BMI என்பது உடல் பருமன் சுட்டி. இது உங்கள் நிறை, உயரம் ஆகியவற்றில் தங்கி உள்ளது. தெற்க்கு ஆசிய மக்களுக்கு இச்சுட்டி 18.5 - 23 க்குள் இருக்க வேண்டும்.
உங்கள் உடல் பருமன் சுட்டியை அறிய நிறை, உயரம் தகவலை பெட்டியில் நிரப்பி நிறை, உயரம், அலகுகளை தெரிவு செய்து BMI பொத்தானை அழுத்தவும்
k Cal
AMR என்பது உங்களது நாளாந்த கலோரி தேவை. இது உங்கள் நிறை, உயரம், வயது, பால், உடல் செயல்பாடு ஆகியவற்றில் தங்கி உள்ளது. உங்கள் நிறையை குறைக்க நாளாந்த கலோரி தேவையிலும் குறைய உண்ணவும் அல்லது உடல் செயல்பாட்டை அதிகரிக்கவும். இரண்டையும் சேர்ந்து செய்வதே சிறந்தது. நிறை, உயரம், வயது தகவலை பெட்டியில் நிரப்பி அலகுகளையும், ஆண்/பெண், உடல் செயல்பாடு நிலையையும் தெரிவு செய்து AMR பொத்தானைஅழுத்தவும்.
BMI (Body Mass Index) depend on your weight and height. For the people from South Asian countries BMI should be beteen 18.5 to 23.
To find you BMI enter your weight, height in the box, seclect the appropriate unit and click the BMI button.
k Cal
AMR is your daily Calorie requirement. This depends on your weight, height, age, gender and Activity Level.
In order to reduce your weight you have to
● Reduce Calorie intake to less than AMR value.
● Increase your Activity level
● Combine both which is the best way.
To find your daily Calorie requirement enter your wight, height, age, gender, Activity level and click the AMR button.
டாக்டர்.எம்.கே.முருகானந்தன்
இப்புத்தகத்தை தரவிறக்க ►
நன்றி Dr.M.K.Murugananthan
குறிப்பு:
BMI=18.5-25 ஐ மேற்குலக நாடுகளில் ஆரோக்கிய நிலையாக கொள்கிறார்கள்.
தெற்க்காசிய மக்களின் உடல் அமைப்பு, உணவு பழக்கம், வாழ்க்கை முறை வேறு பட்டது.
இதனால் 23-25 BMI உள்ள நம்மவர்கள் ஆரோக்கியம் அற்றவர்களாக உள்ளார்கள்.
இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள 15 சுகாதார அமைப்புகள்
18.5-23 ஐ ஆரோக்கிய BMI குறியாக அறிவித்துள்ளார்கள்.
மேலும் விபரங்களுக்கு ►
பாலுக்கு மைலோ வேண்டும் என்று கேட்பவர்கள் உள்ள உலகில்தான் கஞ்சிக்கு உப்பு வேண்டும் என்பவர்களும் உள்ளார்கள். குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பது இன்று ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகிவிட்டது. அதே உலகில் தகுந்த சத்து உணவு இல்லாததால் குழந்தைகள் நிறை குறைந்து நோயுறுவதும் ஒரு சர்வதேசப் பிரச்சனைதான். உலகயுத்த காலத்தில் பாண் இல்லை என மக்கள் அங்கலாய்த்த பொழுது கேக்கை உண்பதுதானே என அன்று அரச குழந்தைகள் கூறியது இன்று யதார்த்தம் ஆகிவிட்டது.
இன்று குழந்தைகள் உடல் நிறை அதிகரிப்பது ஒரு சர்வதேசப் பிரச்சனை ஆகிவிட்டது. எமது குழந்தைகள் நிறை அதிகரிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சிப்ஸ், கோக், பெப்ஸி, சொக்லேட் உண்பதும், இன்றைய வாழ்க்கை முறையுமே இதன் முக்கிய காரணமாக இருக்கின்றன.
ஓடு விளையாடு பாப்பா என்பதெல்லாம் பாட நூலிலுடன் சரி என்னும் நிலமை தான். அநேகர் பெரும்பாலும் கணினி விளையாட்டையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியைதான் பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார்கள். உடலுழைப்பைத் தரும் பொழுதுபோக்குகள் பெருமளவு குறைந்து விட்டன.
கிராமங்களில் உண்ணும் எந்தப் பொருளாக இருந்தாலும் அது அவர்களுடைய கடின உழைப்பினால் கரைந்து உடலோடு கலந்து விடுகிறது. வயலிலும், காடு மேடுகளிலும் உழைப்பவர்கள் சராசரியாக ஒரு நாள் பத்து கிலோ மீட்டர் தூரமாவது நடந்து விடுகிறார்கள். நடத்தல் என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது அங்கே.
இன்றைய நகர்ப்புற வாழ்க்கை அப்படியல்ல. இப்போது இலகுவான உணவு உட்கொண்டால் கூட அது கரையாமல் உடலில் கொழுப்புச் சத்தாகத் தேங்கிவிடும் அபாயம் உண்டு. காரணம் உடல் உழைப்பு இல்லை. வீட்டிலிருந்து வெளியே இறங்கியவுடன் வாகனம், அலுவலகம் விட்டதும் வீட்டுக்கு வாகனம். வீட்டுக்குள்ளே கட்டிப் போட தொலைக்காட்சி, கணினி. மொத்தத்தில் இருக்கைச் சிலைகள் போல இருக்கும் வாழ்க்கை.
கிராமப் புறங்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழ்க்கையே உடற்பயிற்சியாகி விடுகிறது. எனவே அவர்கள் தனியாக உடற்பயிற்சி செய்யத்தேவை இல்லை என்றாகிறது. நகர்ப் புறங்களைப் பொறுத்தவரையில் உடற்பயிற்சியை ஒரு பணியாக எடுத்துச் செய்ய வேண்டி இருக்கிறது.
ஆரோக்கியமான உடல் உயரத்துக்கும் எடைக்கும் இடையே ஒரு சூத்திரத்தைக் கொண்டு இயங்குகிறது. இது உடல்பருமன் சுட்டு எண் (BODY MASS INDEX-BMI) எணப்படும்.
உங்கள் கிலோ நிறையை உங்கள் மீட்டர் உயரத்தால் இரண்டு முறை வகுத்து கிடைக்கும் எண்ணே உடல் பருமன் சுட்டு எண்.
( உடலின் நிறை கிலோ)
/ ( உயரம் மீ x உயரம் மீ ).
இந்த விதிப்படி உங்கள் சுட்டு எண் 18.5 க்கும் 23க்கும் இடையே இருந்தால் நீங்கள் அதிக எடை கொண்டவர் அல்ல, நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொண்டவர் என்று பொருள். அதற்கு மேற்பட்டால் உடல் நிறை அதிகம் ஆகும். உடல்பருமன் சுட்டு எண்ணை 18.5 க்கும் 23க்கும் இடையே வைத்திருக்க முயலவேண்டும்.
உங்கள் சுட்டு எண் 23க்கு மேற்பட்டால் உடல் நிறை அதிகம் ஆகும். நிறை அதிகரித்தால் இரத்த அழுத்தம், பக்கவாதம், இரத்த நாடி சார்ந்த நோய், தசைக்கூட்டு நோய், நீரழிவு வகை 2 ஆகிய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெடுதலான கொழுப்பு, சீனி, உப்பு அதிகம் உள்ளது ஆனால் சத்து குறைவு. சிப்ஸ், கோக், பெப்ஸி, சொக்லேட், போன்றவற்றை உண்ணும் போது நமது உடலில் அதிகப்படியான கலோரிகள் தேங்குகின்றன. இவற்றை உண்டு விட்டு அதிக உடலுழைப்பைச் செலுத்தாத போது இந்த கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து விடுகின்றன. இப்படிச் சேரும் கொழுப்பே ஆரோக்கியத்துக்கு எமனாக மாறிவிடுகிறது.
ஒரு நாளைக்கு எத்தனை கலோரி சத்து தேவை என்பதைக் கணக்கிடவும் ஒரு சூத்திரம் இருக்கிறது. இதை AMR-ACTIVE METABOLIC RATE என்கிறோம். உங்கள் நிறை, உயரம், வயது, உடலுழைப்பை பொறுத்தது. ஆண்களுக்குத் தேவையான கலோரி, பெண்களுக்குத் தேவையான கலோரி இதிலிருந்து வேறுபடும். நல்ல உடல் உழைப்பைச் செலுத்தும் நபர்கள் அதிக அளவில் கலோரிகளை உட்கொள்ளலாம்.
உங்களுக்கு தேவையான கலோரியிலும் குறைவாக கலோரி உட்கொண்டால் உங்கள் நிறை குறையும். மாறாக கூட உட்கொண்டால் உங்கள் நிறை கூடும். உங்கள் நிறையை ஒரு இறாத்தலால் குறைக்க 3500 கலோரி குறைக்கவேண்டும்.