email: vadamarachy@gmail.com

முகப்பு - HOME

 

பாட்டிவைத்தியம் - கைமருந்து

அறிமுகம்

உணவே மருந்து என்ற காலம் போய் பலருக்கு மருந்தே உணவு ஆகிவிட்டது. முன்பெல்லாம் நோய் வந்தால் மாத்திரம் மருந்து உட்கொண்டார்கள். இப்போதோ அதிகம் உண்டு சமிக்காவிடில் மருந்து. காச்சலுக்கு மருந்து, பீச்சலுக்கு மருந்து, உடல் நோ என்றால் மருந்து. மருந்துகளால் பக்கவிளைவு. பக்கவிளைவை தீர்ப்பதற்க்கு மேலும் மருந்து. அன்று கையில் மருந்து இன்று பையில் மருந்து. குழந்தை முதல் முதியவர் வரை மருந்துக்கு அடிமைப்பட்டுள்ளார்கள்.

 

இருமல் █ 

தேவையான பொருள்கள்

  • பால் 2 கப்
  • உள்ளி 1 பூடு
  • இஞ்சி (உள்ளி அளவில் பாதி)
  • மிளகு 5
  • சீரகம் ¼ (கால்) தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் ¼ (கால்) தேக்கரண்டி
  • கற்கண்டு தேவையான அளவு

செய்முறை

மிளகு, சீரகத்தை அம்மி அல்லது சிறு உரலில் தட்டி பின் இஞ்சி, உள்ளியும் சேர்த்து தட்டி மஞ்சள், கற்கண்டுடன் பாலில் கலந்து கொதிக்கவைக்கவும். கொதித்தவுடன் அடுப்பு வெப்பத்தை குறைத்து 1 கப் ஆகும் வரை சுண்டக்காச்சவும். இளம்சூட்டோடு குடிக்கவும். பாலில் உள்ள உள்ளியையும் சாப்பிட்டால் நல்லது.

வயிற்றோட்டம் █ 

வெந்தயம் 1 மேசைக்கரண்டி (15 ml) விளுங்கியபின் 1 கப் நீரை குடிக்கவும். வயிற்றோட்டம் விரைவில் நின்றுவிடும்.

 


































TOP

பயிர்களுக்கு இரசாயன உரம், பூச்சி கொல்லிகளின் பக்க விளைவுகளை உணர்ந்து மேலைநாடுகளில் இயற்கை உரம், பூச்சி கொல்லி பாவித்து விளைந்த உணவுக்கு கிராக்கி அதிகம். உணவிலே இரசாயனக் கலப்பை முற்றாக தவிர்க்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவசியமற்ற மருந்துகளை தயக்கமின்றி உட்கொள்கிறோம். கைமருந்து எல்லா நாடுகளிலும் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுக்கு இலகுவில் கிடைக்கும் பொருள்களை மூலம் அனுபவரீதியாக பெற்ற மருந்துகள் உண்டு.

பாட்டி வைத்தியம், கைமருந்து பற்றி பல புத்தகங்கள் உண்டு. இணையதளத்தில் உள்ள தகவல்களுக்கு தொடர்பு தரப்படும். இப்பக்கத்தில் ஆசிரியர் குழு, வாசகர்கள் சொந்த அனுபவத்தில் பாவித்த கைமருந்துகள் █  குறியிடப்படும்.

நெஞ்சில் சளி █ 

தேவையான பொருள்கள்

  • திப்பிலி 10 கிராம்
  • சித்தரத்தை 10 கிராம்
  • வால்மிளகு 10 கிராம்
  • அதிமதுரம் 10 கிராம்

செய்முறை

சித்தரத்தை, அதிமதுரம் 3 மணித்தியாலம் நீரில் ஊறவைத்து அம்மி அல்லது சிறு உரலில் தட்டவும். வால்மிளகு, திப்பிலியை வேறாக தட்டவும். அவற்றை 3 கப் (750 ml) நீரில் கலந்து மிதமான வெப்பத்தில் 1 கப் (250 ml) ஆகும் வரை வத்த காச்சவும். வடித்த சாற்றை 6 சம பங்குகளாக பிரித்து காலையும் மாலையும் சாப்பிட ஒரு மணித்தியாலம் முன் மூன்று நாட்கள் குடிக்கவும். சாற்றை குடித்தவுடன் ¼ (கால்) கப் காச்சிய பாலை சிறுகச், சிறுக உறிஞ்சிக் குடிக்கவும். சளி கரைந்து செல்வதை உணர்வீர்கள்.