email: vadamarachy@gmail.com

சார்பு தளங்கள்

Manjula's Kitchen

இந்திய உணவுகள்-ஆங்கிலம்
தென் இந்திய உணவுகள்
சமையல்-தமிழில்

 

 

 

 

ரவ்வா கேசரி

செய்முறை காணொளி-தமிழ்

பன்னீர்

செய்முறை காணொளி-ஆங்கிலம்

லெமன் சாதம்

செய்முறை காணொளி-தமிழ்

சமையல்

வடமராட்சி சுவையான உணவுக்கு பெயர்போன இடம். தட்டை வடை (பருத்தித்துறை வடை), ஓடக்கரை தட்டி கடைகளில் கிடைக்கும் வெள்ளை அப்பம், தோசை (கறி, சம்பல், தூளுடன்) வல்வெட்டித்துறையில் கிடைக்கும் புண்ணாக்கு, பயத்தமுத்து அப்பம் இன்னும் பல. ஐம்பது அறுபது களில் வாழ்தவர்களுக்கு அவற்றை நினைத்தாலே நாக்கில் நீர் ஊறும்.
வீடுகளில் தயாரிக்கும் உணவு ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும். எங்கள் பல கலைகள் அழிந்தது போல் சுவையான உணவு செய்யும் கலையும் அருகி வருகிறது.

எமது பாரமபரிய உணவுகளின் குறிப்புகளை சேமிக்கும் அதேவேளையில் புதிய உணவுக்குறிப்புகளையும் வெளியிட உள்ளோம். வாசகர்களின் பங்களிப்பு வரவேற்கதக்கது.

 

சமையல் குறிப்புகள்

இட்லி பொடி

இட்லி பொடியை பாண், இடியப்பம், தோசையுடன் சாப்பிடலாம். பொடியை நல்லெண்ணை, நெய், பட்டர் உடன் சேர்த்தும் சாப்பிடலாம். பல வாரங்களுக்கு கெடாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 50 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவாயான அளவு

செய்முறை:
  1. உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. இம்மூன்றையும் தனித்தனியாக அரைத்து, பின்னர் உப்பு, பெருங்காயம் சேரத்து கிளறி விட வேண்டும்.
  3. காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும்.
  • குறிப்பு
    தேவைப்பட்டவர்கள் தட்டி காயவைத்த உள்ளியை(பூண்டு) அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.
    பெருங்காயம்: இந்தியாவில் சமையலில் பெரிதும் பயன்படும். மருத்துவ குணம் கொண்டது.

 

பன்னீர்

பன்னீர் என்பது வீட்டில் செய்யப்படும் சீஸ் (COTTAGE CHEESE). பாலை திரளவைத்து பெறுவதுதான் பன்னீர். பன்னீர் கறி ஒரு விசேட சைவ டிஷ். சோறு, சப்பாத்தி, றொட்டி, பாண் உடன் சாப்பிடலாம். கறி சமைக்கும்போது கடைசியாக பன்னீரை போட்டு அதிகம் கிளறாமல் இறக்க வேண்டும். அல்லாவிடின் பன்னீர் உருதிவிடும்.

தேவையான பொருட்கள்:

பால் – 1 லீட்டர்
எலுமிச்சம்பழ சாறு – 30 மில்லி
நீர் (நகச்சூடு) – 60 மில்லி

செய்முறை:
  1. எலுமிச்சம்பழ சாற்றை 60 மில்லி நகச்சூடு நீரில் கலந்து வேறாக வைக்கவும்.
  2. கனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் பாலை கொதிக்கவிடவும். பால் அடிப்பிடிக்காவண்ணம் இடையிடையே கலக்கவும்.
  3. பால் கொதிக்க தொடங்க எலுமிச்சம்பழ சாற்றை படிப்படியாக சேர்த்து கலக்கவும். பால் திரண்டு வர வெப்பத்தை நிறுத்தவும்.
  4. பால் முழவதும் திரண்டபின் பெரிய வடியில் கண்ணறையுள்ள துணியை போட்டு அதில் வடிக்கவும்.
  5. துணியை கெட்டியாக பிடித்து பன்னீரை குளிர் நீரில் அலசி பன்னீரில் உள்ள புளிப்பை நீக்கவும்.
  6. பன்னீரில் உள்ள மேலதிக நீரை வெளியேற்ற பன்னீரை துணியால் சுற்றி தட்டையாக்கி அதன்மேல் கனமான சட்டியை பாரமேற்றி ஒரு மணி நேரம் வைக்கவும்.
  7. அதன் பின் துண்யோடு குளிர் சாதனப்பெட்டில் வைத்தால் பன்னீர் மேலும் கெட்டியாகும்.

 

லெமன் சாதம்

பன்னீர் என்பது வீட்டில் செய்யப்படும் சீஸ் (COTTAGE CHEESE). பாலை திரளவைத்து பெறுவதுதான் பன்னீர். பன்னீர் கறி ஒரு விசேட சைவ டிஷ். சோறு, சப்பாத்தி, றொட்டி, பாண் உடன் சாப்பிடலாம். கறி சமைக்கும்போது கடைசியாக பன்னீரை போட்டு அதிகம் கிளறாமல் இறக்க வேண்டும். அல்லாவிடின் பன்னீர் உருதிவிடும்.

தேவையான பொருட்கள்:

சாதம் 1 கப் (குழையாமல் உதிரியாக இருக்கவேண்டும்)
எண்ணை 2 மேசைக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
மஞ்சள் 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
பச்சை மிளகாய் 1 (நான்காக கீறியது)
கறிவேப்பிலை 15
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
கடலை பருப்பு 1 தேக்கரண்டி (30 நிமிடம் ஊற வைத்த்து)
வறுத்த கச்சான் 1 மேசைக்கரண்டி
உப்பு 1 தேக்கரண்டி தேவைக்கேற்ப
எலுமிச்சம்பழ சாறு 1 மேசைக்கரண்டி

செய்முறை:
சோறு
  1. எலுமிச்சம்பழ சாற்றை சோற்றில் சேர்க்கவும். உப்பையும் சேர்க்கவும்
  2. நன்றாக சேர்த்து கிளறி வேறாக வைக்கவும்.
தாளித்தல்
  1. எண்ணைய் தாச்சியில் ஊற்றி மிதமான வெப்பத்தில் சுட வைக்கவும். கச்சானை 2 நிமிடம் பொன்நிறமாகும் வரை தாளிக்கவும்.
  2. கச்சானை எடுத்து வேறாக வைக்கவும்.
  3. அதே எண்ணையில் கடுகை தாளிக்கவும். கடுகு வெடித்தபின் சிவப்பு, பச்சை மிளகாயை கால் நிமிடம் தாளிக்கவும்
  4. உளுத்தம் பருப்பு, கடலைபருப்பை சேர்த்து 1 நிமிடம் பொன்நிறமாகும் வரை தாளிக்கவும். கறிவேப்பிலையை ககால் நிமிடம் தாளிக்கவும்.
  5. மஞ்சளை சேர்த்து நன்றாக சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து எடுக்கவும்.
கிளறல்
  1. சோற்றில் ஒரு பகுதியை எடுத்து தாளித்த பொருட்களுடன் நன்றாக கிளறவும்.
  2. கிளறிய கலவை, கச்சானை மிகுதி சோற்றுடன் நன்றாக கிளறவும்.
  3. லெமன் சாதம் தயார். சுவைத்துப்பாருங்கள்!

 

இட்லி

தேவையான பொருட்கள்:

பொன்னி புழுங்கல் அரிசி – 200 கிராம்
இட்லி அரிசி – 200 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
உப்பு – தேவாயான அளவு
குறிப்பு:
பொன்னி புழுங்கல், இட்லி அரிசி கிடைக்காவிடில் சம்பா, கோறா போன்ற அரிசி வகைகளை முயற்சிக்கவும்.

செய்முறை:
  1. அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 6 மணி நேரம் புளிக்க விடவும்.
  4. பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
  5. புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும்.
  • குறிப்பு
    தேவைப்பட்டவர்கள் தட்டி காயவைத்த உள்ளியை(பூண்டு) அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.
    பெருங்காயம்: இந்தியாவில் சமையலில் பெரிதும் பயன்படும். மருத்துவ குணம் கொண்டது.

 



TOP

 

RECIPIES

TANDOORI CHICKEN

INGREDIENTS:

600g chicken thigh fillets, cut in three
Juice of 1 lime
1 tablespoon Kashmiri chilli powder
1/2 teaspoon salt
1/2 cup thick Greek yoghurt
1 teaspoon garlic paste
1 teaspoon ginger paste
1 teaspoon garam masala
1/2 teaspoon dried fenugreek leaves
1 tablespoon sunflower oil

METHOD:
  1. For tandoori chicken, add all ingredients for marinade except oil to a bowl and mix well. Coat chicken with marinade and refrigerate for 3 hours or overnight.
  2. Preheat oven grill, and place chicken on the grill rack, with a tray underneath to collect the drippings.
  3. Grill for 8-10 minutes, brush with oil, turn chicken over and grill for another 4-5 minutes until the chicken is cooked.

 



TOP