஆற்றின் மரிமேட்டில் ஆத்தி மரத்தின்கீழ் சிவலிங்கத்தை மணலால் அமைத்து, கோவிலும் அமைத்து, அப்பாலால் அபிஷேகம் செய்து ஆத்தி மலர், செழுத்தளிரும் 1டி வழிபட்டார் இவ்வழிபாட்டை அறியாத ஒருவன் “ஆயன் பாலை மணல் மேட்டில் வந்துகிறான் ஆகவே நான் மாடுகளை மேய்க்கிறேன் என்று கூறி முன்வந்தான் விசாரசருமரின் தந்தை எச்சதத்தன்.
இவை உண்மையோää பொய்யோ என அறிய காலையில் மகனைத் தொடர்ந்து போய் மறைந்திருந்து பார்த்தார் வழமைபோல பாலினால் அபிஷேகம் செய்ய முற்பட்ட விசார சருமாவிற்கு ஓங்கி முதுகில் ஒரு அடி போட்டார். அன்பு முதிர்ச்சியால் விசாரசருமாவிற்கு எதுவும் பாதிக்கவில்லை. எச்சதத்தன் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பால்குடத்தை காலால் உதைத்ததால் அக்காலைத் தண்டிக்க நினைத்து பக்கத்திலுள்ள குச்சியை எடுத்தார். அக்குச்ச் மழுவானது. அதனால் தந்தையின் காலை வெட்ட எச்சன் கீழே விழுந்தான் அப்போது சிவபெருமான் உமையம்மையோடு காட்சி கொடுத்தார்ää “விசாரசருமரை நாமே தந்தை" என்று கூறி அனைத்தார். சிவபெருமான் அவரைத் தொண்டர்களுக்கு தலைவனாக்கினார். நாம் உண்ட பரிகலம்ää உடைää மாலைகள்ää அணிகலம் எல்லாம் உனக்கே உரிமையாகும். அதனால் அவற்றை ஏற்கும் சமசன் ஆகும் பதவி தந்தோம்” என்றருளினார். எச்சத்தன் சிவனது மழுவால் தண்டித்ததால் சிவபதம் அடைந்தான்.

21 குலச்சிறைதாயனார்

பாண்டிய நாட்டில் மனமேற்குடி என்ற ஊரில் வன்தொண்டர் எனும் பெருந்தொண்டரால் பெருதம்பி" என்று போற்றப்பட்ட குலச்சிறையார் அவ்வூரில் அவதரித்தார் சிவத்தொண்டரான அவர் கூன்பாண்டியனுக்கு முதலமைச்சராய் இருந்தார். சிவனருள் பெற சிவனடியார்களே காரணமாக இருப்பாரேன உணர்ந்து அவர்கள் காலடியில் விழுந்து வணங்குவார். அவர்களுக்கு திருவமுது கட்டுவார். சிவனடியார்களைப் போற்றுவார். நின்றசீர் நெடுமாற பாண்டியலுக்கு முதலமைச்சராக இருந்து புறப்பகைவரை ஒட்டி நாட்டைக் காத்தவர். சைவம் தழைக்கத் தொண்டு செய்த மங்கையற்கரசியாருக்கு தொண்டு செய்தவர். பாண்டிய நாட்டில் சமணர்களை ஒட்டி திருநீற்று நெறி சிறக்க திருஞானசம்பந்தரின் திருவடிகளை தலையில் தடியவர்ää சமணர்களைக் கழுவில் ஏற்றியவர்.

22 பெருமிழலைக்குறும்ப நாயனார்

பெருமிழலை நாட்டில் தாம்பர் மரபில் பெருமிழலைக்குரம்பர் அவதரித்தார். சிவதொண்டர்க்கு உணவளித்து வந்தார். இவர் திருத்தொண்டர் தொகைபாடிய சுந்தரமூர்த்தி நாயனாரை நினைத்து வாழ்ந்தார்.
அட்டமாசித்திகளைப் பெற்ற சுந்தரர் திருவஞ்சைக் களத்தில் சிவபெருமானை வணங்கி கயிலையை அடையப் போகிறார் என்பதை பெருமிழலைக் குரும்பர் மனதால் அறிந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பிரித்து வாழமாட்டேன் என்றும் யோக நெறியின் வாயிலாகக் கயிலை செல்வேன் என்றும் முடிவு செய்தார். தனது போக வன்மையால் சுந்தரர் சேர்வதற்கு முன் தான் கயிலையைப் போய்ச் சேர்ந்தார்.

23 காரைக்கால் அம்மையார்

காரைக்காலில் தனதத்தன் எனப்படும் வர்கர் தலைவனுக்கு புனிதவதி அவதரித்தார். வணிக முறைப்படி எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தனர். மணப்பருவம் அடைந்தார்.
நாகைபட்டினத்தில் நீதிபதியின் மகன் பரமதத்தனுக்கு பெண் கேட்டு தனதத்தன் மாளிகைக்குச் சென்றனர். அவன் ஒப்புக் கொண்டான். பின்னர் திருமணம் நடந்தது.
புனிதவதி ஒரே மகளாகையால் தனதத்தன் தன் மாளிகையை அளித்து அங்கேயே இருக்கப் பண்ணினான். தமது வீட்டிற்கு வரும் சிவனடியார்களுக்கு உணவும், தானமும் செய்தான்.
பரமதத்தனுக்கு கிடைத்த இரண்டு மாம்பழங்களை வீட்டுக்கு அனுப்பினார். அப்போது சிவனடியார் ஒருவர் புனிதவதியார் வீட்டிற்கு சென்றார். அவர் சிவனடியாருக்கு மாம்பழம் ஒன்றுடன் அமுதுபடைத்தார். சிவனடியார் உண்டு விடைபெற்றுச் சென்றார்.
பரமதத்தன் உணவுவேளைக்கு வீடு வந்தான். புனிதவதியார் உணவளித்து மற்ற மாம்பழத்தை இட்டார். பரமதத்தன் அது நன்றாக இருக்கிறது. அடுத்த மாங்கனியையும் கொண்டுவா என்றார்.
புன்தவதியார் உள்ளேபோய் சிவனை நினைத்து உருகினார். சிவன் ஒரு கனியை அளித்தார். பரமதத்தன் அதை உண்டுவிட்டு, இது முன்பு உண்ட கனியைவிட சுவையாக இருக்கிறது. இது உனக்கு எப்படி கிடைத்தது என வினாவினார்.
புனிதவதியார் நிகழ்த்ததைக் கூறினார். பரமனின் திருவருளை உணராத பரமதத்தன் அப்படியானால் இன்னொரு கனி பெற்றுவா என்றான். புனிதவதியார் பரமனை வேண்ட மாங்களி கிடைத்தது. அதைப் பரமதத்தன் கையில் கொடுத்தாள். அடுத்த கணம் அது மறைந்து விட்டது. பரமதத்தன் அச்சம் கொண்டு இவள் தெய்வப் பெண் என உணர்ந்து அவரை விட்டு விலகி கடல் கடந்து பாண்டிய நாட்டுக் கடற்கரையை வந்தடைந்தான்.
அங்கு ஒரு வணிகன் மகளை மணந்து ஒரு பெண் குழந்தை பெற்றான். இதனையறிந்த புனிதவதியாரின் சுற்றத்தார் புனிதவதியை பரமதத்தவிடம் சேர்க்க அழைத்துக் கொண்டு பாண்டியநாடு வந்தனர்.
பரமதத்தன் மனைவிமக்களைக் கூட்டிவந்து புனிதவதியார் காலில் வீழ்ந்து வணங்கி நான் உன் அருளால்தான் வாழ்கிறேன். உனது பெயரையே எனது மகளுக்கு சூட்டினேன் என்றான்.
சுற்றத்தார் அனைவரும் வணங்கினார்கள். புனிதவதியார் சிவனைவேண்டி அழகிய சதையை உதறிப் பேய் வடிவம் பெற்றார். விண்ணவர் மண்ணவர் வணங்கி நின்றனர்.
அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை ஆகிய இரண்டு நூல்களை அம்மையார் பாடியருளினார். பின் கயிலையை நோக்கித் தலையால் நடந்து சென்றார். அப்போது சிவன் "அம்மையே" எனக் கூறி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அம்மையார் தேவாரின் திருக்கூத்தைப் பார்த்து உன் சேவடியில் இருக்க வேண்டும் என்றார். அதன்படி பழையனூரிலுள்ள திருவாலங்காட்டில் திருக்கத்தைப் பார்த்து "கொங்கைதிரங்கி" எனும் திருப்பதிகம்பாடி சேர்ந்தார்.

24 அப்பூதியடிகள் நாயனார்

சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட திருநாவுக்கரசரை முன்பின் பாராத அப்பூதியடிகள் அவரது பாதங்களை நினைத்து வாழ்ந்திருந்தார். நல்ல சிவனடியார் அவரது உடமைகள், தொண்டுக் கூடங்களையும் திருநாவுக்கரசு பெயரையே கட்டினார். இவர் திங்களூரில் வாழ்ந்தார். திருநாவுக்கரசர் அங்குவந்தார். அங்குள்ள அப்பூதியடிகளின் தண்ணீர்ப்பந்தல்களில் தனது பெயர் சூட்டப்பட்டிருப்பதை அப்பர் கண்டு அங்குள்ளவர்களை இப்படிப் பெயரிட்டது யார் என வினாவினார்.
அவர்கள் அப்பூதியடிகள்தான் என்று சொன்னதைக் கேட்டு அப்பூதியடிகள் வீட்டிற்குச் சென்றார். அப்புதியடிகள் பெருமிதம் கொண்டு வரவேற்றார். பின் அப்பூதியடிகளை நோக்கி எனது பெயரைச் சூட்டியதன் காரணம் என்னவெனக் கேட்டார்.
அதற்கு அப்பூதியடிகள் சமணரை வென்ற உங்கள் பெயரைவிட வேறு எதுவும் நல்லதாக இல்லை என்று கூறினார். பின் அவரை உபசரித்து விட்டு, சிவனடியர் உண்ண உணவுசமைத்து விட்டுத் தம் மைந்தருள் ஒருவராகிய திருநாவுக்கரசனை இலைபறிக்க அனுப்பினார்.
அங்கே பாம்பு கடித்து விஷம் ஏறியது. அப்படியிருந்தும் இலையை வீட்டில் சேர்த்து விட்டு மைந்தன் இறந்தான். அதனை மறைத்து அப்பூதியடிகள் திருநாவுக்கசருக்கு உணவு படைக்க முயன்றனர். நாவுக்கரர் குறிப்பால் உணர்ந்து மைந்தனை இசைபாடி விஷத்தை நீக்கி எழும்பச் செய்தார்.
பின் உணவு உண்டார். சிலகாலம் திருநாவுக்கரசர் அங்கிருந்தார். நாவுக்கரசர் திருவடிகளையே தியானித்து அப்பூதியடிகள் இறைவன் திருவடிகளை அடைந்தார்.

25 திருநீல நக்க நாயனார்.

சோழநாட்டில் திருசாந்த மங்கை என்ற தலத்தில் உலகப்புகழ் பெற்ற நீலநக்கர் அவதரித்தார். நான்கு வேதங்களையும் கற்று சிவதொண்டு செய்பவர். சிவனடியார்களை உபசரிப்பவர். அர்ச்சனைகள் செய்பவர். ஒரு திருவாதிரையின்போது சிவபூசை முடிந்து அயவந்தி (சாந்தமங்கை) என்னும் திருக்கோவிலில் அர்ச்சனை செய்ய எண்ணி, அங்கு போய் சிவபூசை செய்து இனிதே நிகழ்ந்து கொண்டிருத்தது.
ஆனால் அவர் கொண்டிருந்த அன்பு மிகுதியால் பூசையில் அவருக்கு நிறைவு ஏற்படவில்லை. அதனால் திருவைந்தெழுத்தை மனதில் நினைத்து கோவில் வலம் வந்து கற்பக்கிரகத்தில் பிரவேசிக்கும் போது ஒரு சிலந்தி சிவலிங்கத்தில் வீழ்ந்ததை அவர் மனைவி கண்டார்.
பதைத்து நின்ற அவர் அச்சிலையை வாயால் ஊதினர். அப்போது அவரது எச்சில் சிவலிங்கத்தில் பட்டது. இதனைக்கண்ட திருநீலகண்டர் அவளைத் துறத்தேன் என்றார்.
மனைவியர் அவர் சொற்படி விலகினார். நீலநக்கர் சிவலிங்கத்தைக் கழுவிப்பின் வீடு சென்றார். மனைவியார் அயவந்திப் பெருமான் சந்திதியில் தங்கினர். அன்றிரவு பெருமான் நீலநக்கரின் கனவில் தோன்றி அவரது மனைவியாரின் சிவபக்தியை விளக்கி அம்மங்கையின் எச்சில் பட்ட இடம் தவிர மற்ற இடமெல்லாம் கொப்புள் இருப்பதையும் காண்பாயாக என்று கூறினார்.
நீலதக்கர் தன் மனைவியை உணர்ந்தார் கோவில் போய் தம்மனைவியை வீட்டுக்கு அழைத்துவந்தார். சீர்காழியில் திருஞானசம்பந்தரை வணங்க ஆசைகொண்டார். அப்போது ஞானசம்பந்தர் திருச்சாந்த மங்கைப் பெருமானை வணங்க அங்கு வந்தார். திருஞானசம்பந்தரும். திருநீலகண்டயாழ்ப்பாணரும். அவரது துணைவியார் மதங்க்கசூளாமணியாரும் வந்து அங்கு ஒன்று கூடிஇருந்தனர். பல நாட்கள் கழித்து சீர்காழிப் பெருமாள் ஞானசம்பந்தரது திருமணத்தை சேவித்து சம்பந்தருடனேயே சிவபெருமான் திருவடிகளைச் சேர்ந்தார்.

26 நமிநந்தியடிகள்

திருவாரூருக்கு அருகாமையிலுள்ள ஏமாப்பூரில் அவதரித்தார். அந்தணர் குலத்தவர் சிவனை வழிபட்டு திருநீறே உண்மைப் பொருளோ வாழ்பவர். நாள்தோறும் திருவாரூர் புற்றிடம் கொண்ட ஈசனை வணங்கி அரனெறி கோவிலுக்குச் சென்றார். அக்கோவிலில் எண்ணற்ற தீபம் ஏற்ற ஆசைப்பட்டு ஒரு வீட்டில் போய் எண்ணை கேட்டார். அவர்கள் சமணர்களாகையால் கொடுக்கவில்லை. நீங்கள் விரும்பினால் தண்ணீர் விட்டு விளக்கை ஏற்றுங்கள் என்று கூறினர். நமிநந்தியடிகள் கவலையோடு கோவில் சென்று பெருமானை வணங்கிநின்றார்.
பெருமான் அசரீாியாக "பக்கத்தில் உள்ள குளத்தின் நீரை எடுத்து விளக்கேற்று என்று கூறியது. அதன்படி நீரால் விளக்கேற்றினார். விளக்குகள் எரிந்தன. ஒருநாள் திருவாரூர் தியாகேசப் பெருமான் திருமணிலி என்ற ஊரில் எழுந்தருளினார். எல்லாக் குலத்தவரும் அவரை வணங்க அத்துடன் நமிநந்தியடிகளும் சேர்ந்து வணங்கினார். இரவு வீட்டிற்கு வந்து அவர்களுடன் கூடியிருந்ததால் தீட்டுப்பட்டது எனச்சொல்லி வெளியே நீர்கொண்டுவா என மனைவியாரிடம் கேட்டார். அவர் நீர் கொண்டு வருமுன் நமிநந்தியடிகள் உறங்கிவிட்டார். அவரது கனவில் இறைவன் தொண்டி திருவாரூரில் பிறந்த எல்லோரும் சிவகணங்களாகக் கண்டார். தொண்டுகள் பல புரிந்து இறைவனடி சேர்ந்தார்

28 ஏயர்கோன் கலிக்காம நாயனார்

கலிக்காமர் சுந்தரருடன் சேர்ந்து மிகவும் நெருக்கமாகப்பழகி திருவாரூரில் தொண்டு செய்து வாழ்ந்தவர். இறைவன் சுந்தரர்க்காக பரவையாரது மாளிகைக்குத் தூது சென்று சுந்தரரையும் பரவையாரையும் மணம் முடித்து வைத்தார். இறைவனைச் சுந்தரர் தூதனுப்பியது தவறான செயல் என்று கலிக்காமர் சுந்தரர் மேல்கோபம் கொண்டார். இறைவன் இருவரையும் ஒன்று சேர்ப்பதற்காக ஏயர்கோன் கலிக்காமருக்கு சூல நோயைக் கொடுத்து இறக்கப்பண்ணி மீண்டும் சுந்தரரால் எழப்பண்ணி இருவரையும் நண்பர்களாக்கினார். இருவரும் கூடித்திருப்புங்கூர் போன்ற தலங்களை வணங்கி அங்கிருந்து திருவாரூர் சென்று அங்கு கலிக்காமர் சிவ தொண்டுகள் செய்து இறைவனடி சேர்ந்தார்.

29 திருமூலதேவ நாயனார்

திருக்கயிலையில் நந்திதேவரிடம் உபதேசம் பெற்ற சிவயோகி ஒருவர் இருந்தார். அவர் பெயர் சுந்தரர். நந்திதேவரால் நாதர் எனவும் அழைக்கப் பெற்றார். பொதிகைமலையிருக்கும் அகஸ்தியருடன் நட்புக்கொள்ளவிரும்பி அங்கு புறப்பட்டார். திருக்கேதாரம், நேபாளம் முதலிய பதிகளைப் பணிந்து கங்கையில் நீராடி காசி, திருவாலங்காடு முதலிய பதிகளை வணங்கி திருக்காஞ்சி அடைந்தார்.
அங்கு முனிவர்களைச் சந்தித்து திருவதிகை சிதம்பரம் முதலிய தலங்களை வணங்கிக் காவிரிக் கரையை அடைந்து நீராடச் சென்றார். அங்கு மேயச் சென்ற பசுக்கள் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்தன. அது யாதெனச் சிந்தித்தார். மூலன் என்னும் பெயருள்ள இடையன் பாம்பு கடித்து இறந்ததால் அதைச்சுற்றிப் பசுக்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். உடனே தனது உடலை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு உயிரை இடையரது உடலில் ஏற்றினார் மாலையானதும் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் செல்ல மூலர் அங்கு ஒரிடத்தில் இருந்தார். இறந்து போன இடையன் மனைவி அவனைத் தேடி அங்கு வந்தாள். தன் கணவரை வீட்டிற்கு அழைக்க அவ்வுருவில் இருந்த திருமூலர் திரும்பவில்லை.
அவர் சிவயோகத்தில் இருப்பதைக் கண்டு மனைவி அழுது புரண்டாள். அங்கிருந்தோர் அவளை வீட்டிற்கு கூட்டிச் சென்றனர். திருமூலர் நிஸ்டையிலிருந்து எழுந்து தனது உடலைத் தேடினார். இறைவரே அவ்வுடலை மறைத்தார்.
திருமூலர் திருவாவடுதுறை சென்றார். இறைவனை வணங்கி அங்குள்ள கோவிலின் மேற்கேயுள்ள அரச மரத்தின் கீழே இருந்து ஆண்டொன்றுக்கு ஒரு செய்யுளாக மூவாயிரம் செய்யுள்களை இயற்றினார். திருமந்திரம் என்ற அந்த நூலைப்பாடி திருக்கயிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

30 தண்டியடிகள் நாயனார்

திருவாரூர் திருத்தலத்தில் தண்டியடிகள் அவதரித்தார். பிறக்கும் போதே பார்வை இல்லை ஞானக்கண்ணால் இறைவரைக் கண்டுகளித்தார். திருக்கோவிலுக்கு மேற்குப் புறம் இருக்கும் கமலலாயம் என்னும் குளத்தடிக்கு வந்தார். பார்வை இல்லாது போனாலும் குளத்தைத் தோண்டினார்.
சமணர்கள் எதிர்த்து வாதிட்டனர். பின் மண்வெட்டியையும் பறித்து எறிந்தனர். தண்டியடிகள் இறைவனிடம் முறையிட்டார். இறைவன் கனவில் தோன்றி உன்கண் ஒளி பெறும் சமணர்கள் அழிவர் என்று கூறினார். அரசனிடமும் கனவில் தோண்டச் செய்தார். சமணர்கள் கண்களை இழந்தனர். தண்டியடிகள் கண்ணொளி பெற்று சிவதொண்டுகள் செய்து சிவபதமடைந்தார்.

31 மூர்க்க நாயனார்

தொண்டை நாட்டுப் பாலியாற்றடியில் உள்ள ஊரில் வேளாள குலத்தில் மூர்க்க நாயனார் அவதரித்தார். இவர் அடியார்க்கும் அமுதம் கொடுப்பவர். வேண்டுவதையும் கொடுப்பவர். இதனால் வறுமை வந்தது. ஒரு சிறு பொருளும் இல்லாமல் போயிற்று.
இவர் முன்பே சூதாடத் தெரிந்தவர். சூதாடி வென்று அடியார் திருப்பணி செய்பவர். அவர் ஊர் ஊராக சூதாடி வரும் போது கும்பகோணம் வந்தது. அங்கு சூதாடிப் பெரும்பொருள் பெற்று அடியார்க்கு அமுது படைத்தார்.
சூதாடித் தோற்றோர் பொருள் தராவிட்டால் உறைவாளால் குத்திவிடுவார். இதனால் நந்துதர்ää மூர்க்கர் எனப் பெயர் வந்தது. பல ஆண்டுகள் திருப்பணி செய்து பிறவா முத்தி பெற்றார்.

32 சோமாசிமாற நாயனார்

திருவம்பர் தலத்தில் சந்தனர் தலத்தில் சோமாசிநாயனார் அவதரித்தார். சிறந்த சிவவிதிப்படி வேள்வி செய்ததால் சோமாசி எனப் பெயர் பெற்றார். சிவனடியாருக்குத் திருவமுது படைப்பவர். திருவாரூர் சென்று சுந்தரரது நட்புப் பெற்றவர். சுந்தரரது திருவடியைப் பற்றிச் சிவலோக வாழ்வுச் சிறப்பினைப் பெற்றார்.

33 சாக்கியநாயனார்

திருச்சங்கமங்கையில் வேளாளகுலத்தில் சாக்கிய நாயனார் உதித்தார். கலைகள் பல பயின்றார். பிற உயிர்களில் அன்பும் அருளும் காட்டுவார். இனிப் பிறப்பெடுக்காது இப்பிறவியிலேயே பிறப்பறுக்க வேண்டும் என்று நினைப்பவர்.
காஞ்சிபுரம் சென்று பௌத்த நூல்களைக் கற்றார். மற்ற சமயங்களையும் ஆராய்ந்தார். சைவசமயமே பிறவி நோய்க்கு மருந்தென உணர்ந்தார். அவர் பௌத்த சமயத்திலிருந்தே நெஞ்சைக் கோவிலாக்கி அன்பு மலரிட்டு அருச்சித்தார்.
சிவலிங்கத்தைக் கண்ணால் பார்த்தபின்தான் உண்ணவேண்டும் என்ற கொள்கையை மேற்கொண்டார். ஒருநாள் வெட்ட வெளியில் ஒரு சிவலிங்கத்தைப் பார்த்தார். ஆனந்தக் களிப்பால் சிவலிங்கத்தின் மேல் கற்களை வீசுவார். சிவன் அவற்றை மலராகப் பாவிப்பார். சிவபெருமான் விண்ணில் காட்சி கொடுத்து சிவலோக அடிமைத்திறம் அளித்து மறைந்தார்.

34 சிறப்புலி நாயனார்

சோழவள நாட்டில் திருவாக்கூர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் சிறப்புலிதாயனார் அவதரித்தார். இல்லையென்று வந்தவர்க்கு இல்லையென்னாது கொடுப்பவர். சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வேள்விகளும் பல செய்து ஈசன் திருவடிநிழலை அடைந்தார்.

35 சிறுத்தொண்டநாயனார்

சோழவளநாட்டின் வளம்வாய்ந்த திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் தலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். அவர் மருத்துவ நூலையும், வடகலைகளையும், தூய்மையான படைத்தொழிலையும், யானை குதிரை ஏற்றமும் கற்று மேம்பட்டவராய் விளங்கினார். சிவனடியார்க்குத் தொண்டுகள் செய்து போர்கள் பல செய்து வெற்றி பெற்ற சிறந்திருந்தார். அரசர் பரஞ்சோதியாரது சிவதொண்டை மதித்து போர்த் தொழிலை நிறுத்தி அவருக்கு வேண்டிய பொருட்களைக் கொடுத்து படைப்பதவியிலிருந்து விலக்கினார்.
பரஞ்சோதியார் தம் ஊரான செங்காட்டங்குடியை அடைந்து கணபதீச்சரம் என்ற பெருமானை வணங்கி சிவதொண்டைத் தொடர்ந்தார். திருவெண்காட்டு நங்கை எனும் மனைவியாளோடு சிவத்தொண்டு செய்து தன்னைச் சிறியவராகக் கருதியதால் சிறுத்தொண்டர் எனப்பெயர் பெற்றார்.
சீராளத்தேவரென்ற மைத்தரைப் பெற்றார். அந்தாளில் திருஞானசம்பந்தரும் சிறுத்தொண்டரைப் போற்றிப்பாடினார். கயிலை நாதராகிய சிவன் பைரவவேடம் கொண்டு சென்றார். அவ்வமயம் சிறுத்தொண்டர் அடியார்களைத் தேடிப் போயிருந்தார். அவரது மனைவியார் பைரவரை வீட்டில் அமரச் சொல்ல தான் பைரவ வேடம் பூண்டதால் பெண்கள் தனியே இருக்கும் இடத்திற்கு வரமாட்டேன் என்றும் சிறுத்தொண்டரைக் கணபதீச்சரத்திற்கு அருகாமையிலுள்ள திருவாத்தி மரத்திற்கு வரும்படி சொல் என கூதி சென்றார்.
சிறுத்தொண்டர் அருகாமையில் யாரும் அகப்படாததால் மனம் வருந்தி வீடு வந்து சேர்ந்தார். மனைவியார் பைரவ வேடம் கொண்ட சிவனடியார் வந்ததாயும் அவர் திருவாத்தி மரத்தடியில் இருப்பதாயும் சொன்னார். சிறுத்தொண்டர் அங்கு சென்றார். அங்கு சங்கரரை நோக்கி வீட்டுக்கு வந்து உணவு உண்ணும் படி பணிந்தார் பைரவக் கோலம் கொண்ட இறைவன் அன்பனே நான் ஆறுமாதத்திந்து ஒரு முறைதான் உணவு உண்பேன். அதுவும் ஒரு பசுவை அடித்து அதை உணவாக இடவேண்டும் என்றார்.
சிறுத்தொண்டர் தம்மிடம் பசு இல்லை என கூறப் பைரவர் பசு என்பது மானிடப்ப அதுவும் ஐந்து வயது நிரம்பியதாகவும், தாய் தகப்பனுக்கு ஒரே குழந்தையாகவும் இருக்க வேண்டும் என்றும், அப்பசுவை தாய் பிடிக்கத் தகப்பன் வெட்ட வேண்டும் என்றும் கூறினார். சிறுத்தொண்டர் அதற்குச் சம்மதித்து தனது மகன் சிங்கமரை அழைத்துவந்து அமரப்பண்ணிவிட்டு, தமது மைந்தனையே மனைவியார் பிடிக்க அரியத் தொடங்கினார்.
தாய் தகப்பன் முகமலர்ச்சியைக் கண்டு சீராணத்தேவரும் மகிழ்ந்து சிரித்தார். கறியைச் சமைத்தார். சங்கமா் வீடு சேர்ந்தார் அமுது படைக்கப்பட்டது. அப்போது அவர் ஒரு நிபந்தனை விதித்தார். யாராவது ஒரு சிவனடியாருடன் தான் சேர்ந்து சாப்பிடுவேன் என்றார்.
சிறுத்தொண்டர் வெளியே சென்று சிவனடியார் யாரும் இல்லாததால் திரு நீறணிந்த என்னை எற்றக் கொள்வீகளா என்று கேட்டார். சங்கமர் ஒத்துக் கொண்டார். இலையில் பரிமாறப்பட்டது. பயிரவ சங்கமரை விரைவாக உண்ணப் பண்ணும் பொருட்டு சிருத்தொண்டர் தாம் உண்ணத் தொடங்கினர். அப்போது சங்கமர் சிருத்தொண்டரை தடுத்து உனக்கு மகன் இருந்தால் அவனை என்னோடு உண்ண அழையும் என்று கட்டளை இட்டார். சிறுத்தொண்டரும் மனைவியும் வெளியே வந்து அலறினர். சீராளத் தேவர் பாடசாலையால் வருவது போல் வந்தார். அவர்கள் உள்ளே போக சங்கமர் மறைந்தார். வானில் பைரவ வடிவத்துடன் சிவனும், பார்வதியும் முருகனும் காட்சி கொடுத்தனர். அவர்களை சிவலோகத்துக்கு அழைத்தார்.

36 கழற்றிற்றிவார் நாயனார்
(சேரமான் பெருமான் நாயனார்)

சேரநாட்டில் கொடுங்கோளூரில் சேரர் குலத்தில் பெருமாக்கோதையார் அவதரித்தார். அவர் அரசாட்சித் தொழிலைச் செய்யாது திருவங்சைக் களத்துப் பெருமானுக்கே திருத்தொண்டுகளைச் செய்து வந்தார். அந்நாட்டைக்காத்த செங்கொற்பொறயன் என்னும் சேரமன்னன் அரசியலைத் துறந்து வாழ்க்கை நடத்தினார். இதனால் சேரநாடு பொலிவிழந்தது. அமைச்சர்கள் பெருமாக்கோதையை சென்றடைந்து அரசை ஏற்று நாட்டைக் காக்க வேண்டும் என்றனர்.
சிவபக்தியிலிருந்து விலகாமல் அரசு புரியத் திருவருள் கிடைக்குமானால் அரசு புரிவேன் என்று சொல்லிக் கோயிலை அடைந்து விண்ணப்பித்தார். பெருமாக்கோதையார் யானை மேலேறி வந்த போது வண்ணான் ஒருவன் மண் மூட்டையைத் தூக்கிவரும் போது மழை பெய்ததால் அம்மண் உடலில் வழிய அது திருநீறெனக் கருதி பெருமாக்கோதையார் யானையிலிருந்து இறங்கிவந்து வண்ணாரைக் கும்பிட்டார்.
வண்ணான் மனம் கலங்கி வணங்கி அரசே என்னை யாரென்று நினைத்து வணங்கினீா்கள் என்று கேட்டு கண்ணீா் சொரிய நின்றான் அடியேன் படிச்சேரன் நீ உண்மைச் சிவனடியாரல்லாது இருந்தாலும் சிவத்திருவேடத்தை நினைவூட்டினீா். வருந்தாமல் செல்வீராக என்றார். இறைவன் விண்ணப்பப்படி மதுரையிலுள்ள பாணபத்திரனுக்கும் பெரும் பொருள்களைக் கொடுத்தார். எல்லா உயிர்களும் சொல்வனவேயல்லாம் நாயனாருக்குத் தெரிந்ததால் அவருக்கு “கழறிற்றிவார்" என்ற பெயர் உண்டாயிற்று.
மாக்கோதை என்ற சேரமான் சிதம்பரத்தை அடைந்து “பொன்வண்ணத்தந்தாதி" பாடி பின் சுந்தரரை சந்திக்கத் திருவாரூர் சென்றார். சந்தரரைச் சந்தித்து இருவருமாக நாகப்பட்டிணம் முதலான பதிகளைப் போற்றித் திருமறைக்காட்டைத் தரிசித்து மதுரை சென்று பாண்டிநாட்டுத் தலங்களை தரிசிக்கப் புறப்பட்டனர்.
திருப்புவனம், திருவேடகம், திருக்குற்றாலம். திருநெல்வேலி, திருவிராமேச்சரம் முதலியன திருத்தலங்களை வணங்கினர். இராமேச்சரத்தில் இருந்தபடியே ஈழநாட்டுத்திருப்பதியான திருக்கேதீச்சரத்தை பணித்தனர். பின் மலைநாட்டுக்கு வந்து திருக்கண்டியூர், திருவையாறு சென்று வணங்கி சுந்தரர் திருவாரூர் திரும்பினார். சேரமான் மிக வருந்தினார். சேரமான் மாக்கோதை நகரில் இருந்து சுந்தரர் திருவடிகளை நினைத்து ஆண்டார்.

37 கணநாததாயனர்

திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழியில் கணநாதர் அவதரித்தார். அவர் சிவதொண்டு செய்து மற்றவர்களுக்கும் கற்பித்துவந்தார். திருஞானசம்பந்தரிடம் மூன்று வேதங்களையும் கற்று கைலையில் சென்று சிவ கனங்களுக்குத் தலைவர் ஆனார்.

38 கூற்றுவநாயனார்

இவர் திருக்காளத்தியில் அவதரித்தார். இவர் ஈசரடியை நாவினால் சொல்பவர். அவர் போரில் ஈடுபட்டு பல நாடுகளை வென்று அரசு செல்வங்களை பெற்நார். அதனால் முடிாட ஆசைப்பட்டார். முடிகட்டும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே உரியது. அவர்களிடம் போய்க் கேட்க அவர்கள் மறுத்துவிட்டனர். சோழர்களன்றி மற்றோர்க்கு முடிகட்ட முடியாது என்றனர். அவர்கள் கூற்றுவநாயனாருக்கஞ்சி சேரநாட்டை அடைந்தனர். அப்போ மணிமுடியைக் காக்கும்படி அவர்களில் ஒருவரை வைத்துச் சென்றனர். கூந்தவநாயனார் மனம் வருந்தி இறைவனை வேண்ட இறைவன் தனது மலரடியை அவனது தலையில் சு10ட்டினார். நாயனர் பெரும் பூசைகள் இயற்றி இறைவனடி சேர்ந்தார்.

39 புகழ்ச்சோழ நாயனார்

சோழர்கள் இமயத்தில் கொடிநாட்டி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். அங்கிருந்து ஆட்சி செய்தவர் புகழ்ச்சோழநாயனார். பகைமன்னரும் அவரிட்ட கட்டளைப்படி நடத்து நீதிநெறி தவழ்ந்தது. ஒருநாள் சிவனடியாரின் மலர்க்கூடையை சோழரது மதயானை பிடுங்கி எறிய எறிபத்த நாயனார் அதனை வெட்டிச் சாய்த்தார். தன் யானை செய்த பிழைக்குத் தன்னையே வெட்டச் சொன்னவர். ஒருநாள் அதிகன் என்பவன் திறைப்பொருள் செலுத்தாமல் இருப்பதையறிந்து அவனை அழிக்கும்படி கூறினர். அதிகன் போரில் தோற்றுகாட்டில் மறைத்தான். பகைவனது இறந்த உடல்களை அரசன்முன் இட்டனர். அதில் ஒருதலையில் சிறு சடைகண்டார். அது சிவனடியாராக இருக்க வேண்டும் என் கலங்கி தனது ஆட்சியை மகனுக்குச் சூட்டினார். அப்பழியை நீக்க செந்தீயை மூட்டி சிவநாமம் ஒதி தீயில் இறங்கினார். மலர்மழை பொழிய மங்கள வாத்தியங்கள் முழங்க இறைவனடி சேர்ந்தார்.

40 நரசிங்கமுனையரைய நாயனார்

நடுநாட்டிலுள்ள திருமுனைப்பாண்டி நாட்டில் நரசிங்கமுனையார் அவதரித்தார். அவர் அறநெறிதவறா அரசர் சிவக்ஷயார்ர்களுக்குத் தொண்டு செய்வதிலும், கோவில் பொருட்களைக் காப்பதிலும் சிறந்தவர் அவர் அடியார்களுக்குப் பொன் கொடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒருவர் காமக்குதிகள் தெரிய மானம் அழிந்தவராய் சைவவேடம் பூண்டு அங்கு சென்றார்.
அருகிலிருந்தவர் வெடித்து ஒதுங்க நரசிங்கர் அவ்விடம் சென்று வணங்கிப் பாராட்டி உபசரித்தார். சிவனடியார்கள் ஒழுக்கம் இல்லாதவர்களாயினும் அவரைப் பழிப்பவர்கள் நரகத்தை படைவர் என உணர்ந்து அரசன் அடுத்தவர்களுக்கு கொடுத்ததை விட இரு மடங்கு பொன் கொடுத்து அனுப்பினார். அவ்வாறு திருத்தொண்டு செய்து சிவனார் கழலடைந்தார்.

41 அதிபத்த நாயனார்

சோழநாட்டில் பரதவர் வாழும் இடமாகிய நாகப்பட்டினத்தில் பரதவர் குடியில் பிறந்தவர் அதிபத்த நாயனார். அவர் பரதவர் தலைவன். இவர் வலைவீசிப் பிடித்த மீன்களில் ஒரு பெரிய மீனை சிவபெருமானுக்கென்றே கடலில் விடுவார் பல நாட்கள் ஒரு மீன் மட்டும் பிடித்ததால் அதைக்கூட கடலிலேயே விட்டு வந்தார் இதனால் வறுமை வந்தது. உடல் மெலிந்தது. இந்திலையிலும் தன் கொள்கையிலிருந்தும் விலகவில்லை. ஒருநாள் பொன்னாலும் தவமனிகளாலும் அலங்கரித்த மீன்னொன்று அகப்பட்டது. அதையும் இறைவனுக்கே விட்டார். இவ்வுலகிலுள்ள பற்றுக்களை நீத்தார். அவன் முன்பு பெருமான் காளை ஊர்தி மேல்வந்து காட்சியளித்தார்.

42 கலிக்கம்ப நாயனார்

திருப்பொன்னாகடத்தில் வணிகர் குலத்தில் கலிக்கம்ப நாயனார் அவதரித்தார். சிவனன்பால் சிவனடியாரை உபசரிப்பவர். வழக்கம்போல கலிக்கம்பதாயனார் வீட்டிற்கு அடியார்கள் வந்தனர். மனைவியார் கரகதீர் வார்க்க தாயனார் திருவடிகளை விளக்கினர்ää ஒரு அடியார் காலை விளக்க முற்பட்டபோது மனைவியார் நீர் வார்க்கவில்லை. ஏன் வார்க்கவில்லை என்று கேட்டார். மனைவியார் அந்த அடியாரைக் காட்டி இவர் முன் எமது வீட்டில் வேலை செய்தவர்ää தம் மீது முனிந்து வேலையை விட்டுச் சென்றவர் என்று கூறினார். நாயனார் பெருஞ்சினம் கொண்டு மனைவியாரது கையை வெட்டினார். பின் தன்கையாலேயே நீர் விட்டு விளக்கி - முதிட்டார். பின்னர் இறைவன் திருவடி சேர்ந்தார்

43 கலிய நாயனார்

தொண்டை நாட்டின் திருவொந்தியூரில் சக்கரப்படித் தெருவில் செக்காடும் மரபில் கலிய நாயனார் அவதரித்தார். பெரும் செல்வர். திருவொற்றியூருக்கு இரவு பகல் விளக்கேற்றி வந்தார். செக்குத் தொழில் தின்றது. எண்னை கிடைக்காததால் வீட்டை விற்று விளக்கேற்றினார். கடைசியில் மனைவியை விற்க எண்ணி பெரும் செல்வந்தர் வீடெல்லாம் சென்றார். யாரும் கேட்கவில்லை. அதனால் கோவில் சென்று தன் கருதியால் விளக்கெரியச் செய்ய விரும்பித்தன் உடலைச் சிதைக்கத் தொடங்கினார். இறைவன் கவரது கைகளைப் பிடித்ததளிக்காட்சி கொடுத்தார். சிவன் சிவலோகத்தில் விளக்கேற்றத் திருவருள் புரிந்தார்.

44 சக்திநாயனார்

சோழ நாட்டில் வருஞ்சையூரில் வேளாளர் குலத்தில் சக்தி நாயனார் பிறப்பெடுத்தார். அவர் சிவனடியார்களை இகழ்பவரது நாக்கை இழுத்து கத்தியால் கசப்பவா இகழ்பவர்கள் இம்மையிலும்ää மறுமையிலும் நரகம் அடையாமல் அப்படிச் செய்தார். அப்பணியைச் செய்து சிவபதமடைந்தார்.

45 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

பல்லவர் மரபில் பிறந்த இவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். சைவத்திருநெதியால் ஆட்சி செய்தார். தென்மொழி வடமொழிக் கலைகளைப் பயின்றார். அவருக்கு விண்ணுலக ஆசை வந்தது மகனிடம் ஆட்சியை ஒப்படைத்து சைவத் தொண்டில் ஈடுபட்டார். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சேத்திர வெண்பா பாடி அழியாப் பேரின்பம் பெற்றார்.

46 கணம்புல்ல நாயனார்

வெள்ளாற்றிற்குத் தென்கரையிலுள்ள இருக்கு வேலூரில் கணம்புல்லர் அவதரிந்தார். பெரும் புகழும்ää செல்வமும் கொண்ட அவர் சிவபிரானடியில் சித்தையைச் செலுத்தி வந்தார். விளக்கேற்றும் பணியில் சிறந்தவர். சிதம்பரத்திலும் விளக்கேற்றினார். வறுமை வந்தது. வீட்டிலுள்ள பொருட்களையும் விந்து விளக்கேற்றினார். பொருளும் இல்லாமல் போக பிறரைக் கேட்க அஞ்சினார். பின் கணம் என்னும் புல்லை விளக்காக ஏற்றினார். சிவபெருமான் அவருக்கு சிவலோகம் அளித்தார்.

47 காரி நாயனார்

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய நாயனார் திருக்கடவூரில் அவதரித்தார். கரிகோவை என்னும் நூலை எழுதி மூவேந்தரது நட்பைப் பெற்றார். அரசர்கள் பொருள்கள் வழங்கினர். அவர் அதைக் கொண்டு கோவில்கள் கட்டினார். அடியார்க்கு அருளினார். அவரது சித்தையில் கைலை இருந்தது. அவர் நினைத்திருந்தது போல கைலையை அடைத்தார்.

48 நின்றசீர் நெடுமாற நாயனார்

பாண்டிநாட்டு மன்னர். இவர் சமணராக இருந்து திருஞான சம்பத்தரால் சைவரானார். வடநாட்டு மன்னர் திருநெல்வேலியை முற்றுகையிட அவர்களை வென்று வாகை சு10டியவர். அவர் இறைவனடி மநவாமல் பிறவாப் பேறு அடைந்தார். திருஞானசம்பந்தர் புராணத்தில் விரிவாக உள்ளது.

49 வாயிலார் நாயனார்

தொண்டை நாட்டில் மயிலாப்பூரில் வேளாள தலத்தில் வாயிலார்நாயனார் அவதரித்தார். வாயிலார் தடியில் பிறந்ததால் வாயிலார் எனப்பெயர் பெற்றார். அவர் உள்ளத்தைக் கோயிலாக்கி நித்திய பூசை அபிஷேகம் செய்து சிவலோகம் சென்றார்.

50 முனையடுவார் நாயனார்

சோழநாட்டிலுள்ள நீடுரில் முனையடுவார் நாயனார் அவதரித்தார் பகைவர்களோடு போரிட்டுத் தோற்றவர்கள் அவரைத் துணைக்கு கூப்பிடுவர். அவர்களோடு போய் வெற்றி கொண்டு அவர்கள் கொடுக்கும் பொருள்களை பெற்றுக் கொள்வார். அப்பொருள்களை சிவனடியார்க்கு செலவு செய்வார். அதன் பயனால் பிறவாப் பேறு பெற்றார்.

51 கழற்சிங்கதாயனார்

பல்லவர் குலத்தில் பிறந்த இவர் இறைவனடி நினைப்பவர். வடநாடு கொண்டு அறத்தினை வளர்த்து ஆண்டார். அவர் மஎைவியாரோடு பல தலங்களை வணங்கி திருவாரூரை அடைந்தார். கங்கு ஒரு மலர் வந்து விழுந்தது. அதை அரசமாதேவி எடுத்து மோந்தார். அதனைக் கண்ட செருத்து என நாயனர் கோபம் கொண்டு கத்தியால் அரசியாரின் மூக்கை அறுத்தார். அப்போது அரசி திலத்தில் வீழ்ந்தாள். அப்போது கழற்சிங்க நாயனார் இறைவனை வணங்கித் துதித்து இவ்வுலகில் இச்செயலைச் செய்தது யார் என வினவினார். செருத்துணை நாயனார் திகழ்ந்ததைச் சொன்னார். உடனே கழற்சிங்கர் நீ கொடுத்த தண்டனை முறையற்றது என்று மலரை எடுத்த கையையும் வளையலோடு வெட்டினார் தேவர்கள் பூமழை பொழிந்தனர். கழற்சிங்கர் சிவதொண்டு ஆட்சி செய்து இறைவனடி சேர்ந்தார்

52 இடங்கழி நாயனார்

கோனாட்டிலுள்ள கொடும்பலூரில் தோன்றியவர் இடங்கழி நாயனர். இவர் சைவ தெறியும்ää எவற்க தர்மநெறியும் தழைக்க ஆட்சி புரிந்தார். அவர்காலத்தில் அடியார்க்கு உணவளிக்கும் சிவனடியார் ஒருவர் இருந்தார் அவரிடம் பொருள் இல்லாது போகச் சிவனடியார் அரசது நெற்களஞ்சியத்தில் திருடினார். காவலர் அவரைப் பிடித்து அரசர்முன் நிறுத்தினார்கள் அரசர் பிராமணது தன்மையைக் கண்டு உள்ளம் உருதி அரசாங்கப் பொருள்களையெல்லாம் பிராமணர்கள் கொள்ளை கொள்க என்று இடங்கழியாரிடம் சொன்னார். அதன்படியே கொள்ளை கொண்டார். அரசர் சைவம் தழைக்க ஆட்சி புரிந்து இறைவனடி சேர்ந்தார்.

53 செருத்துணை நாயனார்

இவர் சோழநாட்டில் திருமருகலுக்கருகிலுள்ள தஞ்சாவூரில் வேளாளர் தடியில் பிறந்தவர். இவர் திருவாரூர் சென்று வணங்கி வருபவர். கழற்சிங்க நாயனாரின் மாதேவி மலரை முகந்ததால் அவர் மூக்கைத் துண்டித்தார். இவர் பல சிவத்தொண்டு செய்து பொன்னம்பலத் திருஷநிழலெய்தினார்.

54 புகழ்த்துணை நாயனார்

செருவிலிபுத்தூரில் சிவவேதியர் தலத்தில் புகழ்ந்துணைநாயனர் அவதரித்தார். சிவபெருமானில் மிதந்த பற்றுள்ளவர். பஞ்சம் ஏற்பட்டது. அப்போதும் அவர் சிவபூசை செய்துவந்தார். பசியில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் போது தடத்தை உயற்ற முடியாது இறைவன் முடிமீது போட்டு அவரும் கீழே வீழ்ந்து உணர்ச்சி அற்றார். அப்போது இறைவர் அவரது கனவில் தோன்றி "அப்பரே இப்பஞ்சம் நீங்கும் வரை படத்தின் மேல் ஒரு பொற்காசு வைப்பேன்ää நீ எடுத்துக் கொள்" என்றார். அப்படியே பெற்றுப் பூசித்து பேரின் வீடு பெற்றார்.

55 கோட்புலி நாயனார்

திருநாட்டியத்தானூரில் வேளாளர் தலத்தில் கோட்புலி நாயனார் அவதரித்தார். அவர் சோழர் படைத்தலைவர். அரசரிடம் பெறும் பொருட்களை கோவில்களில் திருவமுதுக்கு செலவு செய்வார். அவர் அரச கட்டளையால் போருக்குப் போகவேண்டியதாயிற்று. அதனால் திருவமுதுக்கு தேவையான நெல்லைச் சேகரித்து அதனைக் கோவிலிற்கே சேர்க்கும்படி சத்தியம் செய்து சுற்றத்தாரிடம் கொடுத்தார். பஞ்சம் ஏற்பட்டதுää கோட்புலி நாயனாரது சுற்றத்தார் பின்னர் கொடுத்துவிடலாம் என் நெல்லை எடுத்து உண்டுவிட்டனர். நாயனார் போரில் வென்றார். அரசன் பொருள் கொடுத்தார். அவர் காருக்குத் திரும்பினார். நிகழ்ந்ததையறிந்து சுற்றத்தாரை வெட்டினார் அதந்தத் தப்பியது ஒரு குழத்தை. காவலன் அக்குழந்தையைக்காட்டி இவர் நெல்லை உண்ணவில்லை. இவர் ஒரு குடிக்கு ஒரு மகன் என்றான்ää அப்படியிருந்தும் நாயனார் -இது உண்ணாவிட்டாலும் அது உண்டவளின் பாலைக்குடித்தது" என்று கூறி இரண்டாக வெட்டினார். சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்து உன் வாள் பட்ட எல்லோரும் புனிதராக எம் உலகிற்கு உந்தனர். நீயும் அங்கு வா என அழைத்துச் சென்றார்.

56 பூசலார் நாயனார்

தொண்டை நாட்டில் தின்றவரில் அந்தணர் குலத்தில் பூசலார் அவதரித்தார். அவர் மனமகிழ்ந்து சிவனடியார்க்கு பொருள் கொடுப்பவர். அவர் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்தார் முடியவில்லை.
மனத்தில் கோவில் கட்டினர். கும்பாபிஷேகத்திற்கும் நாள் குதித்தார். இக்காலத்தில் காஞ்சியில் பல்லவ மன்னர் ஈசனுக்கு கற்கோவில் கட்டினார். மன்னர் கனவில் தோன்றி புசலன்பர் நின்றவூரில் மனதில் கோயில் கட்டியுள்ளார் நான் அங்கு போகவேணும். நீ உன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒத்திப்போடு என்றார். மன்னர் அவ் அன்பரைக் காணவேண்டும் என்று நின்றவூருக்குச் சென்றான். அங்கு பூசலாரை உடைந்து வணங்கää உங்கள் கோவில் எங்கே இருக்கிறது என்று கேட்டார். அத்துடன் இறைவர் எவில் தோன்றி கூறியதையும் சொன்னார். அதற்குப் பூசலார் எனக்குப் பொருளில்லை அதனால் மனக்கோவில் கட்டினேன் என்றார். மன்னர் பூரித்து மகிழ்ந்து காஞ்சிபுரம் மீண்டார்ää பூசலார் மஎக்கோவிலைத் தரிசித்து அம்பலவாணரின் திருவடி அடைந்தார்.

57 மங்கையற்கரசி அம்மையார்

மங்கையற் கெல்லாம் ஒப்பில்ல. அரசி சோழர் தலத்தவர். வளையலை அணிந்த மானியர்ää செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமடந்தை பாண்டியர் குலத்திந்தண்டன பழியைத் தீர்த்தார். பாண்டியன் தின்றார் நெடுமாறனுக்கு சைவத்திறத்தினை வழித்துணையாக்கி நீண்டகாலம் திலைபெற்றிருந்து பாண்டியனுடன் சேர்த்து இறைவனடி சேர்த்தார்.

58 நேச நாயனார்

பல்லாரி மாவட்டத்தில் காம்பிலி என்னும் ஊரில் அறுவையர் மரபில் தேசதாயனார் தோன்றினார். அவர் சிந்தையைச் சிவமாக்கி வார்த்தையை ஐந்தெழுத்தாக்கி உடலை அடியார்க்காக்கிää அடியார்க்கு உடுப்பு கோவணம் கொடுத்து தொண்டு செய்து இறைவனடி சேர்ந்தார்.

59 கோச்செங்கட் சோழனார்

சோழநாட்டில் காவிரியாற்றங்கரையில் சத்திரத்தீர்த்தில் அருகில் ஒரு காடு இருந்தது. அதில் இறைவன் சிவலிங்கமாக வெளிப்பட்டிருந்தார். அதை யானை ஒன்று கண்டது. அது முன் செய்த தவத்தால் அதற்குத் தெய்வ உணர்வு தோன்றியது யானை துதிக்கையால் நீரை முகந்து அபிசேகம் செய்து. மலர்களைச் சுட்டி வணங்கி நாள்தோசம் செய்தது. யானை பூசித்ததால் திருவானைகா எனப்பெயர் ஆயிற்று ஒரு சிலந்திப் பூச்சி அப்பெருமானைக் கண்டது. அது முற்பிறப்பில் சிவகணங்களில் ஒன்று. அதனால் முற்பிறவி உணர்வு தோன்றியது. அதனால் சிவனுக்கு வெய்யிலும் சருகும் படாது வாய் நூலால் விதானம் போல் செய்தது. யானை வந்தது சிலந்தி வலையைச் சிதைத்தது. சிலந்திக்கு சினம் எழுந்து யானையின் துதிக்கையில் புகுந்து கடித்து யானையைக் கொன்றது. சிலந்தியும் இறந்தது யானை சிவபுரத்தை அடைந்தது. சிலந்தி சோழ மன்னராகப் பிறந்தது. சோழர் குல சுபதேவருக்கும் கமலவதிக்கும் கருவானதுää கரு உயிராகும் நேரம் சோதிடர்ää அக்குழந்தை ஒரு நாளிகை சென்று பிறந்தால் மூவுலகையும் ஆளும் என்றனர். அரசியர் தான் இருந்தாலும் பரவாயில்லை குழந்தை மூவுலகையும் ஆளட்டும் தமது கால்களை மேலே தூக்கிக் கட்டிவிடுங்கள் என்றார். அதன்படி கட்டி உரிய நேரம் கால்களைக் கட்டவிழ்க்க குழந்தை பிறந்தது. குழந்தையின் கண்கள் சிவந்திருந்ததால் அரசியார் “என் கோச்செங்கணானே என்றார். சிறிது நேரத்தில் அரசியார் உயிர் அரவன் திருவடி அடைந்தது. கோச்செங்கட் சோழன் நீதி வழுவா ஆட்சி செய்து திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தோடு சிறப்பான கோவில் கட்டினார். மேலும் பல கோவில்கள் கட்டினார். அவர் தில்லை சென்று வழிபட்டு இறைவனடி சேர்ந்தார்.

60 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

திருவெருக்கத்தம் புலியூரில் பாணர் குலத்தில் திருநீலகண்டர் அவதரித்தார். அவர் இறைவனது புகழை யாழில் வசிப்பவர். அவர் சோழநாட்டுப் பதிகளைப் பாடிப்பின் மதுரையை அடைத்தார். இறைவன் அடியாரது கனவில் தோன்றி யாழ்ப்பாணரைக் கோவிலுக்கு அழைத்துவரச் சொன்னார். அங்கு அவருக்குப் பலகை இடச் சொன்னார். அதிலிருந்து பாணர் யாழ் வாசித்தார். பின்பு பல பதிகளை வணங்கி திருவாரூர், சீர்காழி உந்து திருஞான சம்பந்தரோடு பிறவாப் பெருநிலை அடைந்தார்.

61 இசைஞானியார்

இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப்போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.
திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இசைஞானியார் - சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.
இசைஞானியார் நாயனார் குருபூசை நாள்: சித்திரைச் சதயம்

62 சடைய நாயனார்

"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்"
திருத்தொண்டத் தொகை.
சடைய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் சடையனார் இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர். சிவதொண்டர்க்குத் தந்தையாம் பேறுபெற்றோர் சிவப்பேறு பெற்றோரே.
சடையனார் நாயனார் குருபூசை: மார்கழித் திருவாதிரை.

திருத்தொண்டத்தொகை உருவாகிய சுவாரசியமான கதை

நாயன்மார்களை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலே அறிமுகம் செய்தார். எப்படி இந்த அறிமுகம் நடக்கிறது என்பது ஒரு சுவாரசியமான கதை.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு நாள் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருந்த சிவனடியார்களைப் பணியாது திருக்கோயிலினுள் சென்றார் என்ற தவறான எண்ணத்தில்

இறைவனை பணிவதற்குமுன் அடியார்களைப் பணிய வேண்டும் என்பது நியதி. அன்று சுந்தரர் அதைக் கடைப்பிடிக்கவில்லை. அடியார்கள் தேவாசிரிய மண்டபத்தில் இருந்தது அவருக்கு தெரியாது. விறன்மிண்டர் (நாயனாரில் ஒருவர்) என்பவர் சுந்தரரையும் அவருக்கு அருள் செய்த சிவபிரானையும் “புறகு” என்று ஒதுக்கினார். மிகவும் கோபத்தில் இருந்தார். மற்ற அடியார்களுக்கும் இதைச் சொல்லி கோபமுறச் செய்தார்.

ஆனால் திருவாரூரில் எழுத்தருளியிருந்த தியாகேசருக்கு இது தெரிந்துவிட்டது. அவர் வெளியே வந்து சுந்தரரை வழிமறித்து “சுந்தரா அடியார்கள் எல்லோரும் நீ அவர்களை மதிக்கவில்லை என்று கோபத்தில் உள்ளார்கள். நீ அவர்களைப் போய் பார்த்து வணங்கிவிட்டு அப்புறம் என்னிடம் வா என்று அறிவுறுத்தி அனுப்பினார்.

மனம் நொந்த சுந்தரர் அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று கேட்க சிவபெருமான் அடியார் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுக்க, ஒவ்வொரு அடியாருக்கும் தான் அடியேன் எனக் கூறி “திருத்தொண்டத் தொகை” எனும் 11 பாடல்களைப் பாடி அருளினார். நாயன்மார்களை பட்டியலிட்டவர் அவர்தான்.

திருத்தொண்டத்தொகை

சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகையில் 60 நாயன்மார் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். பின் நம்பியாண்டார் நம்பியால் சுந்தரரின் தாய், தந்தை, சுந்தரர் சேர்க்கப்பட்டு 63 நாயன்மார் ஆகினார்.

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
      1 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத 2 இயற்பகைக்கும் அடியேன்
      3 இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல 4 மெய்ப்பொருளுக் கடியேன்
      விரிபொழில்சூழ் குன்றையார் 5 விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் 6 அமர்நீதிக் கடியேன்
      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
இலைமலிந்த வேல்நம்பி 7 எறிபத்தர்க் கடியேன்
      8 ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி 9 கண்ணப்பர்க் கடியேன்
      கடவூரிற் 10 கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் 11 மானக்கஞ் சாறன்
      எஞ்சாத 12 வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை 13 ஆனாயர்க் கடியேன்
      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
மும்மையால் உலகாண்ட 14 மூர்த்திக்கும் அடியேன்
      15 முருகனுக்கும் 16 உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே 17 திருநாளைப் போவார்க்கும் அடியேன்
      18 திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
      வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் 19 அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
      ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
      20 திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி 21 குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
      22 பெருமிழலைக் குறும்பர்க்கும் 23 பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி 24 அப்பூதி அடியார்க்கும் அடியேன்
      ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை 25 நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி 26 நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
      மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் 27 சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
      28 ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் 29 திருமூலன் அடியார்க்கும் அடியேன்
      நாட்டமிகு 30 தண்டிக்கும் 31 மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் 32 சோமாசி மாறனுக்கும் அடியேன்
      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
      மறவாது கல்லெறிந்த 33 சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் 34 சிறப்புலிக்கும் அடியேன்
      செங்காட்டங் குடிமேய 35 சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்36 கழறிற் றறிவார்க்கும் அடியேன்
      கடற்காழிக் 37 கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்38 கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
      பொழிற்கருவூர்த் துஞ்சிய 39 புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் 40 நரசிங்க முனையரையர்க் கடியேன்
      விரிதிரைசூழ் கடல்நாகை 41 அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் 42 கலிக்கம்பன் 43 கலியன்
      கழற்44 சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
45 ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
      46 கணம்புல்ல நம்பிக்குங் 47 காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
      48 நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
      தொன்மயிலை 49 வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி 50 முனையடுவார்க் கடியேன்
      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
      காடவர்கோன் 51 கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி 52 இடங்கழிக்குந் தஞ்சை
      மன்னவனாம் 53 செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
      பொன்னடிக்கே மனம்வைத்த 54 புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி 55 கோட்புலிக்கும் அடியேன்
      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
      பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
      திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
      முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் 56 பூசல்
      57 வரிவளையாள் மானிக்கும் 58 நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட 59 செங்கணார்க் கடியேன்
      60 திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
      இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
      ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.

63 நாயன்மார்

01 திருநீலகண்ட நாயனார்
02 இயற்பகை நாயனார்
03 இளையான்குடிமாற நாயனார்
04 மெய்ப்பொருள் நாயனார்
05 விறன்மிண்ட நாயனார்
06 அமர்நீதி நாயனார்
07 எறிபத்த நாயனார்
08 ஏனாதிநாத நாயனார்
09 கண்ணப்ப நாயனார்
10 குங்குலியக்கலய நாயனார்
11 மானக்கஞ்சாற நாயனார்
12 அரிவாட்டாய நாயனார்
13 ஆனாய நாயனார்
14 மூர்த்தி நாயனார்
15 முருக நாயனார்
16 உருத்திரபசுபதி நாயனார்
17 திருநாளைப்போவார் நாயனார்
18 திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
19 சண்டேசுர நாயனார்
20 திருநாவுக்கரசு நாயனார்
21 குலச்சிறை நாயனார்
22 பெருமிழலைக்குறும்ப நாயனார்
23 காரைக்கால் அம்மையார்
24 அப்பூதி அடிகள் நாயனார்
25 திருநீலநக்கர் நாயனார்
26 நமிநந்தி அடிகள் நாயனார்
27 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
28 ஏயர்கோன் கலிக்காம நாயனார்
29 திருமூலதேவ நாயனார்
30 தண்டியடிகள் நாயனார்
31 மூர்க்க நாயனார்
32 சோமாசிமாற நாயனார்
33 சாக்கிய நாயனார்
34 சிறப்புலி நாயனார்
35 சிறுத்தொண்ட நாயனார்
36 கழறிற்றறிவார் நாயனார்
37 கணநாத நாயனார்
38 கூற்றுவ நாயனார்
39 புகழ்ச்சோழ நாயனார்
40 நரசிங்க முனையரைய நாயனார்
41 அதிபத்த நாயனார்
42 கலிக்கம்ப நாயனார்
43 கலிய நாயனார்
44 சத்தி நாயனார்
45 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
46 கணம்புல்ல நாயனார்
47 காரி நாயனார்
48 நின்றசீர் நெடுமாற நாயனார்
49 வாயிலார் நாயனார்
50 முனையடுவார் நாயனார்
51 கழற்சிங்க நாயனார்
52 இடங்கழி நாயனார்
53 செருத்துணை நாயனார்
54 புகழ்த்துணை நாயனார்
55 கோட்புலி நாயனார்
56 பூசலார் நாயனார்
57 மங்கையர்க்கரசியார் நாயனார்
58 நேச நாயனார்
59 கோச்செங்கட்சோழ நாயனார்
60 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
61 சடைய நாயனார்
62 இசைஞானி நாயனார்
63 சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்கவாசகர் வரலாறு

பாண்டிய நாட்டின் வைகை ஆற்றின் கரையில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர் மாணிக்கவாசகர். இவரது இயற்பெயர் வாதவூரார் என்பதாகும். சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக போற்றப்படும் மாணிக்கவாசகர் எழுதிய நூலே ‘திருவாசகம்’ என்ற சிறப்புக்குரிய பெரும் படைப்பாகும்.
சிறு வயதிலேயே கல்வியிலும், ஞானத்திலும் சிறந்த விளங்கினார் வாதவூரார். அவரது அறிவாற்றலை அறிந்த, பாண்டிய மன்னனான அரிமர்த்தன பாண்டின், வாதவூராருக்கு தனது அரசவையில் அமைச்சர் பதவியை வழங்கி கவுரவித்தான். உயர் பதவி, நிறைந்த செல்வம் போன்றவை இருந்தும், எதையோ இழந்தது போன்ற உணர்வையே வாதவூரார் உணர்ந்து கொண்டிருந்தார். அது பற்றி ஆராய்ந்த போது சைவ சித்தாந்தங்களை கற்றறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதன்பிறகு இறைவனின் அடிசேர்வதே தன்னுடைய வாழ்வின் இறுதி நோக்கம் என்பதை அவர் புரிந்து கொண்டார். அதனால் சிவ வழிபாட்டை மேற்கொள்ளத் தொடங்கினார்.
ஒருசமயம், சோழநாட்டில் தரமான, வளமான குதிரைகள் கிடைப்பதாக அறிந்தான் பாண்டிய மன்னன். உடனடியாக தனது அமைச்சரான வாதவூராரை அனுப்பி, குதிரைகளை வாங்கி வரும்படி பணித்தான். குதிரை வாங்குவதற்கு தேவையான பொன், பொருட்களையும் கொடுத்து அனுப்பினான்.
அதே நேரத்தில் தான், ஈசன் தன்னுடைய திருவிளையாடலைத் தொடங்கினார். திருப்பெருந்துறை திருத்தலத்தில், தன்னை ஒரு குருவைப் போல மாற்றிக்கொண்டு அங்கிருந்த குருந்த மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்தார் சிவபெருமான். அந்த வழியாக வந்த வாதவூரார், குருந்த மரத்தின் அடியில் இருந்த குருவை, ஈசனே வந்திருப்பதாக எண்ணி மகிழ்ந்தார். அவர் அருகில் சென்று பணிந்து வணங்கினார். அப்போது சிவபெருமானின் பாதம், வாதவூராரின் தலை மீது பட்டது. அடுத்த நொடியே இறைவனை நினைத்து பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
அவரது பாடலைக் கேட்டு அந்த பரமனே உள்ளம் உருகிப்போனார். ‘நீ பாடிய செந்தமிழின் ஒவ்வொரு வார்த்தையும், மாணிக்கம் போன்றது. நீ மாணிக்கவாசகன்’ என்று ஆசீர்வதித்து மறைந்தார் இறைவன். இறையருள் கிட்டிய மகிழ்ச்சியில் தன்னையே மறந்தார் மாணிக்கவாசகர். தன்னையே மறந்துவிட்டவருக்கு, தான் வந்த பணி மட்டும் நினைவிலா இருக்கப் போகிறது. மன்னன் கொடுத்தனுப்பிய பொன்னையெல்லாம் கொண்டு, அங்கேயே தங்கி கோவில் திருப்பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டார்.
பல நாட்கள் கடந்த நிலையிலும் மாணிக்கவாசகர் வராததால், அவருக்கு மன்னன் ஓலை அனுப்பினான்.
அதனைப் பார்த்த மாணிக்கவாசகர், ஈசனை தேடி ஓடினார். ‘ஐயனே! மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது?’ என்று கண்ணீர் வடித்தார்.
‘ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்துசேரும் என்று மறு ஓலை அனுப்பு’ என்று அசரீரி கேட்டது. மாணிக்கவாசகரும் அவ்வாறே செய்தார். சிறிது நாள் கழித்து மாணிக்கவாசகரை, மதுரைக்கு திரும்பும்படி ஈசன் கூறினார். அதன்படி மதுரை திரும்பியவரிடம், ‘குதிரைகள் எங்கே?’ என்று கேட்டான் பாண்டிய மன்னன்.
‘நீங்கள் இதுவரை பார்த்திராத அழகிய திடமான குதிரைகள் வந்து கொண்டிருக்கின்றன’ என்றார் மாணிக்கவாசகர்.
ஆனால் ஆடிமாதம் கடைசி நாள் வரை குதிரைகள் வராததால், மன்னனுக்கு கோபம் வந்தது. மாணிக்கவாசகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.
இதற்கிடையில் ஈசன், காட்டில் இருந்த நரிகளை, குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பிவைத்தார். அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் மன்னன். ஆனால் அன்று இரவே குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி ஓடிவிட்டன.
மன்னனின் கோபம் எல்லை கடந்தது. மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தினான். அவர் ஈசனை நினைத்து வேண்டினார். அப்போது ஆற்றில் வெள்ளம் மதுரையை சூழ்ந்தது. மாணிக்கவாசகரை சுற்றிலும் தண்ணீர் கால் அளவுக்கே ஓடியது.
ஆற்றின் கரையை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும் என்று மன்னன் உத்தரவிட்டான். அவ்வூரில் வந்தி என்ற மூதாட்டி புட்டு விற்று பிழைத்து வந்தாள். தினமும் ஒரு புட்டை ஈசனுக்கு படைத்து, அடியவர்களுக்கு அளிப்பாள். வயோதிகம் காரணமாக கூலி ஆள் தேடினாள் வந்தி. அப்போது ஈசன், பணியாள் வேடம் கொண்டு தனக்கு புட்டு தந்தால், பணிக்கு செல்வதாக கூறவே, பாட்டியும் கொடுத்தாள்.
பணிக்கு சென்ற ஈசன், பணியை கவனிக்காமல் ஓரிடத்தில் படுத்து உறங்கினார். அப்போது அங்கு வந்த மன்னன், பிரம்பால் ஈசனை அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. மன்னன் திகைத்தான். பணியாள் உருவில் வந்த ஈசன் ஒரு கூடை மண்ணை ஆற்றின் கரையில் கொட்டியதும் வெள்ளம் வடிந்தது.
இது தனது திருவிளையாடலே என்று உரைத்து ஈசன் மறைந்தார்.
மாணிக்கவாசகரை மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க மன்னன் கூறியும், மறுத்து சிதம்பரம் சென்றார் மாணிக்கவாசகர். தில்லையம்பதியானை நினைத்து அவர் திருவாசகம் பாட, அதனை அங்கிருந்த வேதியர் ஒருவர் சுவடியில் எழுதினார். இறுதியில் பாடலின் அடியில் திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு, அந்த வேதியர் மறைந்தார். அப்போதுதான் தான் பாடிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பதை அவர் அறிந்தார்.
பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும், 8-ம் திருமுறையாக விளங்குகின்றன. சோதனைகளைக் கடந்த இறைவழி நின்ற மாணிக்க வாசகர், 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, ஒரு ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.