அன்றாட செயற்பாடுகளை குறிக்கும்.
இதில் துயிலெழுதல், கழிவு அகற்றுதல், துப்பரவு செய்தல், உடை துவைத்தல், குளித்தல், உணவு தயாரித்து உட்கொள்ளுதல் என பல்வேறு செயற்பாடுகள் அடங்கும்.
வாசித்தல், உரையாடுதல், திட்டமிடுதல், பயணித்தல், சுற்றாடலை சுத்தமாக வைத்திருத்தல், பொதுநல சேவைகள், உறங்குதல் போன்றவையும் இதில் அடங்கும்.
உடலை நலமாக வைத்திருக்க
● உடற் பயிற்சி
● யோகாசன பயிற்சி
● சுவாச பயிற்சி
அவசியம்
உடற் பயிற்சி எடையை கட்டுப்படுத, எலும்பு, தசைகளை பலப்படுத்த, நோய் எதிர்ப்பு திறனை வளர்க்க,
நாளாந்த செயல்பாடுகளை செய்யும் ஆற்றலை மேம்படுத்த உதவும்.
யோகாசன பயிற்சி உடல், மனத்தை ஒருங்கிணைத்து ஆரோக்கியமாக வைக்க உதவும். உடலின் பல்வேறு
உபாதைகளை தீர்க்க உதவும். உடலில் புத்துணர்ச்சி பெரும்.
சுவாச பயிற்சி நுரையீரல் திறனை அதிகரித்து, ஆஸ்த்துமா போன்ற சுவாச நோய்கள் கட்டுப்படுத்த உதவும்.
மனதை நலமாக வைத்திருக்க
● யோகாசன சுவாச பயிற்சி
● தியான பயிற்சி
● இயற்கையோடு உறவாடல்
அவசியம்
யோகாசன சுவாச பயிற்சி மனநலனுடன் சார்ந்த யோகா, சுவாச பயிற்சிகளை செய்யவும்.
இவை உங்கள் உடலையும் மனதையும் தியானம் ஆரம்பிக்கும் நிலைக்கு தயாராக்கும்.
தியான பயிற்சி அழுத்தமும் கவலையுமின்றி வாழ, மன அமைதி, மகிழ்ச்சி, நல்ல உடல்நிலை,
பெற உதவும்.
இயற்கையோடு உறவாடல் தினமும் 20 முதல் 30 நிமிடம் வரை உட்கார்ந்தோ அல்லது நடந்தோ இயற்கையை ரசிக்கும் போது மன அழுத்தம் வெகுவாக குறைகிறது.