email: vadamarachy@gmail.com
 வடமராட்சி 
உள்ளூர் தகவல், வழிகாட்டல், நல்அறிவு வெளியிடுவதே எம்பணி

× ÷ 

மின்கலம் - BATTERY

மின்கலத்தின் மூன்று முக்கிய பண்புகள் வருமாறு

அளவு
C, AA, AAA, PP3, சிறிய மின்கலன், பெரிய பேரூந்து மின்கலன்

மின்அழுத்தம் (V-VOLTAGE)
வீட்டு பாவனை பொருள்களில் 1.5V, வாகனங்களில் 12V/24V

கொள்ளளவு (aH-CAPACITY)
100 aH மின்கலன் 20 மணி நேரம் 5a மின்னோட்டம் வழங்கும்

மின்கலங்கள் இருவகைப்படும்.

1   சாதா மின்கலம் (DISPOSABLE BATTERY)

பாவித்து முடித்தபின் வீசப்படுபவை சாதா மின்கலம். ஆரம்பத்தில் மின் விளக்குகளில் பயன்படுத்தப்பட்டன். இப்பொழுது கைக்கடிகாரம், விளையாட்டுப்பொருள் (TOYS) என பல பொருள்களில் மின்கலங்கள் பாவிக்கப்படுகின்றன.

Batteries

அளவு - SIZE

மின்சாதனங்களை பொறுத்து அதில் பாவிக்கப்படும் மின்கலங்களின்அளவுகள் வேறுபடும்.

வானொலி, மின்விளக்குகளில்

D, C, AA ரக மின்கலங்களும்

தொலையியக்கிகளில் (REMOTE CONTROL)

AAA ரக மின்கலங்களும்

கைக்கடிகாரங்களில்

BUTTON மின்கலங்களும்

பாவிக்கப்படும்

2   மின்னேற்றக்கூடிய மின்கலம் (CHARGEABLE BATTERY)

இம்மின்கலங்கள் மின்னேற்றிய பின் மீண்டம் பாவிக்க முடியும். ஆரம்பத்தில் இந்த LEAD ACID மின்கலன்கள் மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டன். இவை அளவில் பெரியதாகவும் நிறை கூடியதாகவும் இருந்தன.

இப்பொழுது மின்விளக்கு, தொலைபேசி, CAMERA, என பல கருவிகளில் பாவிக்கப்படுகின்றன. புதிய வகை வேதியல் பொருளை அறிமுகப்படுத்தி மின்கலத்தின் அளவை சிறிதாக்க முடிந்தது.

Batteries

அளவு - SIZE

மின்சாதனங்களை பொறுத்து அதில் பாவிக்கப்படும் மின்கலங்களின்அளவுகள் வேறுபடும்.

வானொலி, TOYS, மின்விளக்குகளில்

D, C, AA ரக மின்கலங்களும்

CAMERA, கைத்தொலை பேசிகளில்)

தட்டை மின்கலங்களும்

வாகனங்கள், மின்கல வங்கி

பெரிய மின்கலங்களும்

பாவிக்கப்படும்

வேதியல் பொருள் - மின்னழுத்தம் - அளவு க்கு இடையே உள்ள தொடர்பு

சாதா மின்கலம் (DISPOSABLE BATTERY)

வேதியல் பொருள்
Zinc Carbon
Zinc Chloride (heavy duty)
Manganese Dioxide
Zinc, Silver Oxide
Lithium, Silver Dioxide

மின்னழுத்தம்
1.5 V
1.5 V
1.5 V
1.5 V
3.0 V

அளவு
D, C, AA, AAA, PP3
D, C, AA, AAA, PP3
S type / Button
S type / Button
D, C, AA, AAA, PP3

மின்னேற்றக்கூடிய மின்கலம் (CHARGEABLE BATTERY)

CHEMICAL
NiCd (Nickel Cadmium)
NiMH (Nickel Metal Hydride)
Li-ion (Lithium Ion)
Lead Axid
Lead Axid (deep cycle)
Lead Axid (sealed)
NiCd (Nickel Cadmium) unsealed
Li-ion (Lithium Ion) large

VOLTAGE
1.2 V
1.2 V
3.6 V
2.0 V
2.0 V
2.0 V
1.2 V
3.6 V

SIZE
D, C, AA, AAA, PP3
D, C, AA, AAA, PP3
D, C, AA, AAA, PP3
கார், வான், பேரூந்து
வேகம் குறைந்த மின்வண்டிகள்
மின் மிதிவண்டி, UPS
மின்கல வங்கி
மின் கார்

UPS - Uniteruted Power Supply          தடையிலா மின் வழங்கி

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும். கணணி பாவனை போது மின் தடைப்பட்டால் நீங்கள் செய்த வேலைகள் வீணாய் போவதுடன் கணணிக்கும் நல்லதன்று. அதை தவிரப்பதற்க்கு UPS பயன்படும்.
மின் தடை ஏற்படும் போது UPS இல் உள்ள மின்கலத்திலிருந்து எதிர் மின்மாற்றி (INVERTER) மூலம் தடையின்றி 230V மின் சக்தி பெறப்படும். பாவனை நேரம் UPS இல் உள்ள மின்கலத்தின் அளவை பொறுத்தது.

BATTERY BANK          மின்கல வங்கி
பல மின்னேனேற்றக்கூடிய மின்கலங்களை தொடுத்து வைத்திருப்தே மின்கல வங்கி. மின்வெட்டு நேரங்களிலும் கட்டாயம் இயங்க வேண்டிய செல்பேசி கோபுரங்கள், தானியங்கி தொலைபேசி பரிவர்த்னை அறைகள், தொடர்வண்டி கட்டுப்பாடு அறைகள் போன்றவற்றில் இவை பாவிக்கப்படுகின்றன. மின் சக்தி உள்ள பொழுது மின்கலங்கள் மின்னேற்றப்படும். மின்வெட்டு ஏற்பட்டால் மின்கலத்திலிருந்து எதிர் மின்மாற்றி (INVERTER) மூலம் தடையின்றி 230V மின் சக்தி வழங்கும். பல கணனிகள் பாவனையில் உள்ள அலுவலங்களிலும் இவை உண்டு.
மின்கல வங்கி
மின்னேனேற்றக்கூடிய மின்கலங்மின்கலங்கள் - RECHARGABLE BATTERIES,
மின்னேற்றி - CHARGER,
எதிர மின்மாற்றி - INVERTER ஐ
கொண்டிருக்கும்.

INVERTER          எதிர் மின்மாற்றி

பெரிய மின்கலங்களின் மின்னழுத்தம் 12V/24V. மின்கலங்கள் ஒரு திசை மின்னோட்டம் (DC) கொண்டவையாகும். பாவனைப்பொருள்கள் பலவும் 230V மின்னழுத்தம் கொண்ட மாறு திசை மின்னோட்டத்தில் (AC) இயங்குபவை ஆகும். எதிர் மின்மாற்றி 12V/24V மின்னழுத்தம் கொண்ட DC மின்னோட்டத்தை 230V மின்னழுத்தம் கொண்ட AC மின்னோட்டமாக மாற்றும்.

DEPTH OF DISCHARGE (DOD)          

காரில் பாவிக்கும் 100 aH மின்கலங்கத்தை எடுத்துக்கொள்வோம். அதன் கொள்ளவ்வு 100 aH ஆக இருந்தாலும் 50 aH மின்சாரத்தை மாத்திரமே வெளிக்கொணர முடியும். இந்த மின்கலங்கத்தின்
DOD 50% எனப்படும். கூடிய DOD கொண்ட மின்கலம் DEEP CYCLE மின்கலம் எனப்படும்.

மின்கலங்களும் அவற்றின் DOD வீதங்களும்

மின்கலம்
Lead Axid
Lead Axid (deep cycle)
Lead Axid (sealed)
NiCd (Nickel Cadmium) unsealed
Li-ion (Lithium Ion) large

DOD வீதம்
upto 50%
upto 80%
upto 50%
upto 100%
upto 100%

குறிப்பு
கார், வான், பேரூந்து
வேகம் குறைந்த மின்வண்டிகள்
மேசை மின்விளக்கு
மின்கல வங்கி
மின் கார்

 
 

மேல்  ⮝  TOP