HERITAGE FOOD - (பாரம்பரிய)மரபு உணவு

உணவு என்பது கலாச்சாரம் பண்பாடு சூழலுக்கு ஏற்ற மாதிரி இருந்தால் மட்டுமே நமது ஆரோக்கியமம் பாதுகாக்கபடும். அப்படிப்பட உணவுகளை தான் நம் முன்னோர்கள் வடிவமைத்துள்ளனர். இதுவே மரபு உணவு எனப்படும்.
இவை நாகரிகமற்றவை என்று எண்ணி பதப்படுத்திய, துரித உணவுகளுக்கு மாறி வருகிறோம். வருடக்கணக்கில் இவை பழுதடையா.
இதற்காகவும், ருசியை அதிகரிக்கவும் இரசாயன கலவைகள் சேர்க்கப்படுகின்றன. நாளடைவில் ஆரோக்கியம் கெட்டு பண விரயமும் ஏற்படும்.

உண்ணும் முறை

மரபு உணவு

மருத்துவ பயன்


உண்ணும் முறை

நாம் உண்ணும் முறை சரியானது தானா என்பு கேள்விக்குறியாக உள்ளது.
நீண்ட காலமாக பின்பற்றிய கீழ்காணும் சிலவற்றையாவது பின்பற்ற முயலுங்கள்.

●    பசித்தபின் புசித்தால் மட்டுமே நன்கு ஜீரணமாகும்.
●    உணவிற்க்கு முன், உண்ணும் போது, உண்டவுடன் நீர், பானம் அருந்துவது ஜீரணத்தை பாதிக்கும்.
●    ஏன் என்றால் செரிப்பு நொதிகள் செறிவு குறைந்து அதன் செயற்படும் வேகம் குறையும்.
●    சாப்பிடும் போது TV பார்த்தல், தொலை பேசி பேசுதல், வாசித்தல், கதைத்தல் கூடாது.
●    எல்லோரும் கூட இருந்து உணவுக்கு நன்றி கூறி உண்ண ஆரம்பிக்க வேண்டும்
●    பார்த்து, உணர்ந்து, பிசைந்து, சுவைத்து, அரைத்து மெல்ல மெல்ல உண்ண வேண்டும்.
●    உண்டவுடன், விரைவில் ஜரணிக்கும் பழங்களை சாப்பிட கூடாது. சாப்பிட 1 மணி நேரம் முன் சாப்பிடலாம்.
●    உண்டவுடன், குளிர் உணவுகளை சாப்பிட்டால் உடல் வெப்பம் தணிந்து ஜீரணத்தை பாதிக்கும்.
●    உண்டவுடன் குளித்தால் உடல் வெப்பம் தணிந்து ஜீரணத்தை பாதிக்கும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
      942
என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

மரபு உணவு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நீர், சூழல், சமூகம், விவசாயி நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்க பட்டதே மரபு உணவு ஆகும்.
பல் மடங்காகிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய உணவு உற்பத்தி பன்னாட்டு நிறுவனங்கள் வசமாகின. உற்பத்தியை பெருக்குவதே இவர்கள் நோக்கம்.
மரபணு மாற்றிய விதைகள், இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் பாவனை வரம்பு மீறியது. உற்பத்தி பெருகியது.
ஆனால் இதற்க்கு என்ன விலை கொடுத்தோம். நீர் நிலைகள், காற்று, சுற்று சூழல் மாசடைகிறது. மக்கள் உடல்நலம் பாதிப்படைகிறது.
"ENVIRONMENTAL and HEALTH IMPACTS of PESTICIDES and FERTILISERS and ways of minimizing them" by UN அறிக்கையில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வறிக்கையை
TO DOWNLOAD தரவிறக்கம் செய்ய

●    மரபு உணவு சத்து மிக்கவையும், நோய் தீர்க்கும் ஆற்றலும் கொண்டன ஆகும்.
●    சில அரிசி வகை, சிறு தானியம், சில மரக்கறி வகை, சில பழ வகை இதில் அடங்கும்.
●    உள்ளூர் உற்பத்திகளையும், அப்பருவத்தில் கிடைக்கும் மரக்கறி, பழங்களை பாவிக்க வேண்டும்.
●    வெகு சில விவசாயிகள் கரிம(organic) உரம், பூச்சி கொல்லிகளை பாவிக்க தொடங்கி உள்ளனர்.

மரபு உணவு என்றால் என்ன?

நன்றி. Samayam Tamil

மருத்துவ பயன்

மரபு உணவு நோய்களை எதிர்க்கும் ஆற்றலையும், கட்டுப்படுத்தவும், தீர்க்கவும் உதவும் நுண்ணியிரிகளை கொண்டவை.
இதை உணர்த்தும் வகையில் கீழே சில உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.

●    உணவு- நீராகாரம்/பழஞ்சோறு PROBIOTICS செறிந்தவை. குடலில் உள்ள அத்தனை பக்டீரியாவுக்கும் சிறந்த உணவாகிறது. இவை IRRITABLE BOWL SYNDROME போன்ற குடல் நோய்களை கட்டுப்படுத்தும்/குறைக்கும்.
●    தானியம்- வரகரிசி புரதசத்து, நார்சத்து, சிறிய கணிமங்கள் நிறைந்த்து. சக்கரை வியாதி, இரத்த கொதிப்பு, கொழுப்பு உள்ளோர், வாரத்திற்க்கு மூன்று முறை எடுப்பது நன்று. சாதாரண சாதம் போல் செய்யலாம்.
●    மரக்கறி- துவர்ப்பு சுவை கொண்ட வாழைப்பூ MENORRHAGIA பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டை கட்டுப்படுத்தும்.
●    பழங்கள்- பப்பாளி பெண்களின் கருப்பையை பெலப்படுத்தும். PERIODS ஐ ஒழுங்காக்கும். சர்க்கரை உண்ணக்கூடியது.
●    பூக்கள்- ஆவாரம்பூ தேநீர் சர்க்கரை நோயை கட்டுப்படுதிதவும், உடலில் உள்ள TOXIN ஐ குறைக்கவும் உதவும்.
●    விதைகளை- PEANUTS/நிலக்கடலை சர்க்கரை, இருதய நோயாளிகளுக்கு நல்லது. தினமும் 30 கிராம் எடுக்கலாம்

சிறுதானியம் - MILLETS

சிறுதானிய உற்பத்திக்கு அரிசி உற்பத்திக்கு வேண்டிய நீரில் கால் பங்கே போதும். இரசாயன உரமும் வேண்டியதில்லை.

வெண் சோளம் - Sorghum
கம்பு - Pearl millet
ராகி - Finger millet
வரகு - Kodo millet
தினை - Foxtail millet
சாமை - Little millet
குதிரவாளி - Barnyard millet
பனிவரகு - Proso Millet

எல்லாம சிறுதானியமும் நார்சத்து, புரதசத்து கொண்டவை. ராகியில் கலசியமும், குதிரைவிலியில் இரும்பு சத்தும், கம்பில் இரும்பு சத்தும் கல்சியமும், தினையில் BEETA CAROTINE னும் உண்டு. சிறிய கணிமங்கள் நிறைந்த வரகு சக்கரை வியாதி, இரத்த கொதிப்பு, கொழுப்பு உள்ளோருக்கு நல்லது.
நார்சத்து சர்க்கரை இரத்தத்தில் சேரும் வேகத்தை குறைக்கவும், ஜீரணத்ததை கூட்டி மலச்சிக்கலை தடுக்கவும் உதவும்.

●    இரும்பு சத்திற்க்கு கம்பங் கூழ்
●    கண்பாரவைக்கு தினை பொங்கல்.
●    இரத்த்த்தில் சர்க்கரை சேரும் வேகத்த்தை குறைக்க வரகு

குறிப்பு
தோல் நோய் உள்ளவர்கள் சிறு தானியத்தை தவிர்க்கவும். வெய்யில் காலங்களில் மற்றும் தைறொயிட் உள்ளவர்கள் சிற தானிய பாவனையை குறைக்கவும்.

உணவே மருந்து


திரு.கா.வைத்தீஸ்வரனின்
ஆரோக்கியத்தில் உணவின் பங்கு
எனும் புத்தகம் ஒரு சிறந்த கையேடு.

இலங்கையில் வெளியிடப்பட்ட இதனை பூபாலசிங்கம் புத்தக சாலையில் வாங்கலாம்.


●    உணவும் உடல் நலமும்
●    தவிர்க்க வெண்ழய உணவுப் பொருள்கள்
●    தண்ணீரும் மருந்தே
●    மருந்தாகும் உணவுப் பொருள்கள்
●    உணவு உண்ண வெண்ழய முறைகளாவன
மேற்காணும் கேள்விகளுக்கு பதிலழிக்கும் குறிப்பை
தரவிறக்கம் செய்ய

 

 

 

 

எந்த நோய்க்கு எந்த கீரை சாப்பிடலாம்

பசியின்மையை போக்கும் அகத்திக் கீரை
மலச்சிக்கலை தீர்க்க உதவும் முளைக் கீரை
தோல் நோய்களை தீர்க்கும் அரைக் கீரை
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் பருப்புக் கீரை
சிறுநீர் பிரச்சனையை போக்கும் சிறு கீரை
எலும்பு தேய்மானத்திற்க்கு சிறந்தது முருங்கைக் கீரை
ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் தூதுவளைக் கீரை
இரத்த சோகைக்கு தீர்வு தரும் (பசலை)பசளிக் கீரை
நீரழிவு நோய்க்கு சிறந்த் வெந்தயக் கீரை
மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை
குடல் புண்ணை ஆற்றிடும் மணித்தக்காளிக் கீரை
பார்வை கோளாறை நீக்கும் பொன்னாங்காணிக் கீரை
மஞ்சள் காமாலைக்கு சிறந்தது கரிசலாங்கண்ணிக் கீரை
ஞாபகமறதி போக்கும் வல்லாரைக் கீரை

தினமும் ஒரு கீரை உண்டு நலம் பெறுவோம்