உடல் பருமனானவரா?

நிறை   றா. கிலோ

உயரம் அங். செ.மீ

 மேலும் விபரங்களுக்கு 
 வடமராட்சி 

 

 

VADAMARACHCHI

அமெரிக்கர்கள் தோப்பு கரணமிடுவது ஏன்?   

நோக்கம் :நாமறிந்த தகவல்களை சமூகத்திற்கு அறியத்தருவதே. அறிந்த தகவல்களை மின்னஞ்சலில் அனுப்பலாம்

email: vadamarachy@gmail.com

இரத்த அழுத்தம்வடக்கில் USAID உதவி பெற்ற முதல் நிறுவனம்

USAID பிரதிநிதிகளுடன்
நிர்வாக இயக்குனர் பொறியியலாளர் சேந்தன்

ஐஸ் உற்பத்தி நிலையம்
KATKOVALAM ICE FACTORY

வடமராட்சியின் முக்கிய வளங்கள் கல்வி, விவசாயம், மீன் வளம். வடமாராட்சியில் பிடிக்கும் மீன், பெரும் பகுதி குடாநாட்டுக்கு வெளியே அனுப்பப்படுகிறது.
மீன் பதப்படுத்த ஐஸ் தேவை.

வடக்கில் இருந்த ஐஸ் உற்பத்திசாலைகள் எல்லாம் அழிந்துவிட்டன. மீன்பிடி தொழில் முழுவேகத்தில் மீள ஆரம்பித்தவுடன் உள்ளூர் ஐஸ் தேவையை கருத்தில் கொண்டு பொறியியலாளர் சேந்தன் ஐஸ் உற்பத்திசாலை ஒன்றை நிறுவினார். அதன் நாளாந்த உற்பத்தி 1 டன் இல் ஆரம்பித்து மூன்று வருடத்தில் நாளொன்றுக்கு 6 டன் ஆக அதிகரித்து உள்ளது.

அண்மையில் USAID வடக்கு அபிவிருத்திக்கு வழங்கிய நிதி உதவியை பெற்ற முதல் நிறுவனமாக இது அமைந்த்து. இந்த உற்பத்தி நிலையத்தின் உற்பத்தியை 20 டன் ஆல் அதிகரிக்கவே இந்த நிதி வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்கள் அமெரிக்க நிதி உதவி

 

 

 


SUPERBRAIN YOGA-
தோப்புக்கரணம்

வயோதிபர்களின் ஞாபகசக்தி கூடுவதாகவும், பாடசாலை குழந்தைகள் திறமைசாலிகள் ஆவதாகவும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மறுமலர்ச்சி அடைவதாகவும் அமெரிக்க மருத்துவர் ஒருவர், வலுவிழந்த குழந்தைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியை, மற்றும் நரம்பியல் நிபுணர் நம்புகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு காணொளியை பாருங்கள்.
தமிழில்           ஆங்கிலத்தில்

உறுப்புகளும் பயன்பாடும்

 

 

 

 

முதல் செயற்க்கை புற்தரை மைதானம் வல்வையில்

செயற்க்கை புற்தரை கால்பந்து மைதானம்
வல்வெட்டித்துறை

ஐந்து பேர் அணி கால்பந்தாட்டம்
5-A-SIDE FOOTBALL-VALVETTITURAI

ஒரு அணியில் ஐந்து வீர்ர்கள் உள்ளார்கள். வெளி நாடுகளில் இவ்வாட்டம் செயற்க்கை புல்லால் அமைந்த தரையில் விளையாடப்படும். விளையாட்டத்தின் ஓட்டம் தடையின்றி செல்வதற்க்கு ஏதுவாக உயரமான வலையால் அமைந்த வேலி எல்லைக்கோட்டில் அமைந்திருக்கும்.

இலங்கையில் முதன் முறையாக இவ்வகை மைதானத்தை வல்வெட்டித்துறையில் அறிமுகப்படுத்தியுள்ளார் வல்வையை சேர்ந்த முன்னாள் சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர்
சபா. இராசேந்திரன். இவர் சிதம்பரா கல்லூரி, ஹாட்லிக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணிகளை தலைமைதாங்கி உள்ளார்

சாதாரண கால் பந்தாட்டத்திற்க்கும் இதற்க்கும் விளையாட்டு விதிகளில் சில வித்தியாசங்கள் உண்டு.


மேலும் விபரங்கள் ஆங்கிலத்தில்
5-A-SIDE FOOTBALL


 வடமராட்சி தொடர்புடைய
இதர இணையதளங்கள்

Point Pedro Institute of Development
Valvettithurai Welfare Society UK
valvai.com
valvettithurai.org
Sivaratnam Valvettithurai
பொலிகை இணையம்
Thondaimanaru
Karaveddy Development Corporation

 

அறிவியல் -  மின்கலம்

IT -

COMPUTER கணணி்
UNICODE கணணி தமிழில்
SHORTCUT KEYS
WOED EXCEL

 

கண் வலுவிழந்தோருக்கு
வாழ்வகம்

ஆரோக்கிய வாழ்வு -

ஆரோக்கியம்
ஆரோக்கிய உணவு
உடல்பருமன்
கைமருந்து

மருத்துவ அறிவு -

உறுப்புகளும் பயன்பாடும்


 

அறிவியல் தகவல்களுக்கு

தினமும் பாவிக்கும் பொருள்களின் அறிவியல் தகவல்களை அறியத்தருவது. நவீன கருவிகளின் செயற்பாடுகளின் பற்றிய தகவல்களை அறியத்தருவது.

ஆதரவு தேவைபடுவோர்களுக்கு

உடல் ஊனமுற்றோர், பார்வை அற்றோர், பார்வை குறைந்தோர், காது கேளாதவர், தாய் தந்தை இழந்தோர், உதவி இல்லா வயோதிபர்களுக்கு பல அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன. இளைய வலுவிழந்தோர்கள் ஏனயோரைப்போல் வாழ வழி வகுக்கின்றன. இவற்றின் சேவைகள்,
இதர விபரங்கள் வெளி.யிடப்படும். .

மாணவர்களுக்கு

உங்கள் எதிர்கால திட்டம் என்ன என்ற கேள்விக்கு அநேக மாணவர்கள் பதில் பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு, தொழில் பட்டப்படிப்பு ஆகவே இருக்கும். பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காவிடில் என்ன செய்வீர்கள் என்று கேட்டால் அந்த நேரம் யோசிப்போம் என்ற பதிலே வரும். வாழ்க்கைக்கு நம்பிக்கை அவசியம். அதற்காக நம்பிக்கையிலே மாத்திரம் வாழ்க்கூடாது. இலங்கையில் பாடசாலையில் சேரும் 1000 மாணவர்களில் 2 மாணவர்களுக்கே பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கிறது.
இதர மாணவர்களுக்கு பணிவாய்ப்பு வழிகாட்டல் தேவை. சிலருக்கு இவ் வழிகாட்டல் ஆசிரியர், பெற்றோர், குடும்ப நண்பர்கள், மூத்த சகோதர்ர்கள் நண்பர்கள் மூலம் கிடைக்கிறது. அநேகமானோருக்கு உரிய நேரத்தில் இது கிடைப்பதில்லை. இக்குறையை தீர்பதற்கு பல்கலைக்கழகம் தவிர்ந்த இதர வழிகளை வெளியிடுகிறோம். இத்தகவல்களை சேகரித்து வெளியிட வாசகர் பங்களிப்பு அவசியம்.

கணனி அறிவு

கணனி அறிவு எல்லா மாணவர்க்கும் மிக அவசியம். MS WORD EXCEL இல் யாழ் மாணவர்கள் தரம் மிக்க்குறைவு. உங்கள் ஐயங்களை மின் அஞ்சல் மூலம் தெருவித்தால் தீர்க்க முயற்சிப்போம். எதிரகாலத்தில் TUTORIALS வெளியிடுவோம்.

தமிழ்-சமயம்

வடமராச்சி கோவில்கள், மற்றும் யாழ் பிரசித்த கோவில் திருவிழா நாட்களை வெளியிட உள்ளோம். விரதங்களை அநுட்டிக்கவும் திருவிழாக்களில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும். விரதம், சமய தினங்கள் நாட்காட்டி வடிவில் வெளியிடப்படும்.

தகவல்/சேவை நாடுபவர்களுக்கு

செயற்பாடு ரீதியாக திணைக்களங்களின் தொலைபேசி எண், விலாசம், செல்லும் வழி, பொறுப்பதிகாரியின் பெயர் வெளியிடப்படும். விசா பெறுமிடம், அரச்சார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா நிறுவனங்கள், தூதரங்கள் செயற்பாடுகள், தொலைபேசி எண், விலாசம், செல்லும் வழி, வெளி.டப்படும். பாவனை குறைந்த பொருட்களின் விற்பனையாளர்கள் விபரங்களும் வெளியிடப்படும்.

மருத்துவ சேவை நாடுபவர்களுக்கு

அரச, தனியார், மருத்துவமனைகள், மனநோய், புற்று நோய் போள்ற விசேட மருத்துவமனைகள், ஆங்கில, சித்த, ஆயுள்வேத, இயற்கை வைத்தியம், ஹோமியோபதி வைத்தியர்கள் பெயர்கள், விலாசம் வெளி.யிடப்படும்.

ஆரோக்கிய வாழ்விற்கு

ஆரோக்கியமாக இருக்க விருப்பமா என்ற கேள்விக்கு இல்லை யாரும் கூற மாட்டார்கள். ஆரோக்கிய வாழ்விற்கு கட்டுப்பாடு அவசியம். இதில்தான் எல்லாருக்கும் முரண்பாடு. வாழ்கையில் குடியையும், புகைத்தலையும் நிரந்தரமாக விட்டவர்கள் உள்ளார்கள். ஆரோக்கியமாக இருக்க என்னும் ஒரு முறை முயற்ச்சி செய்வோம் என முன்வருவோர்களுக்காக கீள்காணும் தகல்வகள் வெளியிடப்படும். உடற்பருமன், அப்பியாசமின்மை, நலமற்ற உணவுகள் ஆரோக்கியத்திற்க்கு கேடு செய்கின்றன.