LAVARIYA

நன்றி රස ගුණ පිරි හෙළ බොජුන්

பொருட்கள்

தேஙகாய் துருவல் 
சீனி 
இடியப்ப மா வெள்ளை 
ஏலக்காய் தூள்
உப்பு
நீர்

- 2 கப்
- 1 கப்
- 2 கப்
- 1 தே.க.
-
- 1 1/2 கப்

லவரியா - செய்முறை

0:30 தேவையான பொருள்கள் பற்றிய விளக்கம்

3:20 ஒரு பாத்திரத்தில் இடியப்ப மா, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அதன்பின் நீரை சிறிது சேர்த்து கிளறவும். இடியப்பம் புளியும் பதம் வரும் வரை மீண்டும் மீணடும் சிறிது சிறிதாக நீர் சேர்த்து கிளறி எடுக்கவும்.

5:45 வேறு பாத்திரத்தில் 1/3 கப் சீனி சேர்த்து அசுப்பில் சூடாக்கவும். சீளி உருக தொடங்கும். பாதி சீனி உருகியதும் கரண்டி பாவிக்காமல் பாத்திரத்தை அப்பமா சுழட்டுவது போல் சுழட்டி மிகுதியையும் கரைக்கவும்

7:00 சீனி முழுவதும் கரைந்ததும் கரண்டியால் கிளறி 3 மே.க. கொதிநீர் சேர்த்து பாணி பதம் வரை கிளறவும். 8:30 பாணி பரவலாக கொதிக்க தொடங்கியதும் மிகுதி சீனி சேர்த்து கரைந்து கொதிவரும்வரை கிளறவும்.

9:00 அடுப்பில் இருந்து இறக்கி தேங்காய் துருவலை பரவலாக தூவி நன்றாக கிளறவும். 9:30 அடுப்பை குறைத்து மீண்டும் பாத்திரத்தை அதில் வைத்து கிளறவும். 1 சிட்டிகை உப்பு, ஏலக்காய் தூள் பரவலாக தூவி கிளறவும். நன்றாக சேர்ந்ததும் அடுப்பை நிறுத்தி பாத்திரத்தை இறக்கவும்.

10:20

SWEET PONGAL 1200 ml

நன்றி Venkatesh Bath

பொருட்கள்

பச்சை அரிசி
பாசிப்பயறு
பால்
நீர்
வெல்லம்
நீர்
நெய்
கராம்பு
முந்திரி
ஏலக்காய் தூள்
ஜாதிக்காய்
உப்பு
நெய் 50%
நெய் 75%
நெய்
திராட்சை

- 1 கப்
- 1/4 கப்
- 1/2 கப்
- 4 கப்
- 2 கப்
- 1/3 கப்
- 3 மே.க
- 3
- 1/4 கப்
- 1 தே.க.
- 1 சிட்டிகை
- 1 சிட்டிகை
- 1 மே.க
- 1 மே.க
- 1 மே.க
- 2 மே.க

சர்க்கரை பொங்கல் - செய்முறை

2:00 ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசி, பாசிப்பயறு சேர்த்து நன்றாக கழுவி வடிக்கவும். அதில் 1 மே.க. நெய், 1/2 கப் பால், 4 கப் நீர் சேர்த்து 6 விசிலுக்கு குக்கரில் அவிய விடவும். அரிசி நன்கு குழைய வேண்டும்.

4:00 ஒரு தாச்சியை அடுப்பில் வைத்து 2 கப் வெல்லத்தை, 1/3 கப் நீரில் கரைத்து, வடிகட்டி மீண்டும் அதே தாச்சியில் இட்டு ஒரு கம்பி பதத்திற்க்கு காய்ச்சி இறக்கவும். மெது சூட்டில் 6 நிமிடம்.

7:20 வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 1/2 மே.க. நெய் விட்டு சூடாகியதும் 3 கராம்பு பின் முந்திரி சேர்த்து சிறிது நிறம் மாறியதும் வேவைத்த அரிசி பருப்பு கலவையை சேர்க்கவும். பின் வெல்ல கரைசலை சேர்த்து கிளறி அவியவிடவும்.

9:00 கெட்டியாகும் வரை அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். இதில் 1 தே.க. ஏலக்காய் பொடி, 1 சிட்டிகை ஜாதிக்காய் பொடி, 1 சிட்டிகை உப்பு சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

11:40 50% அவிந்ததும் 1 மே.க. நெய் சேரத்து கிளறவும். 75% அவிந்ததும் மேலும் 1 மே.க. நெய் சேரத்து கிளறவும். இறுதியாக 1 மே.க. நெய் சேரத்து அடுப்பை நிறுத்தி இறக்கவும்.

13:20 சிறு தாச்சியை அடுப்பில் வைத்து 1 மே.க. நெய் விட்டு சூடாகியதும் அடுப்பை நிறுத்தி திராட்சையை சேர்த்து பொருமியதும் பொங்கலில் கொட்டி நன்கு கிளறிவிடவும்.

சிக்கின் பிரியாணி Palani Murugan

நன்றி சுவையோ சுவை JayaTv

பொருட்கள்

கறுவா
கராம்பு
ஏலக்காய்
வெங்காயம்
தக்காளி
இஞ்சி விழுது
பூண்டு விழுது
மிளகாய் தூள்
மல்லி தூள்
கரம் மசாலா
பச்சை மிளகாய் விழுது  
முந்திரி விழுது
பசுமதி அரிசி
சிக்கின்
எலுமிச்சை
தயிர்
மல்லி தழை
புதினா
நெய்
உப்பு

- 7
- 10
- 10
- 200 கிராம்
- 100 கிராம்
- 2 மே.க.
- 2 மே.க.
- 1 தே.க
- 1/2 தே.க
- 1/2 தே.க
- 3
- 2 மே.க.
- 500 கிராம்
- 500 கிராம்
- 1
- 50 மில்லி
- 2 கைபிடி
- 1 கைபிடி
- 1 மே.க.
- ருசிக்கேற்ப

சிக்கின் பிரியாணி - செய்முறை

2:00 ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கறுவா, கராம்பு, பிரியாணி இலை போட்டு பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து பிறவுண் ஆகும் வரை வதக்கவும்.

5:45 இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். ஏற்கனவே அரைத்துவைத்த பச்சை மிளகாய், முந்திரி கலவையை சேர்த்து அடிப்பிடிக்காமல் வதக்கவும். அடுத்து தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தயிர், புதினா, மல்லி தழை சேர்த்து கிளறவும். அடுத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலா சேர்த்து கிளறவும்.

7:10 அடுத்து ஏற்கனவே கழவி வைத்த சிக்கின் துண்டுகளை சேரத்து 1 நிமிடம் வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். அரிசி அளவின் 1 1/4 மடங்கு நீர் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் ஏற்கனவே அலசி சிறிது நேரம் ஊறவைத்த பின் வடிகட்டிய பசுமதி அரிசியை சேர்த்து கொதிக்கவிடவும். நீர் ஒரளவு வற்றியதும் அரை எலுமிச்சம் பழ சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும்.

10:20 நெய் சேர்த்து கிளறி அடுப்பில் தோசைகல் வைத்து அதன்மேல் பாத்திரத்தை வைத்து மூடி பாரம் ஏற்றி குறைந்த அடுப்பில் 20 நிமிடம் அவியவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். சிறிது நெய் விட்டு கிளறி பரிமாறவும்.

ஆட்டுக்கால் சுப் Chef Palani Murugan

நன்றி சுவையோ சுவை JayaTv

பொருட்கள்

ஆட்டுக்கால்
இஞ்சி
பூண்டு
மல்லி தூள்
மஞசள் தூள்
கறுவா;ஏலக்காய்;கராம்பு  
மிளகு
அரிசி
பெருஞ்சீரகம்; சீரகம்
கடலை எண்ணெய்
சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை
தக்காளி
உப்பு
மல்லி தழை

- 4 (300g)
- 1 + 1 அங்
- 10 + 10 பல்
- 1 தே.க
- 1/4 + 1/4 தே.க
- 2; 2; 2;
- 10
- 1 மே.க.
- 1/2; 1/2 தே.க
- தே. அளவு
- 10
- 1 கைபிடி
- 2
- ருசிக்கேற்ப
- 1 கைபிடி

ஆட்டுக்கால் சுப் - செய்முறை

1:00 காலை 4 துண்டுகளாக்கி, விழுதாக்கிய இஞ்சி பூண்டு, மல்லி தூள், மஞசள் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 3-5 விசிலுக்கு அவியவிடவும்.

1:30 ஒரு தட்டை பாத்திரத்தில் கறுவா, ஏலக்காய், கராம்பு, மிளகு, அரிசி, பெருஞ்சீரகம் சேர்த்து வெறுமனே வறுத்து ஆறியிபின் மிக்ஸியில் தூளாக்கவும்.

3:15 ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காயந்ததும் சின்ன வெங்காயம், இடித்த இஞ்சி, இடித்த பூண்டு சேரத்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

4:40 பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 5:40 பழுத்த தக்காளி சேர்த்து வதக்கவும். 6:10 மஞசள் தூள் சேர்த்து வதக்கவும்.

6:25 ஏற்கனவே வேவைத்த ஆட்டுக்கால் கலவை, சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின் மல்லி தழை, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

7:35 நன்கு கொதித்ததும் அரைத்த மசாலா தூள் சேர்த்து கலக்கி 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

நண்டு சுப் Chef Palani Murugan

நன்றி சுவையோ சுவை JayaTv

பொருட்கள்

நண்டு
தக்காளி
சின்ன வெங்காயம்  
இஞ்சி இடித்தது
பூண்டு இடித்தது
மஞசள் தூள்
மல்லி தூள்
மிளகாய் தூள்
பெருஞ்சீரக தூள்
மிளகு தூள்
தே. எண்ணெய்
தேங்காய் பால்
கறிவேப்பிலை
மல்லி தழை
உப்பு

- 400 கிராம்
- 1
- 10
- 1 அங்
- 10 பல்
- 1/4 தே.க
- 1/2 தே.க
- 1/2 தே.க
- 1/2 தே.க
- 1/4 தே.க
- 2 மே.க
- 200 மில்லி
- 1 கைபிடி
- 1 கைபிடி
- ருசிக்கேற்ப

நண்டு சுப் - செய்முறை

10:00 ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு கொதித்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

10:45 கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

11:10 நண்டு சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் மஞசள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், பெருஞ்சீரகம தூள் சேர்த்து கிளறவும்.

12:20 நீர், தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். கொதி வந்ததும் மல்லி தழை சேர்த்து கொதிக்கவிடவும்.

14:00 தேஙகாய் பால் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கி இறக்கவும்.

மதுரை கார சட்னி - Chef Deena

நன்றி Chef Deena’s Kitchen

பொருட்கள்

சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயம்  
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
இஞ்சி
பூண்டு
கறிவேப்பிலை
காஷ்மீரி மி தூள்
மல்லி தழை
புளி(விரும்பினால்)
கடுகு
உ பருப்பு
பெருங்காயம்
உப்பு
நல்லெண்ணெய்

- 200 கிராம்
- 2
- 6-8
- 10-12
- 25 கிராம்
- 15 பல்
- 3 கெட்டு
- 1/2 தே.க.
- 1/2 கைபிடி
- தே.அளவு
- தே.அளவு
- தே.அளவு
- 1/4 தே.க.
- ருசிக்கேற்ப
- 2 மே.க.

மதுரை கார சட்னி - செய்முறை

4:00 ஒரு தாச்சியில் எண்ணெய், விட்டு காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பாதியாக உடைத்தது, காய்ந்த மிளகாய்-5, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

4:50 வெங்காயம் 30 வீதம் வதங்கியதும், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சுருங்கியதும் உப்பு சேர்க்கவும். பின் விரும்பினால் புளி சேர்க்கலாம். போதும். பின் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

5:10 காஷ்மீரி மிளகாய் தூள் நிறம் கொடுப்பதற்க்காக சேர்க்கவும். மல்லி தழை சேர்த்து வதக்கி பெருங்காயம் சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.

5:50 வேறு பாத்திரத்திற்க்கு மாற்றி ஆறியதும் கெட்டி சட்னிக்கு சிறிது நீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

6:10 தண்ணிப்பதமான சட்னிக்கு மேலும் 2 பச்சை மிளகாய் அல்லது 2 காய்ந்த மிளகாய் கூடிய நீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

6:35 தாழிக்க: எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய்-5, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சட்னியில் கொட்டவும்.

குறிப்பு: பெரிய வெங்காயத்திற்க்கு பதில் சின்ன வெங்காயம் மாத்திரமே பாவித்தால் மேலும் சுவையாக இருக்கும்.

வாழைப்பழ ரொட்டி

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் 
சீனி
எண்ணெய்
தேஙகாய் துருவல் 
மைதா மா
நீர்

- 2
- 1/2 கப்
- 1 மே.க.
- 3/4 கப்
- 1 1/4 கப்
- தே.அளவு

செய்முறை

  • வாழைப்பழம், சீனி கட்டியில்லாமல் நன்றாக பிசையவும்.
  • தேஙகாய் துருவல், சிறிது எண்ணெய் சேர்த்து மீணடும் பிசையவும்.
  • மாவு சேர்த்து (தேவைப்படின் நீர் சேர்த்து)மீணடும் பிசையவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாகியதும் மாவை கையை நனைத்து தட்டி பரவவும்.
  • கரை ஓரம் எண்ணெய் பரவி ரொட்டியை பிரட்டி போடவும்.
  • பொன்னிறமானவுடன் எடுத்து சுளகில் போடவும்.

Milk Toffee

Ingredients

Condendensed milk
Sugar
Cashew
Ghee
Vanila
Cardimons (optional) 
Water

- 1 tin
- 340 g
- 10 nos
- 3 Tb sp
- 1 teasp
- 2 pods
- 1/4 cup

Method

  • Roast Cashew until golden brown in a pan
  • Once the Cashew has cooled down, crush into pieces and set aside.
  • (Finely grind Cardamom seeds and set aside.)
  • Apply a thin layer of butter to a flat dish.
  • On a fairly deep non-stick pan add milk and water
  • Slowly heat the pan and add sugar and stir continuously
  • Add Ghee and Vanilla and stir continuously
  • (Add Cardamom stir well.)
  • When the mixture starts to crystallize add chopped cashew and mix well.
  • Pour the mixture into the dish and flatten with a spatula or a spoon.
  • Leave it for some time and cut into squares or diamonds with a sharp knife
  • (wipe the knife with a cloth damped with cold water each time to help cutting easy)

கேசரி

தேவையான பொருட்கள்

ரவை
சீனி
நீர்
கேசரி தூள்  
நெய்
முந்திரி
ஏலக்காய்

- 1 கப்
- 1 கப்        1 1/2 கப்
- 3 கப்
- 2 சிட்டிகை
- 3 மே.க.
- 10 கிராம்
- 5 தூளாக்கியது

செய்முறை

  • பாத்திரத்தில் 1 கரண்டி நெய் விட்டு முந்திரி வறுத்து எடுக்கவும்.
  • அதே பாத்திரத்தில் ரவையை பொன் நிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
  • பின் சட்டியில் நீர் கேசரித்தூள் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அடுப்பை குறைத்து கொதித்த நீரில் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
  • ரவை அவிந்து நீர் வற்றியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி சீனியை பரவலாக தூவி கிளறவும்.
  • 2 கரண்டி நெய் சேர்த்து கிளறவும்..
  • பதமாகியவுடன் இறக்கி முந்திரி தூவவும்.
  • கேசரி தயார்.

புளிக்கஞ்சி

தேவையான பொருட்கள்

பச்சை அல்லது
புழுங்கல் அரிசி
மரவெள்ளி
பூசணி
பயத்தங்காய்
கீரை
பலாக்கொட்டை
பச்சை மிளகாய்
அரைத்த செத்தல்   
நீர்
உப்பு
தேஙகாய் பால்
புளி

- 1/2 கப்

- 1 துண்டு
- 1 துண்டு
- 1 கைபிடி
- 1 கைபிடி
- 10
- 3
- 3
-
- 1/2 தே.க.
- தே.அளவு
- தே.அளவு

செய்முறை

அரிசி, மரவெள்ளி, பூசணி, பயத்தங்காய், கீரை, பலாக்கொட்டை, பச்சை மிளகாய், அரைத்த செத்தல், நீர், உப்பு சேர்த்து அவியவிடவும்.
நன்கு அவிந்தபின் தேங்காய்பால், புளி சேரத்து கொதிக்கவைத்து இறக்கவும்
யாழ்ப்பாணத்து முறையில் புளிக்கஞ்சி
நள்றி: Yarl Samayal
புளிக்கஞ்சி Princy's authentic kitchen
நள்றி: Princy's authentic kitchen

முட்டை பால் கறி

தேவையான பொருட்கள்

அிவித்த முட்டை
வெங்காயம்(sliced)  
பச்சை மிளகாய்   
வெந்தயம்
பெருஞ்சீரகம்
உ கிழங்கு
கறிவேப்பிலை
கருவாடு
உப்பு
தேஙகாய் பால்
மஞ்சள்
தேசிக்காய்
வெந்தய தூள்
சோம்பு தூள்

- 2
- 2+1
- 3
- 1/4 தே.க.
- 1/2 தே.க.
- 1
- 1 கெட்டு
- 3 துண்டு
- 1/2 தே.க.
- 1/4 கப்.
- 1/4 தே.க.
- 1/2
- 1/4 தே.க.
- 1/4 தே.க.

செய்முறை

முட்டையை அவித்து கோதை நீக்கி பாதியாக்கி வைக்கவுவைக்கவும்ம். ஒரு வெங்காயத்தை தாழித்து வைக்கவும்,
வெங்காயம்-2, பச்சை மிளகாய், வெந்தயம், பெருஞசீரகம், உப்பு, கறிவேப்பிலை, உ கிளங்கு, நீர், கருவாடு சேர்த்து அவியவிடவும். அவிந்தபின் மஞ்சள்தூள், தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் எற்கனவே அவித்து வைத்த முட்டையை கறியில் ஊறவிடவும். மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சம் புளி சேர்க்கவும்.
ஏற்கனவே வறுத்து அரைத்து வைத்த வெந்தயம் பெருஞ்சீரகம் தூளை தாழித்த வெங்காயத்தை கறி மேலே தூவவும்.

Iced Coffee

Ingredients:
Coffee - 500 ml
Milk - 500 ml
Sugar - 50-75 g
Vanila -

சவ்வரிசி பாயாசம் - 4 பேர்

தேவையான பொருட்கள்

சவ்வரிசி
பால்
நீர்
சர்க்கரை
நெய்
ஏலக் காய் தூள்
முந்திரி
திராட்சை

- 1/2 கப்     1/2 கப்
- 2 கப்        1 1/2 கப்
- 2 கப்
- 3/4 கப்     3/4 கப்
- 1 தே.க.
- 6
- 2 மே.க.
- 2 மே.க.

செய்முறை

  • ஜவ்வரிசியை கழுவி நீரில் போட்டு மூன்று மணி நேரம் ஊற விடவும்.
  • பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.
  • அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து கண்ணாடி போல் இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
  • வேறு பாத்திரதில் பாலை கொதிக்கவடவும்.
  • சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும்.
  • இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து எடுக்கவும்.

 

சேமியா பாயாசம்

தேவையான பொருட்கள்

சேமியா
பால்
நீர்
சர்க்கரை
நெய்
ஏலக்காய் தூள் 
முந்திரி
திராட்சை

- 1 கப்
- 2 கப்
- 2 கப்
- 3/4
- 1 தே.க.
- 6
- 2 மே.க.
- 2 மே.க.

செய்முறை

  • ஒரு பாத்திரதில் நீரை கொதிக்கவடவும்.
  • வேறு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும்.
  • அதே பாத்திரத்தில் சேமியாவை வறுக்கவும்.
  • சேமியாவுடன் கொதித்த நீரை சேர்த்து சேமியாவை அவிய விடவும்.
  • சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவடவும்.
  • ஏற்கனவே வேறு பாத்திரதில் கொதிக்க வைத்த பாலை சேர்த்து கலக்கவும்.
  • வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

பனங்காய் பணியாரம்

தேவையான பொருட்கள்

பதனிடப்பட்ட பனம் கழி 
சீனி
மைதா மாவு (அவித்த)
மைதா மாவு
உப்பு
எண்ணெய் (பொரிக்க) 
1 கப் - 250 மில்லி

- 750 மில்லி
- 1 1/4 கப்
- 1 1/4 கப்
- 1 1/4 கப்
- 1 சிட்டிகை

செய்முறை

  • பனம் கழியை பாத்திரத்தில் ஊற்றவும், 50 மில்லி வெந்நீரை சுலாவி ஊற்றவும்.
  • மித வெப்பத்தில் கொதிக்க விடவும். கொதி வந்த்தும் (2 நிமிடத்தில்) அடுப்பை நிறுத்தவும்.
  • 15 நிமிடம் ஆறவிடவும். கரண்டியால் இடையிடையே கரைசலையை கலக்கவும்.
  • மா, சீனி, உப்பு கலவையில் பாணியை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
  • எண்ணெய் தாச்சியில் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்.
  • கை விரல்களை நனைப்பதற்க்கு ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வைக்கவும்.
  • மாவை நான்கு விரலால் எடுத்து உருட்டி கொதிக்கும் எண்ணெயில் போடவும்.
  • விரல்களை நீரில் கழிவி மீண்டும் மாவை நான்கு விரலால் எடுத்து எண்ணெயில் போடவும்.
  • தாச்சி நிறந்தவுடன் பொரியும் பணியாரங்களை புரட்டிக்கொண்டே இருக்கவும்.
  • பொரிந்தவுடன் (சுமார் 3 நிமிடம்) பணியாரத்தை எடுத்து ஆறுவதற்க்கு சுளகில் போடவும்.
  • சுவையான பனம் பணியாரம் தயார்!

பசளி வெள்ளைக்கறி

தேவையான பொருட்கள்

பசளி
பாசிப்பயறு
பச்சை மிளகாய்
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை
பால்
மஞசள் தூள்
பெருங்காயம்
உப்பு

- 100 கிராம்
- 1 கைபிடி
- 4
- 1 தே.க.
- 1 தே.க.
- 1 கெட்டு
- 1/4 கப்
- 1/2 தே.க.
- 1/4 தே.க.
- ருசிக்கேற்ப

செய்முறை

  • அடுப்பு 3
  • பசளியை துண்டுகளாக நறுக்கி கழவி வைக்கவும்.
  • வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • பச்சை மிளகாய் கீலமாக வெட்டி வைக்கவும்.
  • பாசிப்பயறை குக்கரில் 2 விசில் கொதிக்க விடவும்.
  • 0 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போட்டு மூடவும். கடுகு முழுவதும் வெடித்த பின் சீரகத்தை சேர்த்து வதக்கவும்.
  • 2 வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • 5 பசளி இலை, உப்பு சிறிது நீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
  • 13 பாசிப்பயறு மஞ்சள் தூள் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
  • 16 பால் சேர்த்து கொதித்ததும் பெருங்காயம் சேர்க்கவும்.
  • 19 உப்பு சரிபார்த்து இறக்கவும்.

சமன் மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

மீன்
உள்ளி
இஞ்சி
தக்காளி 
வெங்காயம்
சீரகம்
வெந்தயம்
கறித் தூள்
பால்
புளி
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை
மல்லி தளை

- 170 கிராம்
- 3 பல்
- 1 அங்குலம்
- 1 (8 துண்டாக)
- பாதி
- 1 தேக்கரண்டி
- சிறிதளவு
- 1 தேக்கரண்டி
- 200 மில்லி
- 1 மேசைக்கரண்டி
- 1 சிட்டிகை
- ருசிக்கேற்ப
- 2 தேக்கரண்டி
- 1 கெட்டு
- 1 கைபிடி

செய்முறை
மீனை சுத்தம் செய்து அலசி வைக்கவும்
புளியை கரைத்து வடித்து வைக்கவும்
வெங்காயம் சிறு துண்டுகளாக நறுக்கியது
இஞ்சி உள்ளியை விழுதாக அரைத்துக் வைக்கவும்

0   எண்ணெயை சூடாக்கி சீரகம் வெந்தயம் பொன்னிறமாக வறுக்கவும்
     வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
05 தக்காளி உப்பு சேர்த்து மூடி வதக்கவும்
10 தக்காளி வதங்கியதும் கறித் தூள் பால் உப்பு சேர்த்து மூடி வதக்கவும்
13 பின்பு புளிக்கரைசல் கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து உப்பு சரி பார்க்கவும்
15 மீன் துண்டுகளை போட்டு கொதிக்க விடவும்
     மீன் துண்டுகளை போட்ட பின் கரண்டியால் கீளறக் கூடாது
20 அடுப்பை அணைத்து கொத்த மல்லி தளையை பரவி விடவும்
நன்றி: அம்மா

சாம்பார்

தேவையான பொருட்கள்

குக்கரில் அவிக்க
      துவரம் பருப்பு
      உள்ளி
      மல்லித்தூள் 
      சீரகம்
சாம்பார்
      நல்லெண்ணெய்
      கடுகு
      வெநதயம்
      சீரகம்
      உள்ளி
      கறிவேப்பிலை
      செத்தல் மிளகாய்
      பெருங்காயம்
      சின்ன வெங்காயம்
      பச்சை மிளகாய்
      முருங்கைக்காய்
      கரட்
      கத்தரிக்காய்
      உப்பு ருசிக்கேற்ப
      மஞ்சள் தூள்
      சாம்பார் பொடி
      காஷ்மீரி மிளகாய் தூள்
      புளி(நெல்லிக்காய்)
      மில்லி தழை


- 1/2 கப்
- 1 பல்லு
- 1/4 தே.க.
- 1/2 தே.க.

- 2 மே.க.
- 1/2 தே.க.
- 1/4 தே.க.
- 1/2 தே.க.
- 1 பல்லு
- 1 கெட்டு
- 2
- 1 சிட்டிகை
- 10
- 1
- 1
- 1/2
- 2

- 1/2 தே.க.
- 2 மே.க.
- 2 தே.க.
- 1 தே.க.
- 1 கை பிடி

செய்முறை

  1. பருப்பை நன்றாக அலசவும்.
  2. குக்கரில் பருப்பு, உள்ளி, மல்லி தூள், சீரகம், நீர் 1 1/2 கப் சேர்த்து 4 விசிலுக்கு அவியவிடவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாகியதும் கடு சேர்த்து வெடித்த்தும் வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாழிக்கவும்.
  4. பின் வெங்காயம் சேர்த்து தாழிக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து தாழிக்கவும். பின் தக்காளி சேர்த்து தாழிக்கவும்.
  5. வதங்கியதும், முருங்கைக்காய். கரட், கத்தரிக்காய், உப்பு, சாம்பார் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  6. நீர் சேர்த்து கலக்கி 10 நிமிடம் மூடி கொதிக்கவிடவும்.
  7. புளி சேர்த்து 5 நிமிடம் திறந்தபடி கொதிக்கவிடவும்.
  8. அவித்த பருப்பை மசித்து சாம்பாரில் சேர்த்து உப்பு சரிபார்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
  9. மல்லி தழை சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.

 

திடீர் தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

அரைக்க
      தேங்காய் துருவல்
      வறுத்த வேர்கடலை
      மிளகாய் தூள்
      உப்பு ருசிக்கேற்ப
தாளிக்க
      கடுகு
      பெருங்காயம்
      கறிவேப்பிலை


- 1 கை
- 1 கை
- 1/2 - 1 தே.க.


- 1/2 தே.க.
- 1 சிட்டிகை
- 1 கெட்டு

செய்முறை

  1. தேங்காய் துருவல், வறுத்த வேர்கடலை, காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு, நீர் சேர்த்து மிக்ஸியில் நீர் பதத்திற்க்கு அரைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய்விட்டு சூடாகியதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சட்னி மேல் பரவவும்.
  3. சுவையான தேங்காய் சட்னி தயார்

சிவப்பு தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

அரைக்க
      தேங்காய் துருவல்
      வறுத்த பொட்டு
      கடலை (விரும்பினால்) 
      செத்தல் மிளகாய்
      வெங்காயம்
      புளி(நெல்லிக்காய்)
      உப்பு ருசிக்கேற்ப
தாளிக்க
      செத்தல் மிளகாய்
      கடுகு
      உளுத்தம் பருப்பு
      சின்ன வெங்காயம்
      கறிவேப்பிலை


- 1 கப்

- 2 மே.க.
- 5
- 1/4
- அளவு


- 1
- 1 தே.க.
- 1 தே.க.
- 5
- 1 கெட்டு

செய்முறை

  1. செத்தல் மிளகாயை எண்ணையில் பொரித்து எடுத்து அரைக்கவும்
  2. அதனுடன் (பொட்டுக்கடலை), வெங்காயம், தேங்காய் துருவல், புளி, நீர், உப்பு சேர்த்து மிக்ஸியில் குறைந்த வேகத்தில் சொர சொரப்பாக அரைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய்விட்டு சூடாகியதும் மிளகாயை பிய்த்து போடவும்.
  4. அத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு, SLICED சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து சட்னி மேல் பரவவும்.
  5. சுவையான சிவப்பு சட்னி தயார்

வெள்ளை தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

அரைக்க
      தேங்காய் துருவல்
      வறுத்த பொட்டு
      கடலை (விரும்பினால்) 
      பச்சை மிளகாய்
      இஜ்சி
      உப்பு ருசிக்கேற்ப

தாளிக்க
      செத்தல் மிளகாய்
      கடுகு
      உளுத்தம் பருப்பு
      சின்ன வெங்காயம்
      கறிவேப்பிலை


- 1 கப்

- 2 மே.க.
- 5
- 1 inch
-


- 1
- 1 தே.க.
- 1 தே.க.
- 5
- 1 கெட்டு

செய்முறை

  • மிக்ஸியில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஜ்சி (சிறு துண்டுகள்), நீர், உப்பு சேர்த்து குறைந்த வேகத்தில் சொர சொரப்பாக அரைக்கவும்.
  • கடாயில் எண்ணெய்விட்டு சூடாகியதும் மிளகாயை பிய்த்து போடவும்.
  • அத்துடன் கடுகு, உளுத்தம் பருப்பு, sliced சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து சட்னி மேல் பரவவும்.
  • சுவையான வெள்ளை சட்னி தயார்

Pasta with white sauce

Serves 2
Ingredients
For White Sauce

Plain flour
Butter
Milk
White pepper
Salt

For Pasta
Pasta (penne)
Butter
Carrot finely grated
Cheddar cheese grated
Capsicum cut in small pieces 




- 35 g
- 35 g
- 600 ml
- 1/2 teasp
- 1/2 teasp


- 150 g
- 15 g
- 1
- 75 g
- 1

    Method

  1. Boil water in a pan. Add pasta and salt(1 teasp) to boiling water. Keep boiling for 15 minutes and drain.
  2. Melt the butter in a separate pan. Add carrot and cook for 5 minutes. Remove it.
  3. Add pasta and carrot (and frankfurter) to white sauce bring it to boil.
  4. Add grated cheese and keep cooking for about five to ten minutes.
  5. Pasta is ready to serve.

Teriyaki Chicken

Serves 4
Ingredients
Toasted sesame oil - 2 Tb sp
Skinless, boneless chicken thighs, cut in 4 - 6
Large garlic cloves, crushed - 2
Thumb-sized piece ginger, grated - 1
Runny honey - 50 g
Teriyaki sauce - 30 ml
Chilli flakes - 1 tsp
Sesame seeds , to serve - 1 Tb sp
Spring onions, shredded, to serve - 4
Capsicum cut in small pieces - 1
Corn flour - 1 Tb sp

    Method

  1. Brush the chicken pieces with corn flour
  2. Heat a non-stick pan on high heat then add oil.
  3. Add the chicken and fry for 7 mins keep turning over on medium heat.
  4. Add sauce and keep turning over till caramalised.
  5. Add chilli flakes, capsicum pieces, garlic and ginger and fry for 2 mins.
  6. Stir in the honey, and 100ml water.
  7. Bring to the boil and cook for 2 - 5 mins over a medium heat until the chicken is sticky and coated in a thick sauce.
  8. Scatter over the spring onions, and sesame seeds

PASTA Salmon Brocoli baked

Serves 4
Ingredients
For White Sauce

Plain flour
Butter
Milk
White pepper
Salt

For Pasta
Pasta (penne)
Broccoli, cut into large florets
Mascarpone
Sundried tomatoes (in olive oil)
Small capers (optional) rinsed
Anchovy fillets, halved (optional) 
Large fresh basil leaves, torn
Fresh skinless salmon fillets
Mature cheddar, finely grated




- 35 g
- 35 g
- 600 ml
- 1/2 teasp
- 1/2 teasp


- 250 g
- 300 g
- 100 g
- 8
- 2 Tbsp
- 8
- 10
- 4
- 50 g

    Method

  1. Boil water in a pan. Add pasta and salt(1 teasp) to boiling water. Keep boiling for 10 minutes.
  2. Add broccoli to boiling water. Boil for further 5 minutes and drain well.
  3. While the pasta is cooking prepare the white sauce.
  4. Remove the sauce from the heat and stir in the mascarpone, sun-dried tomatoes, capers (if using), anchovies (if using) and basil, then add the pasta and broccoli and season with pepper.
  5. Place the salmon pieces in a single layer on the base of the ovenproof dish(30 x 20 x 5 cm).
  6. Spread the broccoli mixture on top, then scatter with the grated cheddar.
  7. Bake for 30 minutes until the mixture is just starting to bubble round the edges and the mixture is pale golden

    Making white sauce

  1. Start warming the milk in a pan.
  2. Simultaneously melt the butter in a separate pan. After butter melts add flour and mix to a smooth paste using a hand whisk.
  3. Add little of the milk mix to a smooth paste without any lumps. Repeat this process till half the milk is added.
  4. Add white pepper and salt. Keep stirring well with whisk. Add rest of the milk in stages.
  5. Bring the sauce to boil stirring all the time until it thickens.
  6. Thanks. https://www.bbcgoodfood.com/recipes/italian-broccoli-salmon-bake

Butter CHicken

Ingredents
Chicken thigh fillets cut in 3
Juice of lime
Kashmiri chilli powder
Salt
Thick Greek yoghurt
Garlic paste
Ginger paste
Garam masala
Dried fenugreek leaves
Sunflower oil

Butter sauce
Sunflower oil
Brown onion, chopped
Ginger paste
Green chilli, finely chopped
Green cardamom pods, crushed 
Mace
Cashew paste
Vine ripened tomatoes, chopped
Tomato puree
Chicken stock
Salt
Honey
Garam masala
Kashmiri chilli powder
Dried fenugreek leaves
Unsalted butter
Freshe cream
Green chillies, fresh coriander and


- 600 g
- 1
- 1 Tb sp
- 1/2 teasp
- 1/2 cup
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 1/2 teasp


- 2 Tb sp
- 1
- 1 teasp
- 1/2
- 3
- 2 g
- 2 Tb sp
- 600 g
- 50 ml
- 1 cup
- 1/2 teasp
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 1 teasp
- 50 g
- 100 ml
cream for garnishing

    Method Tandoori Chicken

  1. For tandoori chicken, add all ingredients for marinade except oil to a bowl and mix well. Coat chicken with marinade and refrigerate for 3 hours or overnight.
  2. Preheat oven grill, and place chicken on the grill rack, with a tray underneath to collect the drippings. Grill for 8-10 minutes, brush with oil, turn chicken over and grill for another 4-5 minutes until the chicken is cooked. Keep aside.

    Method Butter Sauce

  1. For butter sauce, heat oil in a frying pan over medium heat, add onion and cook until translucent. Add ginger paste, green chillies, cardamom, mace and cashew paste and fry for a further 2 minutes.
  2. Add tomatoes, tomato puree, stock and salt and simmer, stirring, occasionally for 5 minutes. Remove from heat and set aside to cool.
  3. Once cool, blend to a puree to make a smooth sauce. Strain through a sieve.Return sauce to pan and cook over low heat. Add the honey, followed by the tandoori chicken and drippings. Stir and simmer for 3-4 minutes.
  4. Sprinkle over garam masala, Kashmiri chilli powder and dried fenugreek leaves. Add the butter and stir until it melts. Finally stir in cream and take off heat. Garnish with green chillies, fresh coriander and cream. Serve with rice or naan bread.

Lasagne with white sauce

Serves 5
Ingredents
For the ragu
Mince meat
Olive oil
Celery stick finely chopped
Carrot finely chopped
Medium onion finely chopped
Garlic finely chopped
Oregano, basil & fennel each
Red wine
Tomato puree
Can tomatoes roughly chopped 
Stock
Salt
Freshly ground black pepper

For the sauce
Plain flour
Butter
Milk
White pepper
Salt

For the Lasagne
Fresh lasagne pasta sheets
Ball mozzarella
Grated parmesan
Butter
Freshly ground black pepper




- 500 g
- 3 Tb sp
- 2
- 1
- 1
- 2
- 1 tea sp
- 50 ml
- 2 Tb sp
- 800 g
- 80 ml
- 2 teasp
- 2 teasp


- 50 g
- 50 g
- 1000 ml
- 1 tea sp
- 1 tea sp



- 200 g
- handful
- 1 Tb sp


    Method

  1. For the ragu, heat the olive oil in a frying pan over a low heat and fry the celery, carrots and onion for approximately 10 minutes, until softened and golden.
  2. Add the garlic and cook about 2 minutes. Stir in the tomato paste, oregano, basil and fennel and cook approximately 15 minutes.
  3. Add minced meat and cook until the liquid from the meat has been absorbed. (15 m)
  4. Pour approximately 30/50 ml of red wine and stir well. (5 m)
  5. Once wine has evaporated add tomatos and stock. Leave the mixture uncovered to cook slowly for two hours. Top up with more warm stock if necessary. Season with salt and freshly grounded black pepper to taste.
  6. Steps for making the white sauce is given at the end
  7. For the lasagne, blanch the pasta in salted boiling water for thee minutes.
  8. Spoon a third of the ragu into the bottom of the lasagne dish in a layer. Then place pasta strip over the meat. Spread a third of white sauce. Sprinkle freshly ground black pepper.
  9. Spoon a third of the ragu. Follow this with some of the mozzorarella and parmesan. Place the pasta strip. Spread a third of white sauce. Sprinkle freshly ground black pepper. Repeat this step once more. Dot knobs of butter over the surface. Cover the dish with double foil. Brush olive oil to the inside foil.
  10. Pre heat the oven to 200 deg C. Cook in the middle oven for 30-45 minutes. Remove the foil and sprinkle grated parmesan
  11. Place it back in the oven and cook nearly 15 minutes until golden-brown on top.
  12. Allow it to cool for 20 minutes before serving.

    Making white sauce

  1. Start warming the milk in a pan.
  2. Simultaneously melt the butter in a separate pan. After butter melts add flour and mix to a smooth paste using a hand whisk.
  3. Add little of the milk mix to a smooth paste without any lumps. Repeat this process till half the milk is added.
  4. Add white pepper and salt. Keep stirring well with whisk. Add rest of the milk in stages.
  5. Bring the sauce to boil stirring all the time until it thickens.
Top layer White sauce with blob of butter & sprinkled with pepper
Pasta
Mozzorarella and parmesan cheese
Meat
White sauce sprinkled with pepper
Pasta
Mozzorarella and parmesan cheese
Meat
White sauce sprinkled with pepper
Pasta
Bottom layer Meat

கறிவேப்பிலை சட்னி

நன்றி Gomathi's Kitchen

பொருட்கள்

உருட்டு உழுத்தம் பருப்பு 
தோலுடன் / தோல் நீக்கிய  
வேர்கடலை (Peanut)
(சேர்க்க விரும்பினால்)
கட்டிப் பெருங்காயம்
சின்ன வெங்காயம்
நறுக்கியது
பூண்டு நறுக்கியது
புளி
செத்தல் மிளகாய்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
தேங்காய் துருவல்
உப்பு
எண்ணெய்

- 1/4 கப்

- 2 மே.க.

- 1/2 தே.க.
- 10-15

- 2 பல்லு
- 3 கொட்டை
- 3
- 2
- 2 கப்
- 1/2 கப்
- 1/2 தே.க.
- 1/2 தே.க.

கறிவேப்பிலை சட்னி - செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாகியதும் உழுத்தம் பருப்பை போட்டு மிதமான தீயில் சிவந்து வரும் வரை வறுக்கவும்.
ஏற்கனவே வறுத்த வேர்கடலையை சேர்த்து வறுக்கவும்.
உழுத்தம் பருப்பையும் வேர்கடலையையும் வடித்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
கடாயில் கட்டி பெருங்காயத்தை வறுத்து அதையும் பருப்புடன் வைக்கவும்.
கடாயில் வெங்காயம், உள்ளி சேர்த்து வதங்கும் வரை வதக்கவும்.
புளியை பிய்த்து போடவும். செத்தல் மிளகாய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
வெந்ததும் இளசான கறிவேப்பிலையை வெதுவெதுப்பான நீரில் கழுவி வடித்து சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை நிறுத்தவும். கடாய் சூட்டிலே சிறிது நேரம் வதக்கவும். வதக்கியதை வேறு தட்டில் எடுத்து வைக்கவும்.
பருப்பு, வேர்கடலை, பெருங்காயத்தை மிக்ஸியில் இட்டு நீர் விடாமல் சொர சொரப்பாக அரைக்கவும்.
மற்ற தட்டில் உள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சட்னி பதமாக உண்ண விரும்பினல் நீர் சேர்த்து அரைக்கவும்.
தொக்கு பத்திற்க்கு கெட்டியாக அரைக்கவும். விரும்பினால் தாழிப்பு சேர்க்கலாம்.
சட்னி இட்லி, தோசை, சப்பாத்தியுடனும்
தொக்கு சுடு சாதத்துடன் நன்றாக இருக்கும்.

கொத்தமல்லி சட்னி

நன்றி Balaji's Kitchen

பொருட்கள்

கொத்த மல்லி காம்புடன் 
பச்சை மிளகாய்  
காய்ந்த மிளகாய்
வெங்காயம் SLICED
உள்ளி
இஞ்சி
உளுத்தம் பருப்பு
தேங்காய் துருவல்
கடுகு
உப்பு
எண்ணெய்

- 1 கைபிடி
- 2
- 2
- 2
- 6 பல்லு
- 1/4 inch
- 1+1/2 தே.க.
- 1/4 மூடி
- 1/2 தே.க.
- ருசிக்கேற்ப
- 2+1 தே.க.

கொத்தமல்லி சட்னி - செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடவும். பொன் நிறமாகியவுடன் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பச்சை மிளகாயை உடைத்து போடவும் உள்ளி சேர்த்து 1 1/2 நிமிடம் வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும். கொத்த மல்லி சேர்த்து அடுப்பை குறைத்து மிதமான தீயில் 1 1/2 நிமிடம் வதக்கி அடுப்பை நிறுத்தவும்.
நன்கு ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்க்கலாம்.
தாழிக்க: தாழிப்பு சட்டியில் 1 தே.க எண்ணெய் விட்டு காய்ந்ததும் 1/2 தே.க கடுகு சேர்த்து பாதி வெடித்ததும் அடுப்பில் இருந்து எடுத்து உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதங்கவிட்டு சட்னியில் ஊற்றவும்.

புதினா சட்னி

நன்றி Balaji's Kitchen

பொருட்கள்

புதினா இலை 
பச்சை மிளகாய்  
காய்ந்த மிளகாய்
இஞ்சி சிறுதுண்டுகளாக  
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
தேங்காய் துருவல்
கடுகு
உப்பு
எண்ணெய்

- 1 கைபிடி
- 3
- 2
- 1 inch
- 1 1/2 தே.க.
- 1 + 1/2தே.க.
- 1/2 மூடி
- 1/2 தே.க.
- ருசிக்கேற்ப
- 3 + 1 தே.க.

புதினா சட்னி - செய்முறை

ஒரு கடாயில் 3 தே.க. எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு சேர்க்கவும். பொரிய ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடவும். பொன் நிறமாகியவுடன் பச்சை மிளகாயை உடைத்து போடவும் கூடவே இஜ்சியும் சேர்த்து வதக்கவும். அடுப்பை குறைக்கவும்.
தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். சிறிது நேரத்தின்பின் அடுப்பை கூட்டி வதக்கவும்.
இப்போது ஏற்கனவே கழுவி வைத்த புதினா இலையை சேர்த்து வதக்கவும்.
(புழிப்பு தூக்கலாக விரும்பினால் சிறிது புளி வதக்கும் போது சேர்க்கலாம்)
ஆறியபின் மிக்ஸியில் இட்டு உப்பு சேர்க்கவும். சிறிது சிறிதாக நீர் சேர்த்து சட்னி பதம் வரும் வரை அரைக்கவும்
தாழிக்க: தாழிப்பு சட்டியில் 1 தே.க எண்ணெய் விட்டு காய்ந்ததும் 1/2 தே.க. கடுகு சேர்த்து பாதி வெடித்ததும் அடுப்பை அணைத்து 1/2 தே.க. உளுத்தம் பருப்பு, 2 காய்ந்த மிளகாய் போட்டு வதங்கவிட்டு சட்னியில் ஊற்றவும்.
சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, சுடு சாதத்துடன் நன்றாக இருக்கும்.

கறிவேப்பிலை பொடி

நன்றி கவிதா சமையல் அறை

பொருட்கள்

உருட்டு உழுத்தம் பருப்பு  
கடலை பருப்பு
கொத்தமல்லி விதை
சீரகம்
செத்தல் மிளகாய்
கறிவேப்பிலை
பெருங்காயம்
மஞ்சள்தூள்
உப்பு
எண்ணெய்

- 1/4 கப்
- 3 மே.க.
- 1 மே.க.
- 1 தே.க.
- 10
- 4 கப்
- 2 சிட்டிகை
- 1/2 தே.க.
- 1/2 தே.க.
- 1 மே.க.

கறிவேப்பிலை பொடி - செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய்விட்டு சூடாகியதும் உழுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும்.
சிறிது வறுபட்டதும் கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
மல்லி விதை, சீரகம், மிளகாய் சேர்த்து சிவந்து வாசம் வரும்வரை வறுக்கவும்.
அதிகம் முத்தாத கறிவேப்பிலையை கழுவி நீரை வடியவிட்டு உலர்த்தி அதையும் சேர்த்து மிதமான சூட்டில் நான்கு நிமிடம் வதங்கும் வரை வறுக்கவும்.
பெருங்காயம் சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தி ஆற விடவும்.
ஆறியபின் மஞ்சள், உப்பு சேர்த்து கிளறி மிக்ஸியில் சொரசொரப்பாக அரைக்கவும்.
எண்ணெயில் பருப்பை வறுத்தால் 20 நாள் வரை கெடாது.
எண்ணெய் விடாமல் வறுத்தால் 3 மாதம் கெடாது.
இட்லி, தோசை, சுடு சாதத்துடன் சாப்பிடலாம்.

சுண்டக்காய் குழம்பு

நன்றி Gomathi's Kitchen

பொருட்கள்

சுண்டைக்காய்
புளி (சிறு எலுமிச்சம்
கடுகு
வெந்தயம்
சின்ன வெங்காயம்   
பூண்டு (உள்ளி)
தக்காளி
கறித்தூள்
தேங்காய்பால்
நல்லெண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை

- 1 கப்
பழ அளவு)
- 1/2 தே.க.
- 1/4 கப்
- 25
- 20
- 1 கப்
- 2 தே.க.
- 1/2 கப்
- 2 மே.க.
- 3/8 தே.க.
- 1 கெட்டு

சுண்டக்காய் குழம்பு - செய்முறை

  1. புளியை 1 கப் சுடு நீரில் ஊறவாக்கவும்
  2. பச்சை சுண்டைக்காயை கல் உரலில் ஒரே ஒரு தட்டு தட்டி கறுக்காமல் இருக்க மோரில் போட்டு வைக்கவும்.
  3. வாணலியில் மிதமான தீயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் சேர்த்து பொன்நிறமாக வதங்கியதும், சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. பொன்நிறமாக மாறியதும் சுண்டைக்காயை சேர்த்து பாதி வேகும் அளவிற்க்கு வதக்கவும். நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி குழைந்ததும் கறித்தூள் சேர்த்து பச்சை வாசனை போய் எண்ணெய் திரைந்ததும் புளிக்கரைசல் சேர்க்கவும். மேலும் 3 கப் சுடுநீர் சேர்க்கவும்.
  6. உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டபின் தேங்காய்பால் சேர்த்து கிளறி மூடி அவிய விடவும். இடையிடையே கிளறி மேலும் 10 நிமிடம் கொதிக்க்விட்டு அடுப்பை அணைக்கவும்.
  7. சுவையான சுண்டக்காய் குழம்பு தயார்.
  8. பச்சை சுண்டக்காய் மருத்துவ குணம் கொண்டதால் அனைவருக்கும் ஏற்றது.

கத்தரிக்காய் வாழக்காய் முருங்கைக்காய் பால்கறி

நன்றி Princy's Authentic Kitchen

பொருட்கள்

கத்தரிக்காய்
முருங்கைக்காய்
வாழைக்காய்
வெங்காயம்
உள்ளி
கறிவேப்பிலை
பச்சை மிளகாய்
மஞ்சள்
உப்பு
தண்ணிப் பால்
தேங்காய் கட்டி பால் 
மிளகு பொடி
எண்ணெய் தாழிக்க

- 1
- 1
- 1
- 1//2
- 3
- 1 கொத்து
- 4
- 1/4 தே.க.
- ருசிக்கேற்ப(1 தே.க.)
-1 கப்.
-2 மே.க.
-1 தே.க.
- 2 மே.கரண்டி

செய்முறை

ஒரு சட்டியில் கத்தரிக்காய் முருங்கைக்காய் வாழைக்காய், வெங்காயம் வெட்டி போடவும்.
பச்சை மிளகாய், உள்ளி வெட்டி போடவும். கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்க்கவும்.
தண்ணிப் பாலை விட்டு கிளறி மிதமான சூட்டில் 20 நிமிடம் மூடி அவியவிடவும்.
இடையிடையே கிளறி மூடிவிடவும். அவிந்தபின் கத்தரிக்காய், வாளக்காயை சாடையாக மசித்து விடவும்.
கட்டிப்பால், மிளகு தூள் சேர்த்து கிளறி 3 நிமிடம் அவியவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
விரும்பினால் தாழிப்பு சேர்க்கலாம்.

அவல் போஹா (2 பேர்)

நன்றி C.P.Metha

பொருட்கள்

அவல்
கச்சான்
பச்சை மிளகாய்
வெங்காயம்
கடுகு
கறிவேப்பிலை
மஞ்சள்
தேசிக்காய்
உப்பு
எண்ணெய் தாழிக்க

- 1 கப்
- 15
- 2
- 1/4 கப்
- 1/2 தே.க.
- 1 கொத்து
- 1/4 தே.க.
- 1
- 1/4 தே.க.
- தேவையான அளவு

செய்முறை

1. அவலை பெரிய வடியில் இட்டு கொதிநீரை அவல் மீது மெதுவாக ஊத்தி ஊறவிடவும்.
2. அவல் நன்றாக ஊறியபின் உப்பு, மஞ்சள் பரவலாக தூவி நன்றாக கிளறி வைக்கவும்.
3. உடைத்த கச்சானை தோலுடன் வறுத்து எடுத்து வைக்கவும்.
4. சட்டியில் எண்ணை விட்டு கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் வதக்கவும்.
5. வதங்கியபின் அவல், கச்சான் போட்டு நன்றாக கிளறவும்.
6. அவல் உலர்ந்தவுடன் தேசிக்காய் புளி சேர்த்து உப்பு, புளி சரிபார்த்து இறக்கவும்.
7. போஹா தயார்.

மீன் கூழ்

நன்றி Uduthurai Manvasam

பொருட்கள்

கலவாய் மீன்
 நண்டு
 இறால்
 கணவாய்
 பயத்தங்காய்
 பூசணிக்காய்
 மரவள்ளி கிழங்கு    
 கீரை
 பிலாக்கொட்டை
 உள்ளி
 குடியல் மா
 மஞ்சள் தூள்
 மிளகு
 நற் சீரகம்
 செத்தல் மிளகாய்
 புளி
 உப்பு

- 1 ½ kg
- 5
- 1 ½ kg
- 2 kg
- 1 கட்டு
- 1 துண்டு
- 1
- 1 பிடி
- 1 கப்
- 4 பூடு
- 200 g
- 3 tbsp
- 4 tbsp
- 3 tbsp
- 40
- 200 g
- 2 tbsp

செய்முறை

கலவாய் மீனுக்கு பதிலா திருக்கை மீன் கூட சேர்த்துக்கலாம் கூழுக்கு எப்பவும் முள் இல்லாத மீன் போடணும், ஒன்றில் நீங்க மீன் வெட்டும்போது முள் இல்லாமல் வெட்டி எடுத்து போடலாம் அல்லது மீனை தனியா மஞ்சளும் கொஞ்சம் உப்பு போட்டு அவித்து உடைத்து போட்டு கூழ் தயாராக கொஞ்சம் முன் கூட இந்த மீனை கடைசியா சேர்த்துக்கலாம்.
பழப்புளி கரைத்து வைக்கவும்.

ஒடியல் மாவுக்கு குளிர்ந்த நீர் சேர்த்து கரைத்து வைக்கவும். இந்த ஒடியல் மாவுக்கு மேலால் நீர் நிக்கிற மாதிரி கொஞ்சம் கூட நீர் விட்டு வைக்கவும். நீர் தெளிஞ்சபின் மேல இருக்குற தெளிஞ்ச நீரை ஊற்ற வேண்டும். இப்படி மூள்று நாலு முறை செய்தால் கயர்ப்பு தன்மை குறையும். புதிய மா என்றால் இதை செய்ய தேவை இல்லை.
200 கிராம் புளியை வென்நீரில் கரைத்து வைக்கவும்.

செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் கொதிக்கிற தண்ணீரில் பயித்தங்காய், பலாக் கொட்டை, மரவள்ளிக்கிழங்கு சேர்த்து அவிய விடுவும். கொதித்த பின் தான் இறால் கணவாயெல்லாம் சேர்க்க வேண்டும். இது நன்றாக வேகட்டும்.

அந்த நேரத்தில் 40 செத்தல் மிளகாயை கழுவி ஒரு மிக்ஸி கப்பில் எடுக்கவும். உறைப்புக்கு ஏற்ற மாதிரி மிளகாயை கூட்டி குறைக்கலாம். இதனுடன் மூன்று மேசை கரண்டி நற்சீரகம், நாலு பூடு உள்ளி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை அரவல் நொருவல் இல்லாமல் நல்ல பட்டு போல் அரைத்து எடுத்து வைக்கவும்.

மரக்கறி கொதிக்க ஆரம்பித்ததும் இதை கிளறி விடவும். அடுத்து மூன்று மேசை கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக்கவும். அடுத்து ஐந்து தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அடுத்து நண்டு, இறால், கணவாய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி அவிய விடவும்.
ஒடியல் மாவை தொடர்ந்து வடிகட்டி சுத்தபடுத்தவும்.

இறால், கணவாய், நண்டு எல்லாம் போட்டு அவிய விட்டு ஒரு 15 நிமிடம் ஆகிவிட்டது. இப்போது பூசணிக்காய் சேர்க்கவும். அடுத்து மிக்ஸியில் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுதையும் இதோட சேர்க்கவும். நன்றாக ஒருமுறை கிளறவும். இந்த மசாலா பேஸ்ட் போட்ட உடனே கூழ் நல்ல வாசமா இருக்கும். இப்ப இதை இன்னும் கொஞ்சம் அவிய விட வேண்டும்.
பூசணிக்காய், அரைத்த விழுது சேர்த்து மேலும் பத்து நிமிடம் அவிய விடவும். இப்ப நீங்க உப்பு சரியா இருக்குதா என்று பார்த்து தேவைப்படின் மேலும் உப்பு சேர்க்கலாம்.
அடுத்து மீன் சேர்க்கவும். கலவாய் மீனை வெட்டும்போது முள் இல்லாமல் வெட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால் மீனை அவித்து முள்ளை நீக்கி கடைசியா சேர்க்கலாம்.
கூழுக்கு மீன் சேர்த்த பின் இதை அப்படியே ஐந்து நிமிடம் நல்லாக கொதித்து அவிய விடவும். அதுக்கு பிறகு கீரை சேர்த்து. நன்கு கிளறி விடவும். அத்தோடு ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் புளியை இதில் சேர்க்கவும்.
கூழில் இந்த புளி சேர்த்தபின் மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விடுவும்.
அடுத்து ஏற்கனவே நான்கு முறை சுத்தப்படுத்தி வைத்திருக்கும் ஒடியியல் மாவை இதில் சேர்க்கவும். இந்த ஒடியல் மாவு சேர்த்தபின் தான் இந்த கூழ் கொஞ்சம் கெட்டியாகி, நன்றாக இருக்கும். இதை நன்றாக கிளறி விட்டுட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டபின் கூழ் தயார். அடுப்பை அணைத்து விடவும்.
ஏன் இந்த பூசணிக்காய் கடைசியில் சேர்ப்பது என்றால் அப்போது தான் பூசணிக்காய் எல்லாம் கரையாமல் நல்ல முழுசு முழுசா இருக்கும். மீன்களும் அதே மாதிரிதான் கரையாமல் சலப்பு சலுப்பா இருக்கும். கூழ் சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த மீன் கூழ் தடிமன் காய்ச்சல் நேரத்தில் வாய்க்கு இதமாக இருக்கும். இந்த மீன் கூழ் மிகவும் சத்தான ஒன்று. இதில் மிளகு, நற்சீரகம், மஞ்சள் தூள், மரக்கறி, கீரை வகை எல்லாம் உள்ளது. ஆதலால் இந்த மீன் கூழ் ஒரு ஆரோக்கியமான ஒரு உணவு. நீங்களும் இந்த மீன் கூழை வீட்டில் செய்து பார்க்கவும்.