சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள். 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பது சித்தர் வாக்கு. இயற்கை மருத்துவம் எனச் சொல்லப்படும் சித்த மருத்துவத்தின் மருந்துகளை சித்தர்கள் மூலிகை, தாது மற்றும் சீவப் பொருள்களில் இருந்து தயாரிக்கின்றனர்.
நம் உடலில் வளி(வாதம்), அழல்(பித்தம்) ஐயம்(கபம்) இவை மூன்றும் சீராக இருக்க வேண்டும். இதள் மாற்றங்களை கண்டறிந்து சீராக்குதே சித்த மருத்துவத்தின் மூலமாகும்.
'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்' என்கிறது திருக்குறள்
சித்த வைத்திய காணொளிகள் இணையத்தில பல உள்ளன. அதில் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது..