உணவே மருந்து என்ற காலம் போய் பலருக்கு மருந்தே உணவு ஆகிவிட்டது. முன்பெல்லாம் நோய் வந்தால் மாத்திரம் மருந்து உட்கொண்டார்கள். இப்போதோ அதிகம் உண்டு சமிக்காவிடில் மருந்து. காச்சலுக்கு மருந்து, பீச்சலுக்கு மருந்து, உடல் நோ என்றால் மருந்து. மருந்துகளால் பக்கவிளைவு. பக்கவிளைவை தீர்ப்பதற்க்கு மேலும் மருந்து. அன்று கையில் மருந்து இன்று பையில் மருந்து. குழந்தை முதல் முதியவர் வரை மருந்துக்கு அடிமைப்பட்டுள்ளார்கள்.
பயிர்களுக்கு இரசாயன உரம், பூச்சி கொல்லிகளின் பக்க விளைவுகளை உணர்ந்து மேலைநாடுகளில் இயற்கை உரம், இயற்கை பூச்சி கொல்லி பாவித்து விளைந்த உணவுக்கு கிராக்கி அதிகம். உணவிலே இரசாயனக் கலப்பை முற்றாக தவிர்க்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவசியமற்ற மருந்துகளை தயக்கமின்றி உட்கொள்கிறோம். கைமருந்து எல்லா நாடுகளிலும் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுக்கு இலகுவில் கிடைக்கும் பொருள்களை மூலம் அனுபவரீதியாக பெற்ற மருந்துகள் உண்டு.
பாட்டி வைத்தியம், கைமருந்து பற்றி பல புத்தகங்கள் உண்டு. இணையதளத்தில் உள்ள தகவல்களுக்கு தொடர்பு தரப்படும். இப்பக்கத்தில் ஆசிரியர் குழு, வாசகர்கள் சொந்த அனுபவத்தில் பாவித்த கைமருந்துகளும் தரப்டும்.