email: vadamarachy@gmail.com
 வடமராட்சி 
உள்ளூர் தகவல், சமூகசேவை, வழிகாட்டல், நல்அறிவு வெளியிடுவதே எம்பணி

× ÷ 

பழமொழிகள் - PROVERBS

அ,   ஆ,   இ,   ஈ,   உ,   ஊ,   எ,   ஏ,   ஐ,   ஒ,   ஓ,  
க,   ங,   ச,   ஞ,   ட,   ண,   த,   ந,   ப,   ம,   ய,   ர,   ல,   வ,   ழ,   ள,   ற,   ன,  

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
அகத்தினழகு முகத்தில் தெரியும்
அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அட்டையை பிடித்து மெத்தையில் வைத்தாலும்
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
அடாது செய்தவன் படாது படுவான்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்
அடியாத மாடு படியாது
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது
அண்டை (ஊரான்) வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே
அப்பன் அருமை மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்பு இல்லாவிடில் தெரியும்
அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு
அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போல்
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?
அன்னப் பாலுக்கு சிங்கியடித்தவள் ஆவின் பாலுக்கு சர்க்கரை தேடுகிறாள்
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க
ஆசை வெட்கம் அறியாது
ஆடத் தெரியாதவள் மேடை கோணம் என்றாளாம்
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்
ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற
அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது
ஆயிரம் பொய் சொல்லியம் ஒரு கல்யாணம் செய்து வை
ஆயிரம் பேரைக்(வேரைக்) கொன்றவர் அரை வைத்தியர்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
ஆள் பாதி ஆடை பாதி
ஆழம் தெரியாமல் காலை விடாதே
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆறின கஞ்சி பழங் கஞ்சி
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்
ஆனைக்கும் அடிசறுக்கும்

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
இருதலைக் கொள்ளி எறும்பு
இருந்து கொடுத்து (பணத்தை) நடந்து வாங்கு
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்
இடங்கண்ட மடம் புடுங்கின கதை

ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளமட்டும் பாயும்

உத்தியோகம் புருச லட்சணம்
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்
எல்லாம் தெரிந்த பல்லி கூழ் பானைக்குள் விழுவதைப்போல
எள்ளு காயுது எண்ணைக்கு எலிப்புழுக்கை ஏன் காயுது
எறும்பூரக் கல்லும் தேயும்
எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எனது எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதும்

ஏப்பை பிடிக்கிறவன் நம்மாளானால் அடிப்பந்தி என்ன நுணிப்பந்தி என்ன?
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
ஐந்து பணத்துக்கு குதிரையும் வேணும் (குதிரை)ஆறு கடக்க பாயவும் வேணும்
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும ்

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது
கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்
காகம் திட்டி மாடு சாகாது
காணிக்கு சண்டை பிடித்தால் வேலிதான் மிஞ்சும்
காய்த்த மரம்தான் கல்லடிபடும்
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
கிட்டவந்தால் முட்டப் பகை
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்தது போல்
குட்டக்குட்ட குனிகிறவன் மடையன் குனிய குனிய குட்டறவன் மடையன்
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்
குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
குரங்கின் கை பூமாலை போல்
குரைக்கிற நாய் கடிக்காது
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
கேக்கிறவன் கேனப்பயல் என்றால் சுண்டெலியும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்
கோட்டுக்கு போறியா கேட்டுக்கு போறியா
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது
கோழி மேச்சாலும் கோரணமேந்தில(government) மேய்க்கணும்
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்
கையில காசு வாயில தோசை
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு,நெய்க்கு அலைந்தால் போல் ்

சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல
சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்
சாது மிரண்டால் காடு கொள்ளாது
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்
சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது
சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

தடியெடுத்தவன் தண்டக்காரன்
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்
தவிச்ச முயலை அடிப்பது போல்
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன
தன் வினை தன்னைச் சுடும்
தனிமரம் தோப்பாகாது
தாய் இல்லாவிடின் தகப்பன் சித்தப்பன்
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்
தூக்குனங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல

நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை
நாய் வாலை நிமிர்த்த முடியாது
நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி
நாய்க்கேன் போர்த்தேங்காய்
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்
நிறைகுடம் தளும்பாது
நீந்த தெரிந்தவனுக்கு சமுத்திரமும் முளங்கால் அளவு

பச்சத்தண்ணியில் பலகாரம் சுடுவான்
பசி வந்தால் பத்தும் பறந்திடும்
படிப்பது சிவபுராணம் இடிப்பது சிவன் கோவில்
பண்றியோட சேந்த பசுவும் மலம் தின்னும்
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்
பல்லுப் போனால் சொல்லு போச்சு
பழகப் பழகப் பாலும் புளிக்கும்
பள்ளிக்கணக்கு புள்ளிக்குதவாது
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
பனை மரத்தடியில் பால் குடித்தது போல
பாம்பின் கால் பாம்பறியும்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்
பார்த்தால் பசு பாய்ந்தால் புலி
பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்
பிஞ்சிலே பழுத்தது விரைவில் வெம்பிவிடும்
பிந்திவந்த கொம்பு முன்பிருந்த செவியை மறைப்பது போல்
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்
புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா
புத்திமான் பலவான்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
புலிக்கு பிறந்தது பூனையாகாது
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமோ?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்
பூனைக்கு மணி கட்டுவது யார்?
பூவிற்றகாசு மணக்குமா?
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்
பேராசை பெருநட்டம்
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்
பொல்லுக்குடுத்து அடி வாங்கின கதை
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்
மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப் பாயும்
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்

யார் குத்தியும் அரிசி ஆனால் சரி
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

வழித் தேங்காய் எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்த்து போல்
வழு வழுத்த உறவை விட வலுவான பகையே மேலானது!
வாழ்க்கையை துலைத்து விட்டு வாழ்க்கையில் எதுவும் தேடாதே
வானத்தில் போன பூதத்தை ஏணி வைத்து அழைத்தது போல்
விரலுக்குத் தக்கதே வீக்கம்
விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சமா?
விளையும் பயிரை முளையிலே தெரியும்
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும்
வெளுத்ததெல்லாம் பாலல்ல
வேலியிலபோற ஓணானை வேட்டியில பிடிச்சு விட்ட கதை
வேண்டா பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
வேலிக்கு ஓணான் சாட்சி
வேலியே பயிரை மேய்வது போல்

திறன்மொழிகள்


🌹பழமொழி படித்திருப்பீர்கள் 🌹
🌹முதுமொழி படித்திருப்பீர்கள் 🌹
👉ஆனால் 👈
🌹திறன்(smart)மொழி படித்திருக்க மாட்டீர்கள் 🌹

1 . அகத்தின் அழகு status இல் தெரியும்.
2 . like இட்டவரை உள்ளளவும் நினை.
3 . இக்கரை மாட்டுக்கு அக்கரை google maps.
4 . அழுத பிள்ளை games விளையாடும்.
5 . block பன்னின பூனை chat இனை நாடாது.
6 . பல நாள் திருடன் cctv இல் அகப்படுவான.
7 . iphone apple சாப்பிட உதவாது.
8 . பழகப் பழக PUBG உம் விளங்கும்.
9 . ஓசி wifi உள்ள போதே download பன்னிக் கொள்.
10 . சீனா சென்றாலும் ஊர் roaming ஐ வைத்துக் கொள்.
11 . அன்பான சினேகிதனை wifi hotspot இல் அறியலாம்.
12 . இறக்கப் போனாலும் selfie எடுத்துட்டு போ.
13 . unlimited data என்றால் பிணமும் வாய் பிளக்கும்.
14 . சொறி பிடித்தவன் கையும் smartphone பிடித்தவன் கையும் சும்மா இருக்காது .
15 . comments மேல் comments அடித்தால் post உம் நிறையும்.
16 . 20's kids கு தெரியுமா 90's kids இன் அனுபவங்கள்.
17 . முற்பகல் post செய்யின் பிற்பகல் viral ஆகும்.
18 . i phone 11 pro கு கொட்டாவி விடாதே.
19 . 4G இல் download ஆகாதது 2G இல் download ஆகுமா?
20 . திக்கற்றவனுக்கு Google maps ஏ துணை.

 

மேல்  ⮝  TOP